குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் நேற்று (நவம்பர் 19) உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் விளையாடின.


உலகக்கோப்பைத் தோல்வி:


விறுவிறுப்பாக தொடங்கிய இந்த போட்டியில் இந்திய அணி மூன்றாவது முறையாக உலகக் கோப்பையை கைப்பற்றும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருந்த சூழலில், ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது.


6 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்திய ஆஸ்திரேலிய அணி இந்த வெற்றியின் மூலம் 6-வது முறையாக உலகக் கோப்பையை வென்ற அணி என்ற பெருமையை பெற்றது. மேலும், இந்த வெற்றியை ஆஸ்திரேலிய அணி வீரர்கள் கொண்டாடி வருகின்றனர்.


முன்னதாக, சபர்மதி ஆற்றங்கரையில் ஆஸ்திரேலிய அணி வீரர்கள் உலகக் கோப்பையை வைத்து புகைப்படங்கள் எடுத்துக் கொண்டனர். மேலும், சபர்மதி ஆற்றில் கப்பலில் மகிழ்ச்சியுடன் சவாரியும் செய்தனர்.


டி 20 தொடர்:


இச்சூழலில் தான் தற்போது வரும் நவம்பர் 23 ஆம் தேதி நடக்கவிருக்கும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணியும் ஆஸ்திரேலிய அணியும் விளையாட உள்ளன. அதன்படி, கேரள மாநிலம் விசாகப்பட்டிணத்தில் தொடங்கும் இந்த டி20 தொடர் டிசம்பர் 3 ஆம் தேதி ஹைதராபாத்தில் முடிவடைகிறது.


கேப்டனாக


இதனிடையே இந்திய அணியின் சீனியர் வீரர்களான ரோகித் சர்மா, விராட் கோலி, கே.எல்.ராகுல் ஆகியோருக்கும் முகமது ஷமி, ஸ்ரேயாஸ், சுப்மன் கில், முகமது சிராஜ் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்படுள்ளது.


இந்த நிலையில் பிசிசிஐ தேர்வு குழு தலைவர் அஜித் அகார்கர் தலைமையிலான தேர்வு குழு உறுப்பினர்கள் கூட்டம் இன்று (நவம்பர் 20) குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் நடைபெற்றது. இதில், இந்த டி20 தொடருக்கான அணி தேர்வு குறித்து ஆலோசிக்கப்பட்டது.


இச்சூழலில், தற்போது ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாடும் இந்திய வீரர்களின் பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில், சூர்யகுமார் யாதவ், ருதுராஜ் , இஷான், ஜெய்ஸ்வால், திலக் வர்மா, ரிங்கு சிங், ஜிதேஷ் , சுந்தர், அக்சர், துபே, பிஷ்னோய், அர்ஷ்தீப், பிரசித், ஆவேஷ், முகேஷ் குமார் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். மேலும் இந்த தொடரில் சூர்யகுமார் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். 


மேலும் படிக்க: Rahul Dravid: முடிவுக்கு வருகிறது ராகுல் டிராவிட் பதவிக்காலம்! இந்தியாவின் அடுத்த பயிற்சியாளர் யார்?


மேலும் படிக்க: Virat Kohli: கோப்பை தான் மிஸ்ஸிங்! சாதனை எல்லாம் நம்ம பக்கம் தான்! கிங் கோலியின் மிரட்டலான சாதனை!