நியூசிலாந்து - ஆஸ்திரேலியா டெஸ்ட்:


பொதுவாக கிரிக்கெட் போட்டிகளில் நாம் நினைத்து கூடபார்க்க முடியாத பல சுவாரஸ்ய சம்பவங்கள் நடப்பது வழக்கம். அப்படி ஒரு சம்பவம் தான் கிரிக்கெட் உலகில் நடைபெற்றுள்ளது. நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான 2 போட்டிகள்கொண்ட டெஸ்ட் தொடர் இன்று தொடங்கியது. இதில், முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 383 ரன்களை குவித்தது. பின்னர் தங்களது இன்னிங்ஸை தொடங்கியது நியூசிலாந்து அணி. அதன்படி அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டாம் லாதம் மற்றும் வில் யங் களம் இறங்கினார்கள். இதில் டாம் லாதம் 5 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார்.


12 ஆண்டுகளுக்கு பிறகு ரன் அவுட்:


அப்போது கேன் வில்லியன்சன் களம் இறங்கினார்அப்போது ஆஸ்திரேலிய அணி வீரர் மிட்செல் வீசிய 5 வது ஓவரின் 5 வது பந்தை எதிர்கொண்டு சிங்கிள் எடுக்க முயற்சி செய்தார். அப்போது எதிர்புறத்தில் நின்ற வில் யங் பந்தை பார்த்துக்கொண்டே சற்று தடுமாறியபடி சிங்கள் எடுக்க ஓடினார். அப்போது சற்றும் எதிர்பாரா விதமாக கேன் வில்லியம்சன் மீது அவர் மோதினார். அப்போது மார்னஸ் லபுஸ்ஷேன் டைரக்ட் ஹிட் முறையில் ரன் அவுட்டாக்கினார். அதனால் டக் அவுட்டான கேன் வில்லியம்சன் 12 வருடங்கள் கழித்து டெஸ்ட் கிரிக்கெட்டில் ரன் அவுட்டாகி சென்றார்.





கடந்த 2010 ஆம் ஆண்டு இந்திய அணிக்கு எதிராக குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் அறிமுகமான இவர் கடைசியாக ஜிம்பாப்பேவுக்கு எதிராக நேப்பியரில் நடந்த போட்டியில் ரன் அவுட் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக இந்த போட்டியில் நியூசிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 179 ரன்கள் எடுத்தது. தற்போது இரண்டாவது இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி விளையாடி வருகிறது. அதன்படி, தங்களது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 32 ரன்கள் எடுத்துள்ளது.


மேலும் படிக்க: Virat Kohli IPL Record: IL-ல் ஒரு சீரிஸில் அதிக ரன்களை விளாசிய வீரர்! விராட் கோலியின் சாதனை!


மேலும் படிக்க: Watch Video: என்ன ஹீரோயிசமா? சர்பராஸ் கானை கண்டித்த ரோகித் சர்மா - நடந்தது இதுதான்!