கேரளாவின் கொச்சியில் இன்று ஐ.பி.எல். மினி ஏலம் நடைபெற உள்ளது. இந்த ஏலத்தில் பல்வேறு முக்கிய வீரர்களும் பங்கேற்க உள்ளதாலும், இதன் தாக்கம் அடுத்த ஐ.பி.எல்.லில் எதிரொலிக்கும் என்பதால் இந்த ஏலம் மீது மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.


எப்படி பார்ப்பது..? எப்போது பார்ப்பது...?


மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த இந்த ஐ.பி.எல். ஏலம் கொச்சியில் உள்ள பிரபல தனியார் நட்சத்திர சொகுசு ஹோட்டலில் நடைபெற உள்ளது. இன்று மதியம் 2.30 மணிக்கு தொடங்க உள்ள இந்த ஐ.பி.எல். மினி ஏலத்தை ரசிகர்களும் நேரில் கண்டுகளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த ஏலத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கில் கண்டுகளிக்கலாம். மேலும், ஜியோ சினிமாவும் ஐ.பி.எல். மினி ஏலத்தை நேரலையில் ஔிபரப்ப செய்ய உள்ளது.


இன்று நடைபெறும் இந்த ஏலத்தில் மொத்தம் 405  வீரர்கள் பங்கேற்க உள்ளனர். அவர்களில் 273 பேர் இந்திய வீரர்கள் ஆவார்கள். 132 வீரர்கள் வெளிநாட்டு வீரர்கள் ஆவர். அனைத்து அணிகளிலும் சேர்த்து 87 வீரர்களுக்கான காலியிடங்கள் உள்ளது. மொத்தமாக அனைத்து அணிகளும் சேர்த்து ரூபாய் 183.15 கோடியாக உள்ளது. இந்த ஏலம் சில அணிகளுக்கு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது. சில அணிகள் தங்களது வீரர்களை தக்கவைத்துக்கொண்டுள்ளது.


விலை விவரம்:


இந்த ஏலத்திலே சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு வீரர்களை அள்ளுவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளது. அந்த அணிக்கு 17 வீரர்களை ஏலத்தில் எடுக்க வாய்ப்புள்ளது. அவர்களிடம் 42.25 கோடி ரூபாய் கையிருப்பில் உள்ளது. இந்த ஏலத்திலே குறைந்த தொகையை கொண்ட அணியாக பங்கெடுக்க உள்ளது கொல்கத்தா. கொல்கத்தா அணியிடம் ரூபாய் 7.05 கோடி மட்டுமே கையிருப்பில் இருந்தாலும் அவர்களால் 14 வீரர்கள் வரை ஏலத்தில் எடுக்க முடியும். பெங்களூர் அணியிடம் ரூபாய் 8.75 கோடி மட்டுமே கையில் உள்ளது. அவர்கள் 9 வீரர்களை மட்டுமே ஏலத்தில் எடுக்க முடியும்.


பெரும்பாலான அணிகள் தங்களது முக்கிய வீரர்களை தக்கவைத்துக் கொண்டுள்ளனர். சீனியர்கள் வீரர்கள் பலரும் ஓய்வு பெற்றுவிட்டனர். இந்த ஏலத்தில் மிகவும் கவனிக்கப்படும் வீரர்களாக பென் ஸ்டோக்ஸ், மயங்க் அகர்வால், சாம்கரன் ஆகியோர் உள்ளனர். இன்று நடைபெறும் ஏலத்தில் இந்தியர்கள் யாரும் அடிப்படை விலையான ரூபாய் 2 கோடிக்கு நிர்ணயிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. வெளிநாட்டு வீரர்கள் மட்டுமே ரூபாய் 2 கோடி அடிப்படை விலைக்கு விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் படிக்க: IPL 2023 Auction Live: இன்று தொடங்குகிறது ஐபிஎல் மினி ஏலம்: நேரம், இடம் விவரம் உள்ளே..


மேலும் படிக்க: Goodbye 2022: இந்த ஆண்டு ரோகித் சர்மா கீழ் இந்திய அணி எப்படி? ரோகித் சர்மா பேட்டிங் எப்படி.. ஒரு பார்வை!