ஐ.பி.எல் சீசன் 17:


உலகக் கோப்பை தொடருக்கு பின்னர் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தது ஐ.பி.எல் போட்டிகளுக்காகத்தான். அந்தவகையில் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மார்ச் 22 ஆம் தேதி ஐ.பி.எல் சீசன்17 தொடங்கியது. இதில் 5 போட்டிகள் முடிந்து இன்று (மார்ச் 25) 6 வது லீக் போட்டி நடைபெற்று வருகிறது.


இதில், ஃபாப் டூப்ளிசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் ஷிகர் தவான் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகள் விளையாடி வருகின்றன.


சாதனை செய்த விராட் கோலி:


இந்நிலையில் தான் இன்றைய போட்டியில் விராட் கோலி சாதனை ஒன்றை செய்து இருக்கிறார். அதாவது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் பந்து வீச்சாளர் முகமது சிராஜ் வீசிய இரண்டாவது ஓவரில் பஞ்சாப் வீரர் ஜானி பேர்ஸ்டோவ் அடித்த பந்தை விராட் கோலி கேட்ச் பிடித்தார். இந்த கேட்சை அவர் பிடித்ததன் மூலம் டி20 கிரிக்கெட் வரலாற்றில் அதிக கேட்சுகளை பிடித்த இந்த வீரர் என்ற பெருமையை விராட் கோலி பெற்றிருக்கிறார்.






அந்த வகையில், இதுவரை விராட் கோலி 174  கேட்சுகளை பிடித்துள்ளார். அவருக்கு அடுத்த இடத்தில் சுரேஷ் ரெய்னா இருக்கிறார்.  அதன்படி சுரேஷ் ரெய்னா இதுவரை டி20 கிரிக்கெட் வரலாற்றில் 172 கேட்சுகளை பிடித்துள்ளார். மூன்றாவது இடத்தில் இருப்பவர் ரோகித் சர்மா. ரோகித் சர்மா இதுவரை டி20 கிரிக்கெட்  போட்டிகளில் மொத்தமாக 167 கேட்சுகளை பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 


 


மேலும் படிக்க: IPL 2024 RCB vs PBKS: டாஸ் வென்ற ஆர்.சி.பி முதலில் பவுலிங்! இமாலய இலக்கை குவிக்குமா பஞ்சாப்?


 


மேலும் படிக்க: IPL 2024 Points Table: 5 போட்டிகளில் களம் கண்ட 10 அணிகள் - ஐபிஎல் புள்ளிப்பட்டியல் நிலவரம் என்ன?