ஐ.பி.எல் 2024:


இந்திய கிரிக்கெட் திருவிழாவான ஐபிஎல் தொடரின் 17வது சீசன் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. ஏற்கனவே 5 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ன. இந்த போட்டிகளில் எல்லாம் தங்களது ஹோம் மைதானங்களில் விளையாடிய அணிகள் தான் வெற்றி பெற்றிருக்கிறது. 


இந்நிலையில் இன்று நடைபெறும் போட்டியில் ஃபாப் டூப்ளிசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் ஷிகர் தவான் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகள் மோத உள்ளன.


பெங்களூரு - பஞ்சாப் மோதல்:


கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில், இரவு 7.30 மணிக்கு இப்போட்டி தொடங்குகிறது. சென்னை அணிக்கு எதிரான முதல் போட்டியில் ஆர்சிபி அணியை தோல்வியை சந்தித்துள்ளது. இதனால், இன்றைய போட்டியின் மூலம், நடப்பு தொடரில் வெற்றிக் கணக்கை தொடங்க தீவிரம் காட்டி வருகிறது. மறுபுறம் தனது முதல் போட்டியில் டெல்லி அணியை வீழ்த்திய உற்சாகத்தில் பஞ்சாப் அணி களமிறங்குகிறது.


டாஸ் வென்ற ஆர்.சி.பி:






 டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. அந்த வகையில் முதலில் பேட்டிங் செய்ய இருக்கிறது பஞ்சாப் கிங்ஸ் அணி.






 


 


வீரர்கள்:


ஆர்.சி.பி:


ஃபாஃப் டு பிளெசிஸ் (கேப்டன்),


விராட் கோலி,ரஜத் படிதார்,


கிளென் மேக்ஸ்வெல்,


கேமரூன் கிரீன்,


தினேஷ் கார்த்திக்,


அனுஜ் ராவத்,


அல்சாரி ஜோசப்,


மயங்க் தாகர்,


முகமது சிராஜ் ,


யாஷ் தயாள்


பஞ்சாப்:


ஷிகர் தவான் (கேப்டன்),  


ஜானி பேர்ஸ்டோவ்,


சிம்ரன் சிங்,


சாம் கர்ரன்,


ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்),


லியாம் லிவிங்ஸ்டோன்,


ஷஷாங்க் சிங்,


ஹர்ப்ரீத் ப்ரார்,


ஹர்ஷல் படேல்,


ககிசோ ரபாடா,


ராகுல் சாஹர்


மேலும் படிக்க:IPL 2024 Playoffs: நடப்பு ஐ.பி.எல்.லின் பிளே ஆஃப், இறுதிப்போட்டி எங்கே? வெளியான முக்கிய தகவல்!


 


மேலும் படிக்க:IPL 2024 Points Table: 5 போட்டிகளில் களம் கண்ட 10 அணிகள் - ஐபிஎல் புள்ளிப்பட்டியல் நிலவரம் என்ன?