இந்திய கிரிக்கெட் அணி:



உலகக் கோப்பை டெஸ்ட், ஆசிய கோப்பை,  ஒரு நாள் உலகக் கோப்பை என 2023 ஆம் ஆண்டு கிரிக்கெட் திருவிழாவே நடந்து முடிந்திருக்கிறது. அதோடு இந்திய அணி வெளிநாடுகளிலும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு சர்வதேச போட்டிகளில் விளையாடியது.  இச்சூழலில், நேற்று (ஜனவரி 1) உலகம் முழுவதும் புத்தாண்டு கொண்டாடப்பட்டது. இந்த 2024 ஆம் ஆண்டில் இந்திய கிரிக்கெட் அணி வெற்றிகளை குவிக்க வேண்டும் என்று ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.



இந்நிலையில் 2024 ஆம் ஆண்டில் இந்திய கிரிக்கெட் அணி விளையாடும் போட்டிகளில் முழு அட்டவணையை இங்கே காணலாம்:


இந்திய அணி விளையாடும் அட்டவணை:


தென்னாப்பிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஒரு போட்டியை விளையாடி முடித்துள்ளது. அதன்படி, இந்த ஆண்டில் இந்திய அணி விளையாடும் முதல் போட்டி வரும் ஜனவரி 3 ஆம் தேதி நடைபெற உள்ளது. 


இதனை அடுத்து தாய்நாடு திரும்பும் இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக விளையாட உள்ளது. உலகக் கோப்பை டி 20 தொடருக்கு தயாராகும் அடிப்படையில் நடைபெறும் இந்த போட்டி ஜனவரி 11, 14 மற்றும் 17 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. அதன்படி, இந்த போட்டிகள் மொஹாலி, இந்தூர் மற்றும் பெங்களூரு ஆகிய நகரங்களில் நடைபெறும்.



இதனைத் தொடர்ந்து இங்கிலாந்து அணிக்கு எதிராக சொந்த மண்ணில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாட உள்ளது. இந்த போட்டிகல் ஜனவரி 25 , பிப்ரவரி 2, பிப்ரவரி 15, பிப்ரவரி 23 மற்றும் மார்ச் 7 ஆகிய தேதிகள் நடைபெற உள்ளன. அதன்படி, ஹைதராபாத், விசாகப்பட்டிணம், ராஜ்கோட், ராஞ்சி மற்றும் தர்மசாலா ஆகிய நகரங்களில் நடைபெறும். 



பின்னர், ஐபிஎல் தொடரில் விளையாடும் இந்திய அணிவீரர்கள் அதனை தொடர்ந்து வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெறும் டி 20 உலகக் கோப்பையில் விளையாட உள்ளனர். இந்த போட்டிகள் ஜுன் 4 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை நடைபெறும்.


பின்னர், இலங்கை அணிக்கு எதிராக இந்தியாவில் நடைபெறும் 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட 2 தொடர்களில் இந்திய அணி விளையாடுகிறது.  


அதனை அடுத்து வங்கதேச அணிக்கு எதிராக டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது இந்திய அணி.


நியூசிலாந்து அணிக்கு எதிராக அக்டோபர் மாதம் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா விளையாடுகிறது. பின்னர், டிசம்பர் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செய்யும் இந்திய அணி அங்கு 5 போட்டிகள் கொண்ட பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது.


ஜுலைக்கு பின் நடைபெற உள்ள தொடர்களின் முழு அட்டவணை பின்னர் வெளியாகும் என்பது கவனிக்கத்தக்கது.


மேலும் படிக்க: Sunil Gavaskar: டெஸ்ட் போட்டியில் சுப்மன்கில் தடுமாறுவதை தடுப்பது எப்படி? ஜாம்பவான் கவாஸ்கர் தரும் அட்வைஸ்!


 


மேலும் படிக்க: Mohammed Shami: ஒருநாள் உலகக் கோப்பை தொடர்! நாட்டிற்காக முகமது ஷமி செய்த செயல் - வெளியான முக்கிய தகவல்!