Tamil Thalaivas: தொடர் தோல்வி! மீண்டு வரும் முயற்சியில் தமிழ் தலைவாஸ் - அடுத்து யாருடன் மோதல்?

ப்ரோ கபடி லீக் தொடரின் 10வது சீசனில் தமிழ் தலைவாஸ் அணி வரும் 7 ஆம் தேதி புனேரி பல்டன் அணியை எதிர்கொள்கிறது.

Continues below advertisement

 

புரோ கபடி லீக்:


10-வது புரோ கபடி லீக் திருவிழா கடந்த டிசம்பர் 2ம் தேதி தொடங்கி இந்தியாவில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த தொடரில் பெங்கால் வாரியர்ஸ், பெங்களூரு புல்ஸ், தபாங் டெல்லி, குஜராத் ஜெயன்ட்ஸ், அரியானா ஸ்டீலர்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், பாட்னா பைரேட்ஸ், புனேரி பால்டன், தமிழ் தலைவாஸ், தெலுங்கு டைட்டன்ஸ், யு மும்பா மற்றும் உ.பி. யோத்தாஸ் ஆகிய 12 அணிகள் களமாடி வருகின்றன. 

Continues below advertisement

ரசிகர்கள் எதிர்பார்ப்பு:

அதன்படி, நடப்பு சீசனில் தமிழ் தலைவாஸ் அணி தொடர் தோல்விகளை பெற்று வருகிறது. இதனிடையே அந்த அணி இனி வரும் போட்டிகளில்  சிறப்பாக விளையாட வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

முன்னதாக, இந்த லீக்கில் தமிழ்  தலைவாஸ் அணி இதுவரை 9 லீக் போட்டிகளில் விளையாடி உள்ளது. இதில் 2 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ள தமிழ் தலைவாஸ் அணி 7 போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது. மேலும், 13 புள்ளிகளுடன் அந்த அணி 11 வது இடத்தில் இருக்கிறது.

புனேரி பல்டன் அணியை எதிர்கொள்ளும் தமிழ் தலைவாஸ்:

இந்நிலையில், தொடர் தோல்விகளை சந்தித்து வந்தாலும் வெற்றி முனைப்புடன் புனேரி பல்டன் அணியை ஜனவரி 7 ஆம் தேதி எதிர்கொள்ள காத்திருக்கிறது தமிழ் தலைவாஸ்.

அதேநேரம் புனேரி பல்டன் அணி வலுவாக உள்ளது. இந்த லீக் போட்டிகளில் இதுவரை மொத்தம் 7 போட்டிகளை விளையாடி உள்ள அந்த அணி 1 தோல்வியை பெற்று 6 வெற்றிகளுடன் 31 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கிறது.

 

தமிழ் தலைவாஸ் அணி வீரர் நரேந்தர் ஹோஷியார் பெங்களுரு புல்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் சிறப்பாக விளையாடினார்.  அதன்படி 6 ரெய்டுகள் சென்ற அவர் அந்த அணிக்கு மொத்தம் 12 புள்ளிகளை பெற்று கொடுத்தார். அதேபோல் அஜிங்யா பவரும் சிறப்பாக விளையாடினார். 4 ரெய்டுகள் சென்ற அவர் 6 புள்ளிகளை பெற்று கொடுத்தார்.

இப்படி தங்களது திறமையை நல்ல முறையில் வெளிப்படுத்தினாலும் இனி வரும் போட்டிகளில் இன்னும் சிறப்பாக விளையாட வேண்டும். அப்படி அணி வீரர்கள் அடுத்து நடைபெற உள்ள போட்டியில் தங்களை மேம்படுத்திக் கொண்டு விளையாடி அணிக்கு வெற்றியை பெற்றுத்தருவார்கள் என்று ரசிகர்கள் விரும்புகின்றனர். 

 

 

மேலும் படிக்க: Pro Kabaddi 2023: போராடி தோற்ற தமிழ் தலைவாஸ்! பெங்களூரு புல்ஸ் த்ரில் வெற்றி!

 

மேலும் படிக்க: Lionel Messi: "10ம் நம்பர் ஜெர்சிக்கு ஓய்வு" ஜாம்பவான் மெஸ்ஸியை கவுரவப்படுத்திய அர்ஜெண்டினா கால்பந்து!

 

 

Continues below advertisement
Sponsored Links by Taboola