தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம்:


இந்திய கிரிக்கெட் அணி தற்போது தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மெற்கொண்டு வருகிறது. அதன்படி, சூர்யகுமார் யாதவ் தலைமையில் 3 டி20 போட்டிகள், கே.எல்.ராகுல் தலைமையில் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி முடித்துள்ளது. இதில், டி 20 போட்டிகள் சமநிலை பெற்றது.


ஒரு நாள் போட்டியை 2-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றி அசத்தியது. இச்சூழலில், இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ரோகித்சர்மா தலைமையிலான இந்திய அணி விளையாடி வருகிறது. அதன்படி, முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தென்னாப்பிரிக்க அணியிடம் 32 ரன்கள் வித்தியாசத்தில் இன்னிங்ஸ் தோல்வி அடைந்தது. இதனிடையே, இரு அணிகளும் மோதும் இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வரும் ஜனவரி 3 ஆம் தேதி நடைபெற உள்ளது. 


முன்னதாக, செஞ்சூரியன் நகரில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வீரர்கள் விராட் கோலி மற்றும் கே.எல்.ராகுல் இருவரை தவிர மற்ற வீரர்கள் எல்லாம் மோசமாகவே விளையாடியாத ரசிகர்கள் விமர்சனம் செய்தனர். முக்கியமாக இந்த தொடரின் இரண்டு இன்னிங்ஸ்களிலும் இந்திய அணி வீரர் மிக மோசமாக விளையாடினார்.  அதன்படி முதல் இன்னிங்ஸில் 2 ரன்களும், இரண்டாவது இன்னிங்ஸில் 26 ரன்களும் எடுத்தார்.


தடுமாறும் சுப்மன் கில்:


இந்நிலையில் ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் அதிரடியாக விளையாடுவதை போல டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆக்ரோசமாக விளையாட நினைப்பதே சுப்மன் கில் தடுமாறுவதற்கான காரணம் என்று சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார்.


இது தொடர்பாக இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் பேசுகையில், “ டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் சற்று ஆக்ரோசமாக விளையாடுகிறார் என்று நினைக்கிறேன். சுப்மன் கில்  ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் விளையாடுவதற்கும் டெஸ்ட் போட்டிகளில் பேட்டிங் செய்வதற்கும் சிறிய வித்தியாசம் இருக்கிறது.


ஏனெனில் வெள்ளைப் பந்தை விட சிவப்பு பந்து பிட்ச்சில் பட்டதும் காற்றில் சற்று வேகமாக நகரும். அதே போல வெள்ளைப் பந்தை விட அது சற்று எக்ஸ்ட்ராவாக பவுன்ஸ் ஆகும். இவற்றை அவர் மனதில் வைத்து விளையாட வேண்டும். தம்முடைய கேரியரை சிறப்பாக துவங்கிய கில் அதற்காக நிறைய பாராட்டுகளை பெற்றுள்ளார். எனவே அவர் மீண்டும் ஃபார்முக்கு திரும்புவார் என்று நாம் நம்புவோம். வருங்காலங்களில் இன்னும் கடினமாக உழைத்து அவர் சிறப்பாக செயல்படுவார்” என்று கூறியுள்ளார்.


 


மேலும் படிக்க: Tamil Thalaivas : கபடி மீதான ஈர்ப்பு இப்படித்தான் வந்தது... ஜாலியாக பேசிய தமிழ் தலைவாஸ் வீரர்கள்!


 


மேலும் படிக்க: Mohammed Shami: ஒருநாள் உலகக் கோப்பை தொடர்! நாட்டிற்காக முகமது ஷமி செய்த செயல் - வெளியான முக்கிய தகவல்!