இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று தொடரை வென்று அசத்தியது. இந்த தொடரில் இந்தியா மிகப்பெரிய வரலாற்று சாதனையை படைத்துள்ளது. கங்குலி கேப்டனாக பொறுப்பேற்ற பிறகு இந்திய கிரிக்கெட் அணியை கண்டு முன்னணி அணிகள் மிரண்டன. தோனி கேப்டனான பிறகு இந்திய அணிக்கு சேசிங் என்பது அல்வா சாப்பிடுவது போல மாறியது. தற்போது வரை இந்திய அணி ஒருநாள் போட்டிகளில் கிங் ஆப் சேசிங்காக உலா வருகிறது.


தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக ராஞ்சியில் நடைபெற்ற 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி களமிறங்கியபோது ஒரு சோதனையுடன் களமிறங்கியது. அதாவது, அந்த போட்டியில் களமிறங்கினால் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அதிக முறை தோற்ற அணி என்ற மோசமான சாதனையை படைக்கும் என்ற நிலையில் களமிறங்கியது. ஆனால், அந்த போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணி புதிய வரலாறு படைத்தது.




அந்த போட்டியில் பெற்ற வெற்றி மூலம் ஒருநாள் போட்டிகளில் சேசிங் செய்து முதன்முறையாக 300 வெற்றிகளை பெற்ற ஒரே அணி என்ற மகத்தான வரலாற்றை படைத்துள்ளது. 5 முறை உலக கோப்பையை வென்ற ஆஸ்திரேலிய அணி கூட ஒருநாள் கிரிக்கெட்டில் சேசிங்கின்போது 257 வெற்றிகளை மட்டுமே பெற்றுள்ளது. வெஸ்ட் இண்டீஸ் அணி 237 வெற்றிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது.


தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற கடைசி போட்டியிலும் இந்திய அணி அபார வெற்றி பெற்றதால் இந்திய அணி சேசிங்கின்போது 301 வெற்றிகளை குவித்து புதிய உச்சத்தில் உள்ளது. மேலும், நடப்பாண்டில் அதிக வெற்றிகளை பெற்ற அணி என்ற சாதனையை ஆஸ்திரேலிய அணியுடன் பகிர்ந்துள்ளது. ஆஸ்திரேலிய அணி இதற்கு முன்பு 2003ம் ஆண்டு அந்தாண்டில் அனைத்து வடிவத்திலும் ஆடிய 47 போட்டிகளில் 38 போட்டிகளில் வெற்றி பெற்று அசத்தியுள்ளது, தற்போது ஆஸ்திரேலியாவின் சாதனையை சமன் செய்துள்ள இந்திய அணி, நடப்பாண்டில் அந்த சாதனையை முறியடிப்பதற்கு ஏராளமான வாய்ப்புகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.





இந்திய அணி 2017ம் ஆண்டு அனைத்து வடிவ போட்டிகளிலும் சேர்த்து 37 போட்டிகளில் வெற்றி பெற்றிருந்தது. இதில் முதல் 5 இடங்களில் இந்தியாவும், ஆஸ்திரேலியாவும்தான் மாறி, மாறி உள்ளன.


மேலும் படிக்க : IND vs SA 3rd ODI: சொந்த மண்ணில் 12 ஆண்டுகளுக்கு பின் ஒருநாள் தொடரில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்திய இந்தியா...


மேலும் படிக்க : பிசிசிஐயின் அடுத்த தலைவராக உலகக் கோப்பை நாயகன் ரோஜர் பின்னி..? செயலாளராக மீண்டும் ஜெய்ஷா..?