உலக கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் உலகக் கோப்பை 2023 போட்டியானது வருகின்ற அக்டோபர் 5ம் தேதி தொடங்குகிறது. இந்த போட்டியில் இறுதிப் போட்டியின் நவம்பர் 19ம் தேதி நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறுகிறது. 


இந்திய அணி தனது முதல் போட்டியை ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அக்டோபர் 8ம் தேதி விளையாடுகிறது. இந்நிலையில், உலகக் கோப்பைக்கான இந்திய அணி நாளை அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படியான சூழ்நிலையில், ரோஹித் சர்மா தலைமையிலான உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் எந்தெந்த வீரர்கள் இடம் பெறுவார்கள் என்ற பட்டியலை இங்கே பார்க்கலாம். 


யார் யார் அணியில்..? 


உலகக் கோப்பைக்கான இந்திய அணியின் சுமார் 15 வீரர்களின் பெயர்கள் இறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், இதில், 2 பெயர்கள் குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. இது தவிர, ஆசிய கோப்பையில் விளையாடும் இந்திய அணியின் பெரும்பாலான வீரர்கள் உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பெறுவார்கள் என்றும் தெரிகிறது. கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி, ஜஸ்பிரித் பும்ரா, ஷ்ரேயாஸ் ஐயர், இஷான் கிஷன், முகமது ஷமி, முகமது சிராஜ், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ் போன்ற வீரர்களின் 13 பெயர்கள் கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டன.


மேலும் படிக்க: Asia Cup 2023 LIVE: அடுத்தடுத்து கேட்ச் வாய்ப்புகளை கோட்டைவிட்ட இந்திய வீரர்கள்; சுதாரித்து ஆடும் நேபாளம்..!


மீதமுள்ள 2 பெயர்கள் யார் யார் என்பதை அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வுக் குழு முடிவு எடுத்துவிட்டதாகவும், பிரசித் கிருஷ்ணா, திலக் வர்வா பெயர்கள் இடம்பெறவில்லை என தெரியவந்துள்ளது. இருப்பினும், உலகக் கோப்பை அணியில் பெரும்பாலும் ஆசிய கோப்பையில் விளையாடும் அதே வீரர்களே இருப்பார்கள். 


2023 ஒருநாள் உலகக் கோப்பைக்கான 15 பேர் கொண்ட இந்தியாவின் சாத்தியமான அணி: 


ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், கே.எல்.ராகுல் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷன் (ரிசர்வ் விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா (துணை கேப்டன்), ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், முகமது சிராஜ் , ஷர்துல் தாக்கூர், முகமது ஷமி மற்றும் ஜஸ்பிரித் பும்ரா.


மேலும் படிக்க:India vs Left Arm Pacers: இடது கை வேகப்பந்துவீச்சுக்கு தடுமாறும் இந்தியா.. உலகக்கோப்பைக்கு முன்பு உடனடி தீர்வு கிடைக்குமா?


முதல் போட்டியில் இந்திய அணி யாரை எதிர்கொள்கிறது..? 


உலகக் கோப்பை 2023 போட்டியில் இந்திய அணி தனது முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அக்டோபர் 8-ம் தேதி சென்னையில் விளையாடவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதே சமயம் இந்தியாவும் பாகிஸ்தானும் அக்டோபர் 14ஆம் தேதி நேருக்கு நேர் மோதுகின்றன. இந்த போட்டியானது அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறுகிறது. ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட அட்டவணைப்படி அக்டோபர் 15ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் போட்டி நடைபெறுவதாக இருந்த போதிலும், பின்னர் அட்டவணை மாற்றப்பட்டது.