Asia Cup 2023 LIVE: நேபாளத்தை ஊதித்தள்ளிய இந்தியா; 10 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி..!

Asia Cup 2023, IND Vs NEP Live Updates: இந்தியா நேபாளம் அணிகளுக்கு இடையிலான போட்டி குறித்த லைவ் அப்டேட்டுகளுக்கு ஏபிபியுடன் இணைந்து இருங்கள்.

த. மோகன்ராஜ் மணிவேலன் Last Updated: 04 Sep 2023 11:38 PM
Asia Cup 2023 LIVE: நேபாளத்தை ஊதித்தள்ளிய இந்தியா; 10 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி..!

இறுதியில் இந்திய அணி 20.1 ஓவர்களில் விக்கெட் எதையும் இழக்காமல் 147 ரன்கள் எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இறுதிவரை களத்தில் இருந்த இந்திய அணியின் தொடக்க வீரர்களான ரோகித் சர்மா 59 பந்துகளில் 6 பவுண்டரி மற்றும் 5 சிக்ஸர்கள் பறக்கவிட்டு 74  ரன்கள் சேர்த்திருந்தார். அதேபோல் சுப்மன் கில் 62 பந்துகளில் 8பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸர் பறக்கவிட்டு 67 ரன்கள் சேர்த்திருந்தார். இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறியுள்ளது. 

Asia Cup 2023 LIVE: 100 ரன்களை எட்டிய இந்தியா..!

இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 100 ரன்களை எட்டியுள்ளது. 

Asia Cup 2023 LIVE: ரோகித் சர்மா அரைசதம்..!

இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரும் கேப்டனுமான ரோகித் சர்மா அதிரடியாக விளையாடி அரைசதம் விளாசியுள்ளார். 

IND Vs NEP Live Score: சிக்ஸர் மழை பொழியும் ரோகித் சர்மா..!

அடுத்தடுத்து சிக்ஸர் அடித்து ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா.

IND Vs NEP Live Score: 10 ஓவர்கள் முடிவில் இந்தியா..!

10 ஓவர்கள் முடிவில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 64 ரன்கள் சேர்த்துள்ளது. 

IND Vs NEP Live Score: 5 ஓவர்கள் முடிவில்..!

5 ஓவர்கள் முடிவில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 31 ரன்கள் சேர்த்துள்ளது. 

IND Vs NEP Live Score: களமிறங்கிய இந்தியா..!

145 ரன்கள் இலக்கை நோக்கி இந்திய அணி களமிறங்கியுள்ளது. 

IND Vs NEP Live Score: குறைக்கப்பட்ட ஓவர் மற்றும் இலக்கு..!

இந்திய அணி வெற்றி பெற 23 ஓவரில் 145 ரன்கள் எடுத்தால் வெற்றி என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

DLS முறையில் இந்திய அணிக்கு இலக்கு..!

DLS முறையில் இந்திய அணிக்கு இலக்கு - 45 ஓவர்களில் 220 | 40 ஓவர்களில் 207 | 35 ஓவர்களில் 192 | 30 ஓவர்களில் 174 | 20 ஓவர்களில் 130 ரன்கள் எடுத்தால் வெற்றி என்பது விதிப்படி உள்ளது. 

Asia Cup 2023 LIVE: மீண்டும் மழை.. தடைபட்ட ஆட்டம்..!

இந்தியா நேபாளம் அணிகளுக்கு இடையிலான போட்டியில் இந்திய அணி 231 ரன்கள் இலக்கை துரத்த களமிறங்கி 2.1 ஓவரில் 17 ரன்கள் சேர்த்த நிலையில் ஆடிக்கொண்டு இருந்தபோது மழை பெய்ததால் போட்டி மீண்டும் தடை பட்டுள்ளது. 

இலக்கைத் துரத்தும் இந்தியா..!

231 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியுள்ளது. 

இந்தியாவுக்கு 231 ரன்கள் இலக்கு..!

அதன் பின்னர் அடுத்தடுத்து இந்திய அணி விக்கெட்டுகளை கைப்பற்றினாலும்,நேபாளம் அணி 48.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 230 ரன்கள் சேர்த்தது. இந்திய அணி சார்பில் ரவீந்திர ஜடேஜா 3 விக்கெட்டுகளும் முகமது சிராஜ் 3 விக்கெட்டுகளும்  முகமது ஷமி 2 விக்கெட்டுகளும் கைப்பற்றியிருந்தனர். 

Asia Cup 2023 LIVE: சிறப்பாக அடி வந்த சோம்பால் அவுட்..!

அதிரடியாக ஆடி வந்த சோம்பால் தனது விக்கெட்டை 48 ரன்கள் சேர்த்த நிலையில் இழந்து வெளியேறினார். 

Asia Cup 2023 LIVE: 45 ஓவர்கள் முடிவில் நேபாளம்..!

45 ஓவர்கள் முடிவில் நேபாளம் அணி 7 விக்கெட்டுகளை இழந்து 205 ரன்கள் சேர்த்துள்ளது. 

Asia Cup 2023 LIVE: 200 ரன்களை எட்டிய நேபாளம் அணி..!

நேபாளம் அணி 44 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 202 ரன்கள் சேர்த்துள்ளது. 

Asia Cup 2023 LIVE: 7வது விக்கெட்டை இழந்த நேபாளம்..!

சிறப்பாக ஆடி வந்த அய்ரீ ஹர்திக் பாண்டியா பந்து வீச்சில் தனது விக்கெட்டை இழந்து வெளியேறினார். 

மழைக்குப் பின் தொடர்ந்த இந்தியா நேபாளம் ஆட்டம்; விக்கெட் வேட்டையை தொடருமா இந்தியா?

மழை நின்ற பின்னர் இந்தியா நேபாளம் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் தொடர்ந்துள்ளது. 38 ஓவர்கள் முடிவில் நேபாளம் அணி 6 விக்கெட்டுகளை இழந்து 178 ரன்கள் சேர்ந்துள்ளது. 

IND Vs NEP Live Score: அவுட் ஃபீல்டில் மழைநீர்..!

மழை நின்று விட்டாலும் ஆடுகளத்தின் அவுட் ஃபீல்டில் மழை நீர் நிற்பதால் போட்டியைத் தொடர்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. 

IND Vs NEP Live Score: மழையால் தடைபட்ட ஆட்டம்..!

இந்தியா நேபாளம் இடையிலான போட்டி மழையால் தடைபட்டுள்ளது. 

IND Vs NEP Live Score: 150 ரன்களைக் கடந்த நேபாளம் அணி..!

34 ஓவர்கள் முடிவில் நேபாளம் அணி 6 விக்கெட்டுகளை இழந்து 151 ரன்கள் சேர்த்துள்ளது. 

IND Vs NEP Live Score: ஆஷிஃப் ஷேக்கின் விக்கெட்டை தட்டித் தூக்கிய சிராஜ் விராட் கூட்டணி..!

அரைசதம் கடந்து சிறப்பாக ஆடி வந்த ஆஷிஃப் ஷேக்கின் விக்கெட்டை சிராஜ் மற்றும் விராட் கூட்டணி சிறப்பான முறையில் வீழ்த்தியுள்ளது. 

Asia Cup 2023 LIVE: அரைசதம் விளாசிய ஆஷிஃப் ஷேக்..!

இந்திய அணிக்கு எதிரான முதல் அரைசதம் அடித்த நேபாள வீரர் என்ற பெருமையை ஆஷிஃப் ஷேக் பெற்றுள்ளார். அவர் 88 பந்தில் 7 பவுண்டரியுடன் அரைசதம் விளாசினார். 

Asia Cup 2023 LIVE: மூன்றாவது விக்கெட்டை இழந்த நேபாளம்..!

நேபாளம் அணி 20வது ஓவரின் கடைசி பந்தில் நேபாளம் அணி தனது 3வது விக்கெட்டை இழந்துள்ளது. நேபாளம் அணி 20 ஒவர்கள் முடிவில் 93 ரன்கள் சேர்த்துள்ளது. 

Asia Cup 2023 LIVE: 2வது விக்கெட்டை இழந்த நேபாளம் அணி..!

16வது ஓவரின் கடைசி பந்தில் நேபாளம் அணி தனது 2வது விக்கெட்டை இழந்துள்ளது. 16 ஓவர்கள் முடிவில் நேபாளம் அணி 2 விக்கெட்டுகளை இழந்து 77 ரன்கள் சேர்த்துள்ளது. 

Asia Cup 2023 LIVE: 10 ஓவர்கள் முடிவில்..!

10 ஓவர்கள் முடிவில் நேபாளம் அணி ஒரு விக்கெட்டை இழந்து 65 ரன்கள் சேர்த்துள்ளது. 

Asia Cup 2023 LIVE: விக்கெட்..!

போட்டியின் 10வது ஓவரின் 5வது பந்தில் நேபாளம் அணி தனது முதல் விக்கெட்டை இழந்துள்ளது. 

Asia Cup 2023 LIVE: 50 ரன்களை எட்டிய நேபாளம்..!

சிறப்பாக ஆடி வரும் நேபாளம் அணி 8.5 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 53 ரன்கள் சேர்த்துள்ளது. 

Asia Cup 2023 LIVE: 5 ஓவர்கள் முடிவில் நேபாளம்..!

5 ஓவர்கள் முடிவில் நேபாளம் அணி விக்கெட் இழப்பின்றி 23 ரன்கள் சேர்த்துள்ளது. 

Asia Cup 2023 LIVE: மூன்றாவது கேட்ச் மிஸ்..!

5வது ஓவரில் விக்கெட் கீப்பர் இஷான் கிஷன் கைக்கு வந்த எளிமையான கேட்ச்சை தவறவிட்டுள்ளார். 

IND Vs NEP Live Score: 3 ஓவர்கள் முடிவில்..!

3 ஒவர்கள் முடிவில் நேபாளம் அணி விக்கெட் இழப்பின்றி 12 ரன்கள் சேர்த்துள்ளது. 

IND Vs NEP Live Score: கேட்ச் மிஸ்..!

முதல் ஓவர் மற்றும் இரண்டாவது ஓவரில் இந்திய அணி வீரர்கள் இரண்டு கேட்ச்களை தவறவிட்டுள்ளனர். 

IND Vs NEP Live Score: களமிறங்கிய நேபாளம்..!

இந்திய அணிக்கு எதிரான போட்டியில் நேபாளம் அணி களமிறங்கியுள்ளது. 

IND Vs NEP Live Score: டாஸ் வென்ற இந்தியா..!

டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச முடிவு செய்துள்ளது. 

Background

ஆசியக்கோப்பை தொடரின் இன்றைய லீக் போட்டியில் இந்தியா - நேபாளம் அணிகள் மோதுகின்றன.


ஆசியக்கோப்பை தொடர்:


ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்கு முன்னோட்டமாக அமைந்துள்ள  ஆசியக்கோப்பை கிரிக்கெட் தொடர், கடந்த 30ம் தேதி பாகிஸ்தானில் தொடங்கியது. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான், வங்கதேசம் மற்றும் நேபாளம் ஆகிய 6 அணிகள் இந்த தொடரில் பங்கேற்றுள்ளன. அணிகள் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு 6 லீக் போட்டிகள் உட்பட 13 போட்டிகளை கொண்ட இந்த தொடர் வரும் செப்டம்பர் 17ம் தேதி வரை நடைபெற உள்ளது.  இதுவரை 4 லீக் போட்டிகள் நடந்து முடிந்த நிலையில், இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போட்டி மட்டும் மழையால் கைவிடப்பட்டது.


இந்தியா - நேபாளம்:


இந்த நிலையில் இன்று நடைபெறும் லீக் போட்டியில் இந்தியா - நேபாளம் அணிகள் மோத உள்ளன. இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு தொடங்கும் இந்த போட்டி, கண்டி மைதானத்தில் நடைபெற உள்ளது. போட்டியின் நேரலையை தொலைக்காட்சியில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் அலைவரிசையிலும், ஒடிடியில் ஹாட் ஸ்டார் செயலியிலும் ரசிகர்கள் இலவசமாக கண்டுகளிக்கலாம். இன்றைய போட்டியில் வெற்றி பெறும் அணி சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெறும். எனவே வெற்றிக்காக இரு அணிகளும் மல்லுக்கட்டும் என்பதால், ஆட்டத்தில் பரபரப்பிற்கு பஞ்சமிருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.


இந்திய அணி நிலவரம்:


பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் பேட்டிங்கில் சொதப்பிய கேப்டன் ரோகித் சர்மா, முன்னாள் கேப்டன் கோலி, சுப்மன் கில், ஷ்ரேயாஸ் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் இன்றைய போட்டியில் சிறப்பாக விளையாட வேண்டி உள்ளது. கடைசியாக விளையாடிய 4 போட்டிகளிலும் அரைசதம் விளாசிய இஷான் கிஷான், பாகிஸ்தானுக்கு எதிராக அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹர்திக் பாண்டியா ஆகியோர் நம்பிக்கை அளிக்கின்றனர். பந்துவீச்சை பொறுத்தவரையில் பும்ரா, சிராஜ் மற்றும் தாக்கூர் ஆகியோருடன் குல்தீப் யாதவ் என வலுவான லைன் - அப்பை இந்தியா கொண்டிருப்பது உத்வேகம் அளிக்கிறது.


நேபாளம் அணி:


ஆசியக்கோப்பை தொடரில் நேபாளம் அணி களமிறங்குவது இதுவே முதல்முறையாகும். தொடரின் முதல் போட்டியிலேயே பாகிஸ்தானிடம் படுதோல்வி சந்தித்தது. போதிய அனுபவமில்லாத நேபாளம் அணி இந்தியாவ எதிர்கொண்டு வெல்வது சிரமம் தான்.


மைதானம் எப்படி?


பல்லேகல சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம் இயற்கையில் மிகவும் சமச்சீரான ஆடுகளமாக திகழ்கிறது. சுழற்பந்துவீச்சாளர்கள் டர்ன் மற்றும் பவுன்ஸ் காரணமாக கூடுதல் உதவி பெறலாம். ஸ்ட்ரைக்கை ரொடேட் செய்யும் பேட்ஸ்மேன்கள் ரன்களை குவிக்கலாம். 


வானிலை அறிக்கை:


மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்ற இந்தியா - பாகிஸ்தான் போட்டி மழையால் கைவிடப்பட்டது. இந்நிலையில் இன்று போட்டி நடைபெறும் போது மழை பெய்ய 80 சதவிகிதம் வாய்ப்புள்ளதாக வானிலை அறிக்கைகள் எச்சரித்துள்ளன. ஒருவேளை போட்டி மழையால் மீண்டும் கைவிடப்ப்ட்டால், இந்திய அணி நேரடியாக சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறும்.


இந்தியா உத்தேச அணி:


ரோகித் சர்மா , சுப்மான் கில் , விராட் கோலி , எஸ் ஐயர் , பாண்டியா, ஜடேஜா, இஷான் கிஷன், ஷர்துல் தாகூர் , பும்ரா ,முகமது சிராஜ் , குல்தீப் யாதவ்


நேபாளம் உத்தேச அணி:


ஆரிப் ஷேக் , கே புர்டெல் , ரோஹித் குமார் பவுடல் , திபேந்திர சிங் ஐரி , குஷால் மல்லா , ஆசிப் ஷேக் , லலித் ராஜ்பன்ஷி , கரண் கேசி , குல்ஷன் குமார் ஜா , சோம்பால் கமி ,சந்தீப் லமிச்சனே

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.