ஆசிய கோப்பை குரூப்-ஏ பிரிவில் பாகிஸ்தான் முதலிடத்தில் உள்ளது. அதே நேரத்தில், இந்திய அணி இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. சூப்பர்-4க்கு தகுதி பெற நேபாளத்துக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெற்றாக வேண்டும். 

ஆசிய கோப்பை 2023 புள்ளிகள் அட்டவணை

ஆசிய கோப்பை 2023 குரூப் ஏ

எண் குழு போட்டி வெற்றி தோல்வி டை புள்ளிகள் என்.ஆர்.ஆர்
1 பாகிஸ்தான் 2 1 0 1 3 +4.760
2 இந்தியா 1 0 0 1 1 0
3 நேபாளம் 1 0 1 0 0 -4.760

ஆசிய கோப்பை 2023 குரூப் பி

எண் குழு போட்டி வெற்றி தோல்வி புள்ளிகள் PT என்.ஆர்.ஆர்
1 இலங்கை 1 1 0 0 2 +0.951
2 பங்களாதேஷ் 2 1 1 0 2 +0.373
3 ஆப்கானிஸ்தான் 1 0 1 0 0 -1.780

முன்னிலை வகிக்கும் பாகிஸ்தான்: 

பாகிஸ்தான் இரண்டு போட்டிகளில் விளையாடி அதில் ஒன்றில் வெற்றியும், மற்றொன்றில் முடிவில்லாமல் போனது. இதன்மூலம் குரூப் ஏ பிரிவில் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி 3 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. இந்திய அணியை பொறுத்தவரை ஒரே ஒரு போட்டியில் மட்டுமே விளையாடி, அந்த போட்டியும் முடிவில்லாமல் போனது. ஒரே ஒரு புள்ளியுடன் இந்திய அணி புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. 

மேலும் படிக்க: India vs Nepal: அடுத்தடுத்து கேட்சுகள் மிஸ்.. வடிவேலுவின் பாப்பம்பட்டி அணி போல் சொதப்பும் இந்திய கிரிக்கெட் அணி!

அதேசமயம், ஏ பிரிவில் மூன்றாவது அணியான நேபாளம் மூன்றாவது இடத்தில் உள்ளது. நேபாளம் இதுவரை ஒரே ஒரு போட்டியில் மட்டுமே விளையாடி, அந்த அணி தோல்வியடைந்துள்ளது. இது தவிர, வங்கதேச அணி 2-ல் ஒரு வெற்றியுடன் 2 புள்ளிகள் பெற்று குரூப் பிரிவில் இரண்டாவது இடத்தில் உள்ளது. அதேசமயம் 1 போட்டியில் விளையாடியுள்ள ஆப்கானிஸ்தான், குரூப்-பியில் தோல்வியுடன் மூன்றாவது மற்றும் கடைசி அணியாக உள்ளது.  

இந்திய அணி நேபாளத்துடன் மோதுவது இதுவே முதல்முறை:

ஆசிய கோப்பையின் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணி முதல் முறையாக நேபாளத்திற்கு எதிரான போட்டியில் விளையாடுகிறது. ஆசிய கோப்பையில் இந்தியா மற்றும் நேபாளம் அணிகள் தங்களின் இரண்டாவது போட்டியில் இன்று விளையாடுகின்றன. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி நேரடியாக சூப்பர்-4க்கு தகுதி பெறும். 

மேலும் படிக்க: Udhayanidhi Stalin: ’சூழ்ச்சி செய்கிறார்கள், திரிக்கிறார்கள், மாற்றுகிறார்கள்..’ சனாதன சர்ச்சை.. அமைச்சர் உதயநிதி விளக்கம்!

நேபாளத்திற்கு இது எளிதான விஷயம் அல்ல. இந்திய அணியிடம் ஒப்பிடும்போது நேபாள அணி கத்துக்குட்டி அணியாகவே பார்க்கப்படுகிறது. 

இந்தியா விளையாடும் 11 அணி: ரோஹித் சர்மா (கேப்டன்), ஷுப்மான் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ், முகமது ஷமி, முகமது சிராஜ்

நேபாளம் விளையாடும் 11 அணி: குஷால் புர்டெல், ஆசிப் ஷேக் (விக்கெட் கீப்பர்), ரோஹித் பௌடெல் (கேப்டன்), பீம் ஷர்கி, சோம்பால் கமி, குல்சன் ஜா, திபேந்திர சிங் ஐரி, குஷால் மல்லா, சந்தீப் லாமிச்சானே, கரண் KC, லலித் ராஜ்பன்ஷி