IND vs SL 2nd Test Live: 238 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி... உள்நாட்டில் சாதனைப்படைத்த இந்திய அணி
பெங்களூருவில் நடைபெற்று வரும் இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான பகலிரவு டெஸ்ட் போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் செய்து வருகிறது.
107 ரன்கள் எடுத்து திமுத் அவுட்டாக, 9 விக்கெட்டுகளை இழந்து இலங்கை தோல்வியை நெருங்கி வருகிறது
கேப்டன் திமுத் மட்டும் ரன் சேர்க்க, மற்ற பேட்டர்கள் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழக்கின்றனர். 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு இலங்கை அணி 182 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது
இந்திய அணி நிர்ணயித்த 447 ரன்கள் இலக்கை நோக்கி ஆடி வரும் இலங்கை அணி 165 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து விளையாடி வருகிறது.
இந்திய அணி நிர்ணயித்த 447 ரன்கள் இலக்கை நோக்கி ஆடி வரும் இலங்கை அணி 100 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்துள்ளது. திமுத் கருணரத்னே 37 ரன்களுடனும், தனஞ்செய டி சில்வா 2 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.
இந்திய அணியின் முன்னணி சுழற்பந்துவீச்சாளர் அஸ்வின். இவர் இலங்கைக்கு எதிராக நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டியில் விக்கெட் வீழ்த்தியதன் மூலம் 440 விக்கெட்டுகளை கைப்பற்றி சாதனை படைத்துள்ளார். இதன்மூலம் 93 டெஸ்டில் 439 விக்கெட்டுகளை வீழ்த்திய டேல் ஸ்டெயினின் சாதனையை பின்னுக்கு தள்ளி புதிய சாதனை படைத்துள்ளார்.
பெங்களூரில் நடைபெற்று வரும் பகலிரவு டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாளான இன்று கேப்டன் கருணரத்னே 24 ரன்களுடனும், குசல் மென்டிஸ் 28 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இலங்கை அணி 58 ரன்களுக்கு 1 விக்கெட்டுடன் ஆடி வருகிறது.
பெங்களூரில் நடைபெற்று வரும் 2வது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணிக்கு 447 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி 1 விக்கெட் இழப்பிற்கு 28 ரன்கள் எடுத்துள்ளது.
இந்திய அணியின் ஸ்ரேயாஸ் அய்யர் சிறப்பாக ஆடி அரைசதம் அடித்துள்ளார். அவர் சற்றுமுன்வரை 76 பந்துகளில் 9 பவுண்டரியுடன் 63 ரன்களுடன் களத்தில் உள்ளார். அவர் கடந்த இன்னிங்சில் 92 ரன்கள் குவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் இந்திய அணி உணவு இடைவேளை வரை 5 விக்கெட் இழப்பிற்கு 199 ரன்கள் எடுத்துள்ளது. இந்திய அணி இதனால் 342 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. களத்தில் ஸ்ரேயாஸ் அய்யரும், ஜடேஜாவும் உள்ளனர்.
இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் விக்கெட்டுகள் சீரான இடைவெளியில் விழுந்த நிலையில், 5வது விக்கெட்டிற்கு களமிறங்கிய விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 29 பந்துகளில் 7 பவுண்டரி 3 சிக்ஸருடன் 50 ரன்களை எடுத்து புதிய சாதனை படைத்துள்ளார்.
இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் சிறப்பாக ஆடி வந்த ரோகித் சர்மா, ஹனுமா விஹாரி அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். கேப்டன் ரோகித் சர்மா 46 ரன்களிலும், விஹாரி 35 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். விராட்கோலி 11 ரன்களுடனும், ரிஷப் பண்ட் 7 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
இலங்கை அணி 109 ரன்களில் சுருண்ட நிலையில், இந்திய அணி இரண்டாவது இன்னிங்சை தொடங்கி ஆடி வருகிறது. இந்திய அணியின் தொடக்க வீரர் மயங்க் அகர்வால் 34 பந்துகளில் 22 ரன்கள் எடுத்த நிலையில், ஆட்டமிழந்தார். இந்திய அணி தற்போது தேநீர் இடைவேளை வரை 204 ரன்கள் முன்னிலை பெற்று ஆடி வருகிறது.
இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் இந்திய அணி சற்றுமுன் வரை 18 ஓவர்களில் 61 ரன்களுக்கு 1 விக்கெட்டை இழந்து ஆடி வருகிறது. கேப்டன் ரோகித் சர்மா 30 ரன்களுடனும், ஹனுமா விஹாரி 8 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
எம்புல்தெனிய வீசிய பந்தில் மயங்க் அகர்வால் அவுட் ஆனார். இந்திய அணி தற்போது 1 விக்கெட் இழப்புக்கு 59 ரன்களுடன் களத்தில் நிற்கிறது.
இந்தியா vs ஸ்ரீலங்கா டெஸ்ட்: ஓப்பனர் பேட்ஸ்மேன்களாக ரோகித் ஷர்மா, மயங்க் அகர்வால் களமிறங்கியுள்ளனர்.
இந்திய அணி விக்கெட் ஏதும் இழப்பின்றி 16 ரன்களை பெற்று களத்தில் நிற்கிறது.
முதல் இன்னிங்ஸில், 109 ரன்களில் சுருண்டது இலங்கை அணி..
பெங்களூரில் நடைபெற்று வரும் பகலிரவு டெஸ்ட் போட்டியில் முதல்நாளான இன்று இலங்கை அணி 6 விக்கெட்டுகளை இழந்து 86 ரன்களை மட்டுமே எடுத்துள்ளது. இந்திய அணியில் அதிகபட்சமாக பும்ரா 3 விக்கெட்டுகளையும், ஷமி 2 விக்கெட்டுகளையும், அக்ஷர் படேல் 1 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளனர்.
இந்திய அணி முதல் இன்னிங்சில் 252 ரன்களுக்கு ஆல் அவுட்டாகிய நிலையில், தனது முதல் இன்னிங்சை தொடங்கி ஆடி வரும் இலங்கை அணி விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. இலங்கை அணியின் தொடக்க வீரர் குசல் மெண்டிஸ் 2 ரன்களிலும், கேப்டன் கருணரத்னே 4 ரன்களிலும், லகிரு திரிமன்னே 8 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அந்த அணி 6 ஓவர்களில் 16 ரன்கள் மட்டுமே எடுத்து 3 விக்கெட்டுகளை இழந்து ஆடி வருகிறது.
பெங்களூரில் நடைபெற்று வரும் இலங்கைக்கு எதிரான பகலிரவு டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் 252 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது. அதிகபட்சமாக தனி ஆளாக போராடிய ஸ்ரேயாஸ் அய்யர் 92 ரன்கள் குவித்தார்.
பெங்களூர் மைதானத்தில் பகலிரவு போட்டியாக நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், தனி ஆளாக ஸ்ரேயாஸ் அய்யர் மட்டும் போராடி வருகிறார். இந்திய அணி 9 விக்கெட்டுகளை இழந்துள்ள நிலையில், இந்திய அணிக்காக ஜஸ்பிரித் பும்ராவுடன் இணைந்து ஸ்ரேயாஸ் ரன்களை அடித்து வருகிறார். அவர் 88 பந்தில் 82 ரன்னுடன் ஆடி வருகிறார். ஒரு விக்கெட் மட்டுமே கையில் உள்ள நிலையில் ஸ்ரேயாஸ் சதமடிப்பாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
இலங்கைக்கு எதிராக பேட்டிங் செய்து வரும் இந்திய அணி மிகவும் தடுமாறி வருகிறது. ஸ்ரேயாஸ் அய்யர் மட்டும் நிலைத்து நின்று ஆடி வருகிறார். பிற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வருகின்றனர். சற்றுமுன் வரை இந்திய அணி 48 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 204 ரன்களை மட்டுமே எடுத்துள்ளது. சிறப்பாக ஆடி வரும் ஸ்ரேயாஸ் அய்யர் அரைசதம் அடித்து ஆடி வருகிறார்.
பெங்களூரில் நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பேட்டிங் செய்து வரும் இந்திய அணி முன்னணி வீரர்களின் விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. தற்போது தேநீர் இடைவேளை வரை இந்திய அணி 29 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 93 ரன்கள் எடுத்துள்ளது. ரிஷப் பண்ட் 16 ரன்களுடனும், ஸ்ரேயாஸ் அய்யர் 1 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.
லசித் எம்புல்தெனிய வீசிய பந்தில் தனஞ்சய டி சில்வாவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார் ரோகித் ஷர்மா. இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு 35 ரன்கள் எடுத்துள்ளது.
இந்தியா - இலங்கை டெஸ்ட் போட்டி: ரன் அவுட் முறையில் 4 ரன்கள் எடுத்து அவுட்டானார் மயங்க் அகர்வால். இந்திய அணி தற்போது 1 விக்கெட் இழப்புக்கு 23 ரன்கள் எடுத்துள்ளது.
பெங்களூருவில் நடைபெற்று வரும் இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான பகலிரவு டெஸ்ட் போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் செய்து வருகிறது.
Background
இந்தியா-இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி மொகாலியில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் அதிரடியாக விளையாடிய இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 222 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது. இதனால் 1-0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை வகிக்கிறது. அதனை அடுத்து, இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி பெங்களுரூவில் இன்று தொடங்க உள்ளது.
முன்னதாக, இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு 50% ரசிகர்களுக்கு அனுமதி என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்றிரவு பிசிசிஐ ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. அதில், பெங்களூருவில் நடைபெறும் பகலிரவு டெஸ்ட் போட்டிக்கு 100% பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அறிவித்திருக்கிறது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -