இந்தியா - இங்கிலாந்து:


ஐசிசி டி20 உலகக் கோப்பையில் தென்னாப்பிரிக்க அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுவிட்டது. இச்சூழலில் அரையிறுதி சுற்றின் இரண்டாவது போட்டியில் இங்கிலாந்து அணியை இந்தியா எதிர்கொள்ள இருக்கிறது. ஆனால் போட்டி நடைபெறுவதாக உள்ள கயானாவில் கனமழை பெய்து வருவதால் டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.


ஒரு வேலை மழையால் போட்டி முழுமையாக நிறுத்தப்பட்டால் ரன்ரேட் அடிப்படையில் இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை பெறும் சூழல் தான் நிலவிகிறது.


ரோஹித் ஷர்மா வாழ்க்கையில் ஏற்பட்ட திருப்புமுனை:


இந்நிலையில் தான் கடந்த 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பையில் அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியிடம் தோல்வியடைந்த சம்பவம் ரோஹித் ஷர்மாவின் வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்தியதாக தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார்.  


இது தொடர்பாக அவர் பேசுகையில், “கடந்த 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற  டி20 உலகக்கோப்பையில் இங்கிலாந்து அணியிடம் நாம் அடைந்த தோல்வி ரோஹித் ஷர்மாவின் மனதில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. பேட்ஸ்மேனாகவும், கேப்டனாகவும் ரோஹித் ஷர்மாவுக்கு திருப்புமுனையாக அமைந்தது என்றே சொல்லலாம். அந்த போட்டியில் இங்கிலாந்து அணிக்கு எதிராக சராசரிக்கும் குறைவாக ஸ்கோரையே பதிவு செய்தோம். அப்போது ரோஹித் ஷர்மா ஒரு முடிவை எடுத்தார்.


டி20 கிரிக்கெட்டை விளையாடுவதற்கு இது சரியான பாணியல்ல. நாம் இன்னும் அட்டாக் செய்யும் பாணியில் விளையாட வேண்டும் என்றார். அப்போது தொடங்கி இப்போது வரை ரோஹித் ஷர்மா அதிரடியாக விளையாட வேண்டும், அட்டாக் செய்ய வேண்டும் என்பதில் மிகவும் கவனமாக உள்ளார்.


கடந்த 2 ஐசிசி தொடர்களிலும் இந்திய அணியின் ஆட்டம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது” என்று தினேஷ் கார்த்திக் கூறினார். தொடர்ந்து பேசிய அவர், “இந்த டி20 உலகக்கோப்பையில் பேட்டிங்கில் காட்டப்பட்டு வரும் அர்ப்பணிப்பு பலருக்கும் புதிய அனுபவத்தை கொடுக்கிறது. முதல் பேட்டிங் ஆடும் போது, ஆக்ரோஷமாக விளையாடுகிறார்கள். அதுதான் இந்திய அணியின் மிகப்பெரிய மாற்றம்” என்று கூறியுள்ளார்.


மேலும் படிக்க: IND vs ENG Guyana Weather: கயானாவில் பொளந்து கட்டும் கனமழை..! கைவிடப்படுகிறதா இந்தியா-இங்கிலாந்து போட்டி..? யாருக்கு லாபம்..?


மேலும் படிக்க: IND vs ZIM T20I Series: ஜிம்பாப்வே தொடரில் இருந்து வெளியேறிய இளம் வீரர்.. முக்கிய வீரரை களமிறக்கிய பிசிசிஐ.. காரணம் என்ன?