அரையிறுதி போட்டி:
டி20 உலகக் கோப்பை 2024ன் முதல் அரையிறுதி போட்டியில் இன்று காலை தென்னாப்பிரிக்கா - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதியது. இந்த போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியை தென்னாப்பிரிக்கா அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி உலகக் கோப்பை வரலாற்றில் முதல்முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
இந்தநிலையில் டி20 உலகக் கோப்பை 2024ன் இரண்டாவது அரையிறுதிப் போட்டி வெஸ்ட் இண்டீஸ் தீவுகளில் உள்ள கயானாவில் அமைந்துள்ள பிராவிடன்ஸ் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இரு அணிகள் மோதும் இந்த ஆட்டம் வெஸ்ட் இண்டீஸ் நேரப்படி காலை 10.30 மணிக்கும், இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு தொடங்க உள்ளது.
இந்தியா - இங்கிலாந்து இடையிலான இரண்டாவது அரையிறுதி போட்டியில் ரிசர்வ் நாள் இல்லாதது போட்டியின் ஆரம்பம் முதலே விவாதப் பொருளாக உள்ளது. ஏன் இந்த போட்டிக்கு ரிசர்வ் டே வைக்கப்படவில்லை என சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கேள்வி எழுப்பினார்கள். அதேநேரம் கயானாவில் காலை முதலே கனமழை பெய்தது.
இப்போது வானிலை எப்படி இருக்கிறது:
இந்தியா - இங்கிலாந்து அணிகள் விளையாட உள்ள கயானா மைதானத்தில் மழை பெய்து வந்த சூழலில் தற்போது படிப்படியாக மழை குறைந்துள்ளது. இதனால் போட்டி நடைபெறுவதற்கான சூழல் நிலவுகிறது. இது தொடர்பாக இந்திய அணியின் முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,”நான் முதலில் உங்களுக்கு ஒரு கெட்ட செய்தியை சொன்னேன்.
ஆனால் இப்போது நல்ல செய்தியை சொல்கிறேன். சூரியன் வெளியே வர ஆராம்பித்துவிட்டது. மைதானத்தில் இருந்து தார்பாய் முழுவதும் எடுக்கப்பட்டுவிட்டது” என்று கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதானால் இன்றைய போட்டி நடைபெறும் என்று ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் காத்திருக்கின்றனர்.
மேலும் படிக்க: IND vs ENG Guyana Weather: கயானாவில் பொளந்து கட்டும் கனமழை..! கைவிடப்படுகிறதா இந்தியா-இங்கிலாந்து போட்டி..? யாருக்கு லாபம்..?
மேலும் படிக்க: IND vs ZIM T20I Series: ஜிம்பாப்வே தொடரில் இருந்து வெளியேறிய இளம் வீரர்.. முக்கிய வீரரை களமிறக்கிய பிசிசிஐ.. காரணம் என்ன?