இந்தியா - இங்கிலாந்து:
குஜராத் மாநிலம் ராஜ்கோட் செளராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி நேற்று (பிப்ரவரி 15) தொடங்கியது. அந்த வகையில் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு இந்திய அணி 326 ரன்கள் எடுத்துள்ளது. அதன்படி, 110 ரன்களுடன் ரவீந்திர ஜடேஜாவும் 1 ரன்னுடன் குல்தீப் யாதவும் களத்தில் உள்ளனர்.
முன்னதாக, இந்த போட்டியில் அறிமுக வீரராக களம் இறங்கிய சர்ஃபராஸ் கான் அதிரடியாக விளையாடினார். 66 பந்துகள் களத்தில் நின்ற அவர் 9 பவுண்டரிகள் 1 சிக்ஸர் உட்பட மொத்தம் 62 ரன்கள் எடுத்தார். அப்போது ஜடேஜாவின் செயலால் ரன் அவுட் ஆனார். அதாவது, ஜடேஜா 99 ரன்கள் எடுத்த போது 1 ரன்னை எடுத்து சதத்தை பதிவு செய்வதற்கு திணறிக்கொண்டிருந்தார். அப்போது வீசப்பட்ட பந்தை அடித்த ஜடேஜா 100 வது ரன்னை எடுக்க பாதி தூரம் வரையில் ஓடி வந்து விட்டார். ஜடேஜா ஓடிவருவதை பார்த்த சர்ஃபராஸ் கானும் பந்து எங்கே செல்கிறது என்பதை கவனிக்காமல் பாதி தூரம் ஓடிவிட்டார். அப்போது பந்து பில்டரின் கையில் சென்றதை உணர்ந்த ஜடேஜா அப்படியே நின்றுவிட்டார். ஜடேஜாவின் இந்த செயலால் பாதியிலே சிக்கிக் கொண்டு மீண்டும் கிரீசுக்கு செல்வதற்கு முன்பு ரன் அவுட் ஆனார் சர்ஃபராஸ் கான்.
விளையாட்டில் ஒரு அங்கம் தான்:
இந்நிலையில் தவறான புரிதலால் விக்கெட்டை பறிகொடுப்பது விளையாட்டில் ஒரு அங்கம் தான் என்று சர்ஃபராஸ் கான் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் பேசுகையில்,"போட்டியின்போது இப்படி நடப்பது சகஜமான ஒன்றுதான். இப்படி தவறான புரிதலால் அவுட் ஆகி செல்வதும் விளையாட்டின் ஒரு பகுதி தான். உண்மையில் இன்னிங்ஸ் முழுவதும் ஜடேஜா என்னை வழி நடத்தினார். குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் களத்தில் நீண்ட நேரம் நின்று விளையாடினாலே ரன்கள் தாமாக வரும் என்று அவர் எனக்கு ஆலோசனை வழங்கினார்.
இறுதியில் போட்டி முடிந்ததும் சற்று தவறான புரிதலால் ரன் அவுட்டானதாக அவர் என்னிடம் வருத்தம் தெரிவித்தார்” என்று கூறியுள்ளார். இதனிடையே சமூக வலைதள பக்கத்தின் மூலமாகவும் தன்னுடைய செயலுக்கு ஜடேஜா வருத்தம் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: IND vs ENG 3rd Test: ரோஹித் - ஜடேஜா சதம்.. சர்ஃப்ராஸ் கான் அரைசதம்! 326 ரன்களை குவித்த இந்தியா!
மேலும் படிக்க: Sarfaraz Khan: சர்ஃபராஸ் கானை ரன் - அவுட் செய்த ஜடேஜா...கோபத்தின் உச்சிக்கு சென்ற ரோஹித் செய்த செயல்!வைரல் வீடியோ!
மேலும் படிக்க: Rohit Sharma Record: டெஸ்ட் போட்டியில் சரவெடி...தோனியை பின்னுக்குத்தள்ளிய ஹிட்மேன் ரோஹித் ஷர்மா!
மேலும் படிக்க: Sarfaraz Khan: சர்ஃபராஸ் கானை ரன் - அவுட் செய்த ஜடேஜா...கோபத்தின் உச்சிக்கு சென்ற ரோஹித் செய்த செயல்!வைரல் வீடியோ!