மூன்றாவது டெஸ்ட்:


இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி இன்று  பிப்ரவரி 15 ஆம் தேதி குஜராத் மாநிலம் ராஜ்கோட் சௌராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற்றது. முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு இந்திய அணி 326 ரன்கள் எடுத்துள்ளது. முன்னதாக, இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி இந்திய அணி வீரர்கள் ரோகித் சர்மா மற்றும் ஜடேஜா ஆகியோர் சதம் விளாசினார்கள். அதேபோல், சர்வதேச டெஸ்ட் போட்டியில் அறிமுக வீரராக களம் இறங்கிய சர்ஃபராஸ் கான் அதிரடியாக விளையாடி அரைசதம் விளாசினார். அதன்படி, 66 பந்துகளில் 9 பவுண்டரிகள் 1 சிக்ஸர் என மொத்தம் 62 ரன்களை குவித்தார். இச்சூழலில் அறிமுக போட்டியிலேயே அரைசதம் விளாசியதன் மூலம் அனைவரின் பார்வையையும் தன் பக்கம் திருப்பியுள்ளார்.


 


பாராட்டு மழையில் சர்ஃப்ராஸ் கான்:


இந்நிலையில் கிரிக்கெட் வீரர்கள் பலரும் தங்களது பாராட்டுகளை சர்ஃப்ராஸ் கானுக்கு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இந்திய அணி வீரர் தினேஷ் கார்த்திக் வெளியிட்டுள்ள பதிவில், “சர்ஃபராஸ் குடும்பன் என்ன சொல்கிறது என்பது தொடர்பான புகைப்படங்களை பார்க்கிறேன். நாட்டுக்காக விளையாடுவதற்காக இரவும் பகலும் உழைக்கும் பல சிறுவர், சிறுமிகளுக்கு இது ஒரு பாடம். கடினமாக உழைக்கவும். உங்கள் கனவுகளை பின்தொடருங்கள். அது உண்மையாகிவிட்டால், அதைவிட சிறந்த உணர்வுகள் எதுவும் இல்லை.





இது சர்ஃபராஸ், அவரது அப்பா மற்றும் குடும்பத்திற்கு மட்டும் கிடைத்த வெற்றி அல்ல இது ஒரு விளையாட்டாக கிரிக்கெட்டுக்கு கிடைத்த வெற்றி உள்நாட்டில் உள்ள பல இளம் திறமையாளர்கள் இதைப் பார்த்து, இந்திய அணிக்காக விளையாடுவதற்குத் தங்களைத் தூண்டும் அளவுக்கு ஊக்கமளிப்பார்கள்” என்று கூறியுள்ளார்.


 


ஷிகர் தவான் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில, “ உங்கள் டெஸ்ட் அறிமுகத்திற்கு வாழ்த்துகள். சர்ஃபராஸ். பல வெற்றிகளில் இதுவே முதல் வெற்றியாக இருக்கட்டும்என்று கூறியுள்ளார். யுசூப் பதான் வெளியிட்டுள்ள பதிவில், "டெஸ்டில் அறிமுகமாகி 50 ரன்களை அடித்ததற்கு வாழ்த்துகள் சர்ஃபராஸ் கான். உள்நாட்டு கிரிக்கெட்டில் உங்கள் அர்ப்பணிப்பு உண்மையிலேயே பலனளித்துள்ளது. குறிப்பாக உங்கள் பெற்றோர் பார்த்துக்கொண்டிருக்கும் நிலையில், நீங்கள் உங்கள் வாழ்க்கையை மிகவும் ஈர்க்கக்கூடிய வகையில் ஆரம்பித்து இருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. ஜொலித்துக் கொண்டே இருங்கள்” என்று கூறியுள்ளார்.


மேலும் படிக்க: Sarfaraz Khan: சர்ஃப்ராஸ் கானை ரன் - அவுட் செய்த ஜடேஜா...கோபத்தின் உச்சிக்கு சென்ற ரோஹித் செய்த செயல்!வைரல் வீடியோ!


 


மேலும் படிக்க:Watch Video: அறிமுக போட்டி...அரைசதம் விளாசிய சர்ஃப்ராஸ் கான்...ப்ளைன் கிஸ் கொடுத்த மனைவி!வைரல் வீடியோ!