India vs Bangladesh 2nd Test Live Score Updates: அசத்திய அஷ்வின் - ஷ்ரேயாஷ் ஜோடி...3 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி!

IND vs BAN 2nd Test: இரண்டாவது டெஸ்ட்டின் மூன்றாவது நாள் ஆட்டம் நடைபெற்று வருகிறது.

த. மோகன்ராஜ் மணிவேலன் Last Updated: 25 Dec 2022 09:33 AM
6 விக்கெட்களை இழந்த இந்தியா.. வெற்றி விளிம்பில் வங்கதேசம்..!

4வது தொடக்கத்தில் இந்திய அணியின் ஜெயதேவ் உனத்கட் மற்றும் பண்ட் அடுத்தடுத்து தங்களது விக்கெட்களை இழந்தனர். தற்போது இந்திய அணி 73 ரன்களில் 6 விக்கெட்களை இழந்து தடுமாறி வருகிறது. 

4 விக்கெட்களை இழந்த சோகம்.. 100 ரன்கள் பின்தங்கிய நிலையில் இந்தியா.. இலக்கை எட்டுமா?

145 ரன்கள் இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணி, 4 விக்கெட்களை இழந்து தடுமாறி வருகிறது. 100 ரன்கள் பின்தங்கிய நிலையில் 3ம் நாள் ஆட்டம் இன்றுடன் முடிந்தது. 

2 ரன்னில் மீண்டும் ஏமாற்றிய கேஎல் ராகுல்.. 145 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய இந்தியா!

231 ரன்களில் வங்கதேச அணி ஆல் அவுட் ஆன நிலையில், 145 ரன்கள் இலக்குடன் இந்திய அணி விளையாடி வருகிறது. இந்திய அணி கேப்டன் கேஎல் ராகுல் வழக்கம்போல் ஏமாற்றம் அளித்து 2 ரன்களில் வெளியேறினார். 

73 ரன்களில் லிட்டன் தாஸ்.. சிராஜின் வேகத்தில் வெளியேறிய சோகம்!

இந்தியாவிற்கு எதிரான இரண்டாவது இன்னிங்ஸில் நிதான ஆட்டத்தை வெளிபடுத்திய லிட்டன் தாஸ், 73 ரன்களில் சிராஜ் பந்தில் க்ளீன் போல்டானார். 

200 ரன்களைக் கடந்த வங்கதேசம்..!

இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் வங்க தேச அணி 7 விக்கெட் இழப்பிற்கு 200 ரன்களைக் கடந்துள்ளது. 

60 ஓவர்கள் முடிவில் வங்கதேசம்..!

60 ஓவர்கள் முடிவில் வங்கதேச அணி 7 விக்கெட் இழப்பிற்கு 195 ரன்கள் எடுத்துள்ளது. களத்தில் லிட்டன் தாஸ் (58), டஷ்கின் அகமது (15)    உள்ளனர். 

லிட்டன் தாஸ் 50..!

அணியின் நிலையைக் கருத்தில் கொண்டு நிதானமாக ஆடிவந்த லிட்டன் தாஸ் 74 பந்தில் அரைசதம் அடித்துள்ளார். இவர் 20 ரன்கள் மற்றும் 49 ரன்களில் இருந்தபோது இவர் கொடுத்த கேட்ச்களை விராட் கோலி தவறவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 

மூன்றாவது விக்கெட் எடுத்த அக்‌ஷர் பட்டேல்..!

அதிரடியாக ஆடி வந்த நுருல் ஹசன் இரண்டு பவுண்டரி ஒரு சிக்ஸர் உட்பட 31 ரன்கள் எடுத்து அக்‌ஷர் பட்டேல் பந்தில் ஆட்டமிழந்தார். இவர் அடித்த சிக்ஸர் தான் இரண்டாவது இன்னிங்ஸில் வங்காளதேச அணி அடித்த ஒரே ஒஎஉ சிக்ஸராக இதுவரை உள்ளது. 

6 விக்கெட்டுகளை இழந்த வங்காளதேசம்..! பவுலிங்கில் அசத்தும் இந்தியா..?

குடிநீர் இடைவேளை வரை வங்காளதேச அணி 6 விக்கெட் இழப்பிற்கு 113 ரன்கள் எடுத்துள்ளது. வங்கதேசம் அணி தற்போது வரை 26 ரன்கள் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது. 

அரைசதம் அடித்த ஜகீர் ஹசன்..!

தொடக்க வீரராக களமிறங்கி நிலைத்து நின்று விளையாடிவரும் வங்கதேச அணியின் ஜகீர் ஹசன் 129 பந்துகளில் 5 பவுண்டரி உட்பட 50 ரன்கள் அடித்து விளையாடி வருகிறார். 

அரைசதம் அடித்த ஜகீர் ஹசன்..!

தொடக்க வீரராக களமிறங்கி நிலைத்து நின்று விளையாடிவரும் வங்கதேச அணியின் ஜகீர் ஹசன் 129 பந்துகளில் 5 பவுண்டரி உட்பட 50 ரன்கள் அடித்து விளையாடி வருகிறார். 

40ஓவர்கள் முடிவில் வங்கதேச அணி..!

40 ஓவர்கள் முடிவில் வங்கதேச அணி 4 விக்கெட் இழப்பிற்கு 90 ரன்கள் எடுத்துள்ளது. 


 

மூன்றாவது நாள் ஆட்டம்.!

இரண்டாவது டெஸ்டின் மூன்றாவது நாள் ஆட்டத்தில் வங்கதேச அணி தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியுள்ளது. 

India vs Bangladesh 2nd Test Live Score Updates: முடிவுக்கு வந்த 2 ஆம் நாள் ஆட்டம்... முன்னிலை பெற போராடும் வங்கதேசம் அணி

இந்திய அணிக்கெதிரான 2வது டெஸ்டின் 2 ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் வங்கதேசம் அணி விக்கெட் இழப்பின்றி 7 ரன்கள் எடுத்துள்ளது. இன்னும் 80 ரன்கள் பின்தங்கியுள்ள நிலையில் 3 நாள் ஆட்டம் மீதமிருப்பதால் அந்த அணி முன்னிலை பெறுமா அல்லது இந்திய அணி வெற்றி பெறுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. 

India vs Bangladesh 2nd Test Live Score Updates: முடிவுக்கு வந்த 2 ஆம் நாள் ஆட்டம்... முன்னிலை பெற போராடும் வங்கதேசம் அணி

இந்திய அணிக்கெதிரான 2வது டெஸ்டின் 2 ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் வங்கதேசம் அணி விக்கெட் இழப்பின்றி 7 ரன்கள் எடுத்துள்ளது. இன்னும் 80 ரன்கள் பின்தங்கியுள்ள நிலையில் 3 நாள் ஆட்டம் மீதமிருப்பதால் அந்த அணி முன்னிலை பெறுமா அல்லது இந்திய அணி வெற்றி பெறுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. 

India vs Bangladesh 2nd Test Live Score Updates: 314 ரன்களுக்கு ஆட்டமிழந்த இந்தியா...முன்னிலை பெறுமா வங்கதேசம்..!

வங்கதேச அணிக்கெதிரான 2வது டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 314 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. 87 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்ஸை வங்கதேச அணி விளையாடி வருகிறது. 

அரைசதம் விளாசிய ஸ்ரேயஸ்..!

6வது விக்கெட்டுக்கு களமிறங்கிய ஸ்ரேயஸ் ஐயர் 60 பந்துகளில் 50 ரன்கள் அடித்துள்ளார். இவர் 6 பவுண்டரி 1 சிக்ஸர் விளாசியுள்ளார். 

200 ரன்களைக் கடந்த இந்திய அணி..!

100 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிக்கொண்டு இருந்த இந்திய அணியை ரிஷப் பண்ட் - ஸ்ரேயஸ் ஐயர் கூட்டணி மீட்டெடுத்து வருகிறது. தற்போது இந்திய அணி 59 ஓவர்கள் முடிவில் 217 ரன்கள் எடுத்துள்ளது.  

100 ரன்களைக் கடந்த பார்ட்னர்ஷிப்..!

ஐந்தாவது விக்கெட்டுக்கு கைகோர்த்த ரிஷப் பண்ட் - ஸ்ரேயஸ் ஐயர் கூட்டணி 118 பந்தில் 108 ரன்கள் சேர்த்துள்ளது. 

அரைசதம் அடித்த ரிஷப் பண்ட்..!

5வது விக்கெட்டுக்கு இறங்கிய ரிஷப் பண்ட் அதிரடியாக ஆடி 49 பந்தில் 50 ரன்கள் அடித்துள்ளார். இவர் 5 பவுண்டரி 1 சிக்ஸர் விளாசியுள்ளார். 

களத்தில் விராட்..!

3 விக்கெட்டை இழந்து 86 ரன்கள் எடுத்துள்ள இந்திய அணி தடுமாறி வந்தாலும், இந்திய அணியைப் பொறுத்தவரையில் கைவசம் விக்கெட்டுகள் இருந்தாலும், களத்தில் விராட் கோலி இருப்பது நம்பிக்கை அளிப்பதாக உள்ளது. அவர், இதுவரை 65 பந்தில்  2 பவுண்டரி விரட்டி 18 ரன்கள் எடுத்துள்ளார்.  

உணவு இடைவேளை..!

இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாளின் உணவு இடைவேளையின் போது, இந்திய அணி 36 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 86 ரன்கள் எடுத்து தடுமாறி வருகிறது. 

புஜாரா விக்கெட்..!

நிதான ஆட்டத்தினை வெளிப்படுத்தி வந்த புஜாரா, தைஜூல் இஸ்லாம் வீசிய பந்தை  ஷார்ட் லெஜ் சைடில் அடிக்க அதனை மிகவும் சிறப்பாக கேட்ச் பிடித்து அசத்தியுள்ளார் மௌமினல். இதனால் 55 பந்தில் 24 ரன்கள் எடுத்து புஜாரா ஆட்டமிழந்து வெளியேறியுள்ளார். 

30 ஓவர்கள் முடிவில் இந்திய அணி..!

30  ஓவர்கள் முடிவில் இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 71 ரன்கள் எடுத்துள்ளது. 

தொடக்க ஜோடியை பெவுலியன் அனுப்பிய தைஜுல் இஸ்லாம்..!

இந்திய அணியின் தொடக்க ஜோடியான கே.எல். ராகுல் மற்றும் சுப்மன் கில் ஆகியோர் தைஜுல் இஸ்லாம் பந்து வீச்சில் அடுத்தடுத்து எல்.பி.டபள்யூ ஆகி  வெளியேறினர். 

வங்கதேசத்தை 227 ரன்களுக்கு சுருட்டிய இந்தியா.. முதல் நாள் முடிவில் இந்தியா 19/0..!

வங்கதேசத்திற்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 19 ரன்கள் எடுத்து 208 ரன்கள் பின்தங்கியுள்ளது. 

வங்கதேசத்தை வதைத்த உமேஷ், அஷ்வின்.. முதல் இன்னிங்சில் 227 ரன்களுக்கு ஆல் அவுட்!

இந்தியாவிற்கு எதிரான டாக்காவில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் வங்கதேச அணி 227 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. 

லிட்டன் தாஸ் அவுட்..!

போட்டியின் 49வது ஓவரில் அதிரடியாக ஆடிவந்த லிட்டன் தாஸ் ஆட்டமிழந்துள்ளார். 

அரைசதம் கடந்த மொமினல்..!

வங்கதேச வீரர் மொமினல் 83 பந்தில் 10 பவுண்டரி உட்பட 55 ரன்கள் எடுத்து நிதானமாக சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்தி வருகிறார். 

2வது செஷன் முடிவில் வங்கதேசம்..!

2வது டெஸ்டின் 2வது செஷன் முடிவில் வங்கதேச அணி 3 விக்கெட் இழப்பிற்கு 99 ரன்கள் எடுத்துள்ளது. 

3வது விக்கெட்..!

நிதானமாக ஆடிவந்த வங்கதேச கேப்டன் ஷகிப் அல் ஹசன் யுமேஷ் யாதவ் பந்து வீச்சில் அவுட் ஆகி வெளியேறியுள்ளார். இவர் 39 பந்தில் 16 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்துள்ளார். 

உணவு இடைவேளை வரை வங்கதேசம்..!

28 ஓவர்கள் முடிந்த நிலையில் வங்கதேச அணி 2 விக்கெட் இழப்பிற்கு 82 ரன்கள் எடுத்துள்ளது. களத்தில் ஷகிப் அல் ஹசன் 38 பந்தில் 1 ஃபோர் மற்றும் 1 சிக்ஸர் உட்பட 16 ரன்களும், மாமியுனல் 39 பந்தில் 4 ஃபோர்கள் உட்பட 23 ரன்கள் எடுத்து களத்தில் உள்ளது. 

12 ஆண்டுகளுப் பிறகு விக்கெட் எடுத்த உடன்கட்..!

12 ஆண்டுகளுக்குப்பிறகு மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட்டில் களம் இறங்கியுள்ள உடன்கட் தனது டெஸ்ட் விக்கெட்டை எடுத்துள்ளார். 

அடுத்தடுத்து இரண்டு விக்கெட்..!

நிதானமாக ஆடிவந்த வங்கதேச அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ஜகீர் மற்றும் ஷண்டு அடுத்தடுத்து ஆட்டமிழந்துள்ளனர். 

11 ஓவர்கள் முடிவில் வங்கதேச அணி..!

11 ஓவர்கள் முடிவில் வங்கதேச அணி விக்கெட் இழப்பின்றி 26 ரன்கள் எடுத்துள்ளது. 

கேட்ச் மிஸ்..!

போட்டியின் இரண்டாவது ஓவரில், ஜகீர்  டவுன் லெக் சைடில் அடித்த பந்தை கேட்ச் செய்ய முயன்ற முகமது சிராஜ் மிஸ் செய்துள்ளார்.  

பேட்டிங்கை தொடங்கிய வங்கதேச அணி..!

இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில், வங்கதேச அணியின் ஷகீர் மஸ்ஸும் ஷாண்டோ களமிறங்கியுள்ளனர். 

டாஸ் வென்ற வங்கதேச அணி..!

டாஸ் வென்ற வங்கதேச அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. 

Background

இந்திய அணி வங்கதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. ஏற்கனவே, இந்திய அணி ஒருநாள் தொடரை இழந்த நிலையில், வங்கதேசத்திற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அபாரமாக வென்றது. 


இந்தநிலையில், இரு அணிகளும் மோதும் இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இன்று டாக்கா மைதானத்தில் தொடங்குகிறது. இந்த போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்றால், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு தகுதி பெற ஏதுவாக இருக்கும். 


யார் கேப்டன்..?


வங்கதேசத்துக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் ஸ்லிப்பில் பீல்டிங் செய்யும் போது ரோஹித் சர்மாவின் கட்டை விரலில் மோசமான காயம் ஏற்பட்டது. அதனால் காயம் காரணமாக முதலாவது டெஸ்டில் இருந்து விலகினார். கேஎல் ராகுல் கேப்டனாகவும், சேட்டேஷ்வர் புஜாரா துணை கேப்டனாகவும் அறிவிக்கப்பட்டார். ரோஹித் சர்மா இன்னும் விளையாட தகுதியற்ற நிலையில், கேஎல் ராகுல் மீண்டும் மிர்பூரில் இந்திய அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.


இந்த டெஸ்ட் போட்டிக்கு முன்பாக பயிற்சி ஈடுபட்டிருந்த இந்திய அணி கேப்டன் கேஎல் ராகுலுக்கு கையில் காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த காயம் காரணமாக நாளை தொடங்கவிருக்கும் டெஸ்ட் தொடரில் கே.எல். ராகுல் விளையாடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஒருவேளை கேஎல் ராகுல் விளையாடவில்லை என்றால், இந்திய அணியின் துணை கேப்டனாக உள்ள புஜாரா தலைமை தாங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


இந்தியா அபார ஃபார்ம்:


முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. சட்டோகிராமில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணியை 188 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்தியது. 


2வது இன்னிங்சில் 513 ரன்கள் இந்திய அணி இலக்கு வைத்திருந்தது. ஆனால் வங்க தேச அணி 324 ரன்களில் ஆல் அவுட் ஆனது. வங்கதேச அணியில் அதிகபட்சமாக சாகிர் ஹசன் 100 ரன்களும் ஷகிப் 84 ரன்களும் ஷாண்டோ 67 ரன்களும் அடித்தனர். 


இந்திய-வங்கதேச அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் 4வது நாள் ஆட்ட நேர முடிவில்,  வங்க தேச அணி 6 விக்கெட் இழப்பிற்கு 272 ரன்கள் எடுத்து இருந்தது. அதையடுத்து, கடைசி நாள் ஆட்டம் தொடங்கியதும் மெஹிதி ஹாசன் 13 ரன்களில்  சிராஜ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.  நிதானமாக விளையாடிய ஷகிப் அல் - ஹசன் 84 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்த வந்த வீரர்களும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதன் காரணமாக, 324 ரன்களுக்கு அந்த அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.


இன்று தொடக்கம்:


இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக, அக்சர் படேல் 4 விக்கெட்டுகளையும், குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதன் மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி, 1-0 என முன்னிலை வகிக்கிறது. 


காலை 9 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை சோனி ஸ்போர்ட்ஸ் 3, 4, 5 ஆகிய சேனல்கள் நேரடி ஒளிபரப்புச் செய்யவுள்ளன. 


வங்களாதேச அணி: நஜ்முல் ஹொசைன் சாண்டோ, ஜாகிர் ஹசன், மொமினுல் ஹக், லிட்டன் தாஸ், முஷ்பிகுர் ரஹீம், ஷகிப் அல் ஹசன்(கேப்டன்), நூருல் ஹசன் (விக்கெட் கீப்பர்), மெஹிதி ஹசன் மிராஸ், தைஜுல் இஸ்லாம், கலீத் அகமது, தஸ்கின் அகமது


இந்திய அணி: கே.எல். ராகுல் (கேப்டன்), ஷுப்மான் கில், சேதேஷ்வர் புஜாரா, விராட் கோலி, ரிஷப் பந்த் (விக்கெர்ட் கீப்பர்), ஷ்ரேயாஸ் ஐயர், அக்சர் படேல், ரவிச்சந்திரன் அஷ்வின், ஜெய்தேவ் உனட்கட், உமேஷ் யாதவ், முகமது சிராஜ்


 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.