லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் இருப்பது தவறு என்றும் தன்பாலின திருமணங்கள், சமூக கட்டமைப்பை தகர்த்து விடும் என்றும் மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்திருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சமீப காலமாகவே, இளைய தலைமுறையினர் லிவ் இன் ரிலேஷன்ஷிப் செல்வது அதிகரித்து வருகிறது. காலதர்கள், ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வதற்கு லிவ் இன் ரிலேஷன்ஷிப் பெரிய அளவில் உதவுவதாக ஒரு தரப்பு கூறினாலும், திருமணம் என்ற அமைப்பையே இந்த முறை கேள்விக்குள்ளாக்குவதாக ஒரு சாரர் விமர்சித்து வருகின்றனர்.
"ஒருவருக்கு இரண்டு மனைவிகள்"
லிவ் இன் ரிலேஷன்ஷிப்புக்கு சட்ட அங்கீகாரம் வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்து வருகிறது. ஆனால், அதற்கு நேர் மாறாக, லிவ் இன் ரிலேஷன்ஷிப்புக்கு எதிராக உத்தரகாண்டில் பாஜக அரசு கடுமையான சட்டங்களை கொண்டு வந்துள்ளது.
இந்த நிலையில், யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்த பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரும் மத்திய அமைச்சருமான நிதின் கட்காரி, லிவ் இன் ரிலேஷன்ஷிப் உறவுக்கு எதிராக பேசியுள்ளார். பிரிட்டன் நாடாளுமன்றத்திற்கு சென்றபோது நிகழ்ந்த சம்பவத்தை நினைவுகூர்ந்து பேசிய அவர், "இங்கிலாந்தின் மிகப் பெரிய பிரச்சனை, திருமணத்திற்கு மாறாக மக்கள் விரும்பும் லிவ்-இன் உறவுகள் என்று கூறப்பட்டது.
நீங்கள் திருமணம் செய்து கொள்ளாவிட்டால், உங்களுக்கு எப்படி குழந்தைகள் பிறக்கும்? அத்தகைய குழந்தைகளின் எதிர்காலம் எப்படி இருக்கும்? நீங்கள் சமூகக் கட்டமைப்பிற்கு எதிராகச் சென்றால், அது மக்களுக்கு என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்?
மத்திய அமைச்சர் என்ன கூறினார்?
இறுதியில், சமூகம்தான் சொந்த நெறிமுறைகளை தீர்மானிக்கும். ஆனால், நாட்டில் சமநிலையான பாலின விகிதத்தை பராமரிக்க வேண்டும். 1,500 பெண்களும் 1,000 ஆண்களும் இருந்தால், ஆண்களுக்கு இரண்டு மனைவிகள் இருக்க அனுமதிக்க வேண்டும்.
லட்சிய இந்தியாவில் விவாகரத்துகளை தடை செய்ய வேண்டும் என்று இல்லை. லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் இருப்பது சரி இல்லை" என்றார்.
தன்பாலின திருமணத்தற்கு சட்ட அங்கீகாரம் வழங்க கோரி தொடரப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம், அதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டது. 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரித்த வழக்கில் இரு நீதிபதிகள் ஒரே மாதிரியாகவும், மூன்று நீதிபதிகள் ஒரு மாதிரியாகவும் தீர்ப்பு வழங்கியிருந்தனர்.
இதையும் படிக்க: பல்கலை. துணைவேந்தர் நியமனம்: 13 மாதம் ஆகியும் நிலுவை வழக்கை விசாரிக்க வைக்க முடியவில்லையா? அன்புமணி கேள்வி