மெல்போர்ன் டெஸ்ட் :


பார்டர்-கவாஸ்கர் டிராபியின்  நான்காவது டெஸ்ட் போட்டிக்கு இந்திய மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் தயாராகி வருவது தெரிந்ததே. தற்போது இரு அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளன. ஆனால் பயிற்சி ஆடுகளங்கள் குறித்து சர்ச்சை கிளம்பியுள்ளது. குறிப்பாக இந்திய வீரர்கள் ஆடும் பயிற்சி ஆடுகளங்களைக் கண்டு ரசிகர்கள் கொந்தளித்து வருகின்றனர்


இந்திய அணி வீரர்களுக்கு பயிற்சிக்காக ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட ஆடுகளங்கள் ஒதுக்கப்பட்டதாகவும், அதே நேரத்தில் ஆஸி வீரர்களுக்கு பளபளப்பான புதிய பயிற்சி ஆடுகளங்கள் வழங்கப்பட்டதாகவும் விவதங்கள் எழுந்தன. இந்திய அணி கடந்த வாரம் முதல் மெல்போர்னில் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. ஆனால் திங்கள்கிழமை முதல் ஆஸி. இரு அணிகளின் ஆடுகளம் தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 






குறைந்த பவுன்ஸ்:


 பயன்படுத்தப்பட்ட பயிற்சி ஆடுகளங்களில் விளையாடினால் சில பிரச்னைகள் வரலாம் என்று வல்லுநர்கள் கூறியுள்ளனர். இந்த பிட்ச்களில்ல் எதிர்பார்த்த அளவு பவுன்ஸ் இல்லை என்றும், வீரர்களுக்கு காயம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது. குறிப்பாக ஷார்ட் பிட்ச் பந்துகள் பேட்டரின் இடுப்புக்கு கீழே இறங்குவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தான் இந்திய கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு முழங்காலில் காயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பேட்டிங் ஆடிய சில இந்திய பேட்டர்கள் சிலர் இந்த் பிட்ச்களில் விளையாடியது அசௌகரியமாக இருந்ததாகத் தெரிவித்தனர்


இதையும் படிங்க: Watch video : அந்த மனசு இருக்கே! சிறுமியிடம் உரையாடிய பண்ட்.. வைரலாகும் வீடியோ


அகாஷ் தீப் கருத்து:


மறுபுறம், இந்த சர்ச்சைக்கு வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் தீப் பதிலளித்தார். இந்திய அணியின் பயிற்சிக்காக பயன்படுத்தப்பட்ட ஆடுகளங்கள் கொடுக்கப்பட்டது உண்மைதான் என்பதை ஒப்புக்கொண்டார். அந்த ஆடுகளங்கள் வெள்ளை பந்து கிரிக்கெட்டுக்காக உருவாக்கப்பட்டதாகவும், அதனால்தான் பவுன்ஸ் அதிகம் வரவில்லை என்றும் அவர் கூறினார். ஆனால், விளையாட்டில் இதெல்லாம் சகஜம் என்று ஆகாஷ் தீப் கூறினார்.









ஆடுகாள பராமரிப்பாளர் பதில்:


பிராக்டீஸ் பிட்ச் சர்ச்சைக்கு கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் (சிஏ) மெல்போர்ன் கியூரேட்டர் மேட் பேஜ் பதிலளித்தார். அதில் “விதிகளின்படி, போட்டிக்கு மூன்று நாட்களுக்கு முன்பு வீரர்களுக்கு புதிய பயிற்சி ஆடுகளங்கள் ஒதுக்கப்படும். இந்திய அணி கடந்த வாரத்தில் இருந்து பயிற்சியை ஆரம்பித்துவிட்டதாகவும், அதனால் தான் விளையாடும் பயிற்சி ஆடுகளங்கள் பழையதாக காட்சியளித்ததாகவும் அவர் கூறினார்.


இதையும் படிங்க: PV Sindhu Marriage : பி.வி சிந்துவுக்கு டும்.. டும்.. இணையத்தில் வெளியான முதல் புகைப்படம்


போட்டிக்கு மூன்று நாட்களுக்கு முன்பு அதாவது திங்கட்கிழமை ஆஸி., வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டதால், அவர்களுக்கு புதிய பயிற்சி ஆடுகளங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன என்றார். திங்கள்கிழமை ஆஸி., வீரர்களின் பயிற்சியால் இந்திய அணி பயிற்சியில் பங்கேற்கவில்லை. மீண்டும் பயிற்சியை தொடங்கும் போது, ​​அவர்கள் பயிற்சி செய்யும் ஆடுகளத்தை பார்த்தாலே  உண்மை தெரியும் என ரசிகர்கள் கூறுகின்றனர்.


இருப்பினும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தொடர் 1-1 என சமனில் உள்ளது. முதல் டெஸ்டில் இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது, இரண்டாவது டெஸ்டில் ஆஸி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மூன்றாவது டெஸ்ட் மழையால்  பிறகு டிராவில் முடிந்தது. தொடரின் நான்காவது டெஸ்ட் போட்டி 26ஆம் தேதி பாக்சிங் டே டெஸ்ட் போட்டியாக  மெல்போர்னில் நடைபெறவுள்ளது.