கிட்டதட்ட 20 ஆண்டுகளுக்கு முன்பு இந்திய அணி வங்கதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது, அப்போது நீண்ட தலைமுடியுடன் களமிறங்கிய இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் தனது முதல் போட்டியில் டக் அவுட்டாகி வெளியேறினார். என்ன தான் முதல் போட்டியில் டக் அவுட் ஆனாலும் அதற்கு பிறகு தனக்கு கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்தி டிராபி கலெக்டர் ஆனார். அவர் வேறு யாரும் இல்லை ரசிகர்கள் செல்லமாக தல என்று அழைக்கப்படும் மகேந்திர சிங் தோனி. அவர் சர்வதேச கிரிக்கெட்டில் தனது முதல் போட்டியை விளையாடிய தினம் இன்று.
எம்.எஸ் தோனி:
தோனி இந்திய கிரிக்கெட்டின் தலைச்சிறந்த கேப்டன்களுள் ஒருவர் என்று சொன்னால் அது மிகையாகாது. 2007-ல் டி20 உலகக் கோப்பை, 2011-ல் ஒருநாள் உலகக் கோப்பை, 2013-ல் சாம்பியன்ஸ் டிராபி என மூன்று ஐசிசி கோப்பைகளையும், வென்ற ஒரே கேப்டன் என்கிற சாதனைக்கும் ஒரே சொந்தக்காரஅவர் தான்.
மேலும் ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் இந்தியாவை உச்சத்துக்கு அழைத்துச் சென்றார். இது மட்டுமில்லாமல் அவரது தாக்கம் ஃபிரான்சைஸ் கிரிக்கெட் வரை நீண்டது, அவர் சென்னை சூப்பர் கிங்ஸை (CSK) 10 ஐபிஎல் இறுதிப் போட்டிகள் மற்றும் ஐந்து சாம்பியன் பட்டம் வெல்ல அழைத்து சென்றார்.
இதையும் படிங்க: PM Modi letter : ”இப்படி பண்ணிட்டீங்களே தம்பி” இதை நான் எதிர்ப்பார்க்கல! அஷ்வினுக்கு பிரதமர் மோடி கடிதம்
ஆகஸ்ட் 15, 2020 அன்று சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகும், தோனி ஐபிஎல்லில் தொடர்ந்து விளையாடி வருகிறார், சிஎஸ்கே ரசிகர்களால் "தல" என்று அன்பாக அழைக்கப்படும் சென்னையின் செல்லப்பிள்ளையாகவே எம்.எஸ் தோனி இன்றும் உள்ளார்.
தோனியின் கிரிக்கெட் பயணம்:
எம்.எஸ் தோனி 350 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 50.57 சராசரியுடன் 10 சதங்கள் மற்றும் 73 அரைசதங்களுடன் 10,773 ரன்கள் குவித்துள்ளார். டெஸ்டில், அவர் 90 போட்டிகளில் விளையாடி 38.09 சராசரியில் 6 சதங்கள் உட்பட 4,876 ரன்கள் எடுத்தார். மேலும் சர்வதேச டி20 கிரிக்கெட் T20 அவர் 98 போட்டிகளில் விளையாடி 37.60 சராசரியில் 1,617 ரன்கள் எடுத்தார்.
மின்னல் மாஹி:
ஒரு விக்கெட் கீப்பராக, தோனி ஸ்டம்புகளுக்கு பின்னால் மின்னல் வீரன் போல் இருப்பாட், ஒருநாள் போட்டிகளில் 256 கேட்சுகள் மற்றும் 38 ஸ்டம்பிங், டெஸ்டில் 444 டிஸ்மிஸ்கள் (321 கேட்ச்கள் மற்றும் 123 ஸ்டம்பிங்), மற்றும் டி20 போட்டிகளில் 91 டிஸ்மிஸ்ல்கள் (57 கேட்ச்கள் மற்றும் 34 ஸ்டம்பிங்ஸ்) ஆகியவற்றைப் பதிவு செய்தார்.
இதையும் படிங்க: SA vs PAK : பவுமா பாய்ஸ்சை பந்தாடிய பாகிஸ்தான்! முதல் முறையாக தென்னாப்பிரிக்கா ஒயிட் வாஷ்...
சிஎஸ்கே பதிவு:
தோனியின் சர்வதேச கிரிக்கெட்டில் 20 வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், சென்னை சூப்பர் கிங்ஸ் தனது அதிகாரப்பூர்வ X பக்கத்தில் தனது இதயப்பூர்வமான பதிவு ஒன்றை வெளியிட்டது: "சகாப்தம்"- மாஸ்டர்பீஸ்! இந்த நாளில், 20 ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு நீண்ட முடி கொண்ட இளம் பையன் காலடி எடுத்து வைத்தார். அதன் பின்னர் என்ன நடந்தது என்ன என்பது உங்களுக்கே தெரியும் என்று பதிவிட்டுள்ளது
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றாலும் எம்.எஸ் தோனி அடுத்த ஐபிஎல்லில் (uncapped player) விளையாட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.