ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக மெல்போர்னில் நடைப்பெறும் நான்காவது டெஸ்ட் போட்டியில் சில முக்கிய மாற்றங்கள் இருக்கலாம் என்கிற தகவல் வெளியாகியுள்ளது.
பாக்சிங் டே டெஸ்ட்:
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான பாக்சிங் டே டெஸ்ட் போட்டி மெல்போர்னில் டிசம்பர் 26 முதல் தொடங்குகிறது. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை பயிற்சியின் போது இந்திய கேப்டன் ரோஹித் சர்மா காயம் அடைந்தார். பேட்டிங் பயிற்சியின் போது ரோஹித்துக்கு முழங்காலில் காயம் ஏற்பட்டது. ஐந்து போட்டிகள் கொண்ட தொடர் தற்போது 1-1 என சமநிலையில் உள்ளது. இதுபோன்ற சூழ்நிலையில் இந்த போட்டி இரு அணிகளுக்கும் மிகவும் முக்கியமானது.
இதையும் படிங்க: MS Dhoni Debut Match : டிக்கெட் கலெக்டர் டூ டிராபி கலெக்டர்... தோனியின் 20 ஆண்டுக்கால கிரிக்கெட் பயணம்
சம நிலையில் இரு அணிகள்:
ஐந்து போட்டிகள் கொண்ட தொடர் தற்போது 1-1 என சமநிலையில் உள்ளது. இதனால் இந்த போட்டி இரு அணிகளுக்கும் மிகவும் முக்கியமான போட்டியாக பார்க்கப்படுகிறது. இந்த தொடரை இந்திய அணி வெற்றியுடன் தொடங்கியது. இருப்பினும் ஆஸ்திரேலிய அணி அடுத்த டெஸ்டில் 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதன்பின் மூன்றாவது டெஸ்ட் போட்டி டிரா ஆனது. இப்போது மெல்போர்னில், நடைப்பெற உள்ள நான்காவது டெஸ்ட்டில் வெற்றி பெற்று தொடரில் முன்னிலை பெற இரு அணிகளும் நிச்சயம் போராடும்.
இதையும் படிங்க: PV Sindhu Marriage : பி.வி சிந்துவுக்கு டும்.. டும்.. இணையத்தில் வெளியான முதல் புகைப்படம்
இந்திய அணியில் மாற்றம்?
மெல்போர்னில் இந்திய அணி இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்கலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இங்குள்ள ஆடுகளம் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும். மெல்போர்னில் கடைசியாக நடந்த டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது,அந்த போட்டியில் இந்திய அணி இரண்டு சுழற்பந்து வீச்சர்களுடன் களமிறங்கியது.
இதனால் கேப்டன் ரோஹித் சர்மா மீண்டும் அதே உத்தியை கையாலலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர் இருவருக்கும் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முகமது சிராஜ் வெளியேறுவாரா?
இந்தியா இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்கினால் முகமது சிராஜ் மற்றும் ஆகாஷ்தீப் ஆகிய இரு வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவரை நீக்க வேண்டும். இப்படிப்பட்ட சூழ்நிலையில் சிராஜ் இன்னும் இந்தப் பயணத்தில் பழைய ஃபார்மில் வராததால் அவர் வெளியேற்றப்பட வாய்ப்புகள் அதிகம்.
4வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் உத்தேச அணி : யஷஸ்வி ஜெய்ஸ்வால், கேஎல் ராகுல், ஷுப்மான் கில், விராட் கோலி, ரோஹித் சர்மா, ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), நிதிஷ் குமார் ரெட்டி, ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், ஆகாஷ்தீப் மற்றும் ஜஸ்பிரித் பும்ரா.