இந்திய நட்சத்திர பேட்மிண்டன் வீராங்கனை பிவி சிந்துவின் நேற்று திருமணம் செய்து கொண்ட நிலையில் அவரது திருமணத்தின் முதல் புகைப்படம் வெளியாகியுள்ளது.
பி.வி சிந்து திருமணம்:
ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் பிவி சிந்து மற்றும் வெங்கட தட்சாய் திருமணம் ஞாயிற்றுக்கிழமை கோலாகலமாக நடைபெற்றது. உதய்பூரில் ஞாயிற்றுக்கிழமை நடந்த திருமணத்தில் இரு குடும்பத்தினரும் சில முக்கிய விருந்தினர்களும் மட்டுமே கலந்து கொண்டனர். ஹைதராபாத்தை சேர்ந்த வெங்கட தட்சாய், போசிடெக்ஸ் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராகத் உள்ளார். பிவி சிந்துவின் திருமண வரவேற்பு டிசம்பர் 24ஆம் தேதி ஹைதராபாத்தில் நடைபெற உள்ளதாக அவரது குடும்பத்தினர் சமீபத்தில் தெரிவித்தனர்.
முதல் புகைப்படம்:
இந்த நிலையில் இவர்களின் திருமணத்தின் முதல் புகைப்படத்தை கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் எக்ஸ் வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், நேற்று மாலை உதய்பூரில் பேட்மிண்டன் சாம்பியன் பிவி சிந்து மற்றும் வெங்கட தத்தா சாய் திருமண விழாவில் கலந்து கொண்டதில் மகிழ்ச்சி அடைகிறேன், மேலும் தம்பதியரின் புதிய வாழ்க்கைக்கு எனது வாழ்த்துகளையும் ஆசீர்வாதங்களையும் தெரிவித்தேன்." என்று பதிவிட்டிருந்தார்.
பி.வி சிந்துவின் கணவர் யார்?
சிந்துவின் கணவர் வெங்கட தத்தா சாய் தற்போது Posidex டெக்னாலஜியின் ED ஆக உள்ளார். வெங்கட தத்தா சாய் லிபரல் அண்ட் மேனேஜ்மென்ட் கல்வி அறக்கட்டளையில் லிபரல் ஆர்ட்ஸ் அண்ட் சயின்சஸ்/ லிபரல் ஸ்டடீஸில் டிப்ளமோ முடித்தார். 2018 இல் ஃபிளேம் பல்கலைக்கழகத்தில் இளங்கலை வணிக நிர்வாகத்தில் முடித்தார்.
பெங்களூரில் உள்ள இன்டர்நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் இன்ஃபர்மேஷன் டெக்னாலஜியில் டேட்டா சயின்ஸ் மற்றும் மெஷின் லேர்னிங்கில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார். JSW இல் கோடைகால பயிற்சியாளராகவும் ஆலோசகராகவும் பணியாற்றினார். 2019 முதல், அவர் Posidex இல் நிர்வாக இயக்குநராகப் பணியாற்றி வருகிறார்.
இதையும் படிங்க: MS Dhoni Debut Match : டிக்கெட் கலெக்டர் டூ டிராபி கலெக்டர்... தோனியின் 20 ஆண்டுக்கால கிரிக்கெட் பயணம்
இரண்டு பதக்கங்கள்:
ஒலிம்பிக் போட்டியில் இரண்டு பதக்கங்களை வென்ற இந்திய வீராங்கனை என்ற பெருமையை பெற்றார் பி.வி.சிந்து. சிந்து 2016 ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளியும், 2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலமும் வென்றார். 2017 இல் உலக தரவரிசையில் 2வது இடத்தைப் பிடித்தார். சமீபத்தில் நடைபெற்ற சையத் மோடி சர்வதேச 2024 பேட்மிண்டன் போட்டியில் பிவி சிந்து சாம்பியன் ஆனார்.