IND vs WI 2nd T20 LIVE: பரபரப்பான ஆட்டத்தில் இந்தியா 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி...! டி20 தொடரை வென்றது...!
IND vs WI 2nd T20 LIVE Updates : கொல்கத்தாவில் உள்ள ஈடன்கார்டன் மைதானத்தில் இந்தியா- மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதும் இரண்டாவது டி20 போட்டி 7 மணிக்கு தொடங்க உள்ளது.
கடைசி ஓவரில் ரோவ்மென் பாவெல் 2 சிக்ஸர்களை பறக்கவிட்டாலும், கடைசி இரு பந்துகளை ஹர்ஷல் படேல் சிறப்பாக வீசியதால் இந்தியா 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் இந்திய அணி டி20 தொடரை வென்றது.
வெஸ்ட் இண்டீஸ் அணியின் வெற்றிக்கு 6 பந்தில் 25 ரன்கள் எடுத்தால் தேவைப்படுகிறது. இதனால், ஆட்டத்தில் விறுவிறுப்பு ஏற்பட்டுள்ளது.
நிகோலஸ் பூரண் மற்றும் ரோவ்மென் பாவெல் பார்ட்னர்ஷிப் 100 ரன்களை எட்டியுள்ளது. அப்போது, நிகோலஸ் பூரண் 62 ரன்கள் எட்டிய நிலையில் புவனேஷ்குமார் பந்தில் ரவி பிஷ்னோயிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
வெஸ்ட் இண்டீஸ் அணியின் ரோவ்மென் பாவெல் - நிகோலஸ் பூரண் ஜோடி அபாரமாக ஆடி வருவதால் அந்த அணியின் வெற்றிக்கு 16 பந்தில் 35 ரன்கள் தேவைப்படுகிறது. இதனால், ஆட்டத்தில் விறுவிறுப்பு ஏற்பட்டுள்ளது.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக அதிரடியாக ஆடி வரும் டேஞ்சர் பேட்ஸ்மேன் ரோவ்மேன் பாவெல் கொடுத்து அரிய கேட்ச் வாய்ப்பை புவனேஷ்குமார் கோட்டைவிட்டார்.
187 ரன்கள் இலக்கை நோக்கி ஆடி வரும் வெஸ்ட் இண்டீஸ் அணியின் நிகோலஸ் பூரண் மற்றும் ரோவ்மென் பாவல் சிறப்பாக ஆடி வருகின்றனர். இதனால், வெஸ்ட் இண்டீஸ் வெற்றிக்கு 31 பந்தில் 63 ரன்கள் தேவைப்படுகிறது.
இமாலய இலக்கை நோக்கி ஆடிவரும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு, அந்த அணியின் நம்பிக்கை வீரர் நிகோலஸ் பூரண் அதிரடியாக ஆடி ரன்களை குவித்து வருகிறார். அவர் தற்போது வரை 21 பந்தில் 37 ரன்கள் எடுத்துள்ளார்.
வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க வீரர் பிரண்டன்கிங் இளம் சுழற்பந்துவீச்சாளர் ரவி பிஷ்னோய் பந்தில் சிக்கி 22 ரன்னில் வெளியேறினார்.
இந்திய அணி நிர்ணயித்துள்ள 187 ரன்கள் இலக்குடன் ஆடி வரும் வெஸ்ட் இண்டீஸ் அணி 7 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 55 ரன்களை எடுத்துள்ளது.
இந்திய அணி நிர்ணயித்துள்ள 187 ரன்கள் இலக்கை நோக்கி ஆடி வரும் வெஸ்ட் இண்டீஸ் அணி 5.5 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 41 ரன்களை எடுத்துள்ளது. அந்த அணியின் தொடக்க வீரர் கைல் மேயர்ஸ் 9 ரன் எடுத்த நிலையில் சாஹல் பந்தில் ஆட்டமிழந்தார்.
முதலில் பேட் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 186 ரன்களை குவித்துள்ளது. கடைசி கட்டத்தில் வெங்கடேஷ் அய்யர், ரிஷப் பண்ட் அதிரடியாக ஆடினர்.
இந்திய அணிக்காக 5வது விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த ரிஷப்பண்ட் - வெங்கடேஷ் அய்யர் ஜோடியின் அதிரடி ஆட்டத்தால் இந்திய அணி 17வது ஓவரில் 151 ரன்களை எட்டியது.
இந்திய அணி 15 ஓவர்களில் 124 ரன்களை 4 விக்கெட்டுகளை இழந்து எடுத்துள்ளது. ரிஷப் பண்ட் - வெங்கடேஷ் அய்யர் ஜோடி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்துமா? என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்ப்பில் உள்ளனர்
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட்கோலி சிறப்பாக ஆடி அரைசதம் அடித்துள்ளார். ஆனால், அரைசதம் அடித்த இரண்டாவது பந்திலே ராஸ்டன் சேஸ் பந்தில் போல்டாகினார்.
கடந்த போட்டியில் இந்திய அணிக்காக அதிரடியாக இந்திய கேப்டன் ரோகித்சர்மா சுழற்பந்துவீச்சாளர் ராஸ்டன் சேஸ் பந்தில் பிரண்டன் கிங்கிடம் கேட்ச் கொடுத்து 19 ரன்னில் அவுட்டானார். தற்போது சூர்யகுமார் யாதவ் களமிறங்கி உள்ளார்.
இந்திய அணியின் தொடக்க வீரரான இஷான்கிஷான் 2 ரன்களிலே ஆட்டமிழக்க அடுத்துஜோடி சேர்ந்துள்ள ரோகித்சர்மா - விராட்கோலி பொறுப்புடன் ஆடி வருகிறது.
இந்திய அணியின் தொடக்க வீரர் இஷான்கிஷான் 2 ரன்னில் ஆட்டமிழந்தார். காட்ரல் வீசிய பந்தில் மேயர்சிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி விவரம்:
ரோகித் சர்மா,இஷான் கிஷன், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், வெங்கடேஷ் ஐயர், ஹர்ஷல் பட்டேல், தீபக் சாஹர், ரிஷப் பண்ட், புவனேஷ்வர் குமார், ரவி பிஷ்னோய் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் மீண்டும் ருதுராஜ் கெய்க்வாட் இடம்பெறவில்லை.
மேற்கிந்திய தீவுகள் கேப்டன் கீரன் பொல்லார்ட் தனது 100வது டி20 போட்டியில் இன்று களமிறங்குகிறார்.
இரண்டாவது டி20 போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி டாஸ் வென்றுள்ளது. அந்த அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது. இதனால், இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.
கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானம் பேட்டிங்கிற்கு சாதகமான மைதானம் என்பதால், டாஸ் வெல்லும் அணி நிச்சயம் சேசிங் செய்யவே விரும்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இன்னும் சற்று நேரத்தில் போட்டி தொடங்க உள்ள நிலையில் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இந்திய வீரர்களும், மேற்கிந்திய வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
Background
பொல்லார்ட் தலைமையிலான மேற்கிந்திய அணியும், ரோகித்சர்மா தலைமையிலான இந்திய அணியும் மோதும் இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டி இன்று இரவு 7 மணிக்கு கொல்கத்தாவின் ஈடன்கார்டன் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில், வெற்றி பெற்று தொடரை வெல்லும் முனைப்பில் இந்திய அணி உள்ளது. அதேசமயத்தில், கடந்த போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி இந்திய அணிக்கு கடும் சவால் அளித்தது. இதனால், இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்யும் முனைப்பில் மேற்கிந்திய தீவுகள் அணி வீரர்கள் ஆடுவார்கள். மேற்கிந்திய தீவுகள் அணியுடன் ஒப்பிடுகையில் இந்திய அணி பலமாகவே உள்ளது.
இருப்பினும், இந்திய கேப்டன் விராட்கோலியின் பார்ம் மிகுந்த வேதனை அளிக்கும் விதமாகவே உள்ளது. அவர் மட்டும் மீண்டும் பார்முக்கு திரும்பிவிட்டால் இந்திய அணி நிச்சயம் மிகப்பெரிய ரன்களை குவிக்கும். கேப்டன் ரோகித் சர்மா கடந்த போட்டியிலே அதிரடி காட்டினார். இந்த போட்டியிலும் அவரது அதிரடி தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சூர்யகுமார் யாதவ், வெங்கடேஷ் அய்யரும் தங்களது அதிரடியை தொடருவார்கள் என்று எதிர்பார்க்கலாம். அறிமுக வீரர் ரவி பிஷ்னோய் கடந்த போட்டியில் அசத்தினார். இந்த போட்டியிலும் அவரது அசத்தல் பந்துவீச்சு தொடரும் என்று எதிர்பார்க்கலாம்.
மேற்கிந்திய தீவுகள் அணி அவர்கள் நாட்டில் இங்கிலாந்தை 3-2 என்ற கணக்கில் வென்றதால் இந்திய அணியையும் வீழ்த்தி தொடரை தங்கள் வசம் கொண்டு செல்ல முயற்சிப்பார்கள். நிகோலஸ் பூரண், பொல்லார்ட், ஓடீன் ஸ்மித் அதிரடி தொடர்ந்தால் அந்த அணி இமாலய ரன்களை குவிக்கும். கொல்கத்தா மைதானம் பேட்டிங்கிற்கு நன்கு ஒத்துழைக்கும் மைதானம் என்பதால் ரசிகர்களுக்கு பேட்டிங் விருந்து உள்ளது என்றே கூறலாம். இரு அணிகளும் இதுவரை 18 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் இந்திய அணி 11 டி20 போட்டியில் வெற்றி பெற்றுள்ளது. 6 போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி பெற்றுள்ளது. ஒரு போட்டியில் எந்த முடிவும் கிடைக்கவில்லை.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -