IND vs SA LIVE Score: 83 ரன்களுக்கு சுருண்ட தென்னாப்ரிக்கா - இந்திய அணி 8வது போட்டியிலும் அபார வெற்றி

IND vs SA Score Live Updates: இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பை போட்டி குறித்த அப்டேட்களை உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ABP NADU Last Updated: 05 Nov 2023 08:43 PM
இந்தியா அபார வெற்றி

தென்னாப்ரிக்கா அணி 83 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆன நிலையில், இந்திய அணி 243 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

5வது விக்கெட்டை வீழ்த்திய ஜடேஜா

ரபாடாவை ஆட்டமிழக்கச் செய்ததன் மூலம், இந்த போட்டியில் 5 விக்கெட்ஸ் எடுத்து அசத்தினார் ஜடேஜா

8வது விக்கெட் காலி

30 பந்துகளை எதிர்கொண்டு 14 ரன்களை சேர்த்த ஜான்சென், குல்தீப் யாதவ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

தள்ளாடும் தென்னாப்ரிக்கா

22 ஓவர்கள் முடிவில் தென்னாப்ரிக்கா அணி 7 விக்கெட்டுகளை இழந்து 70 ரன்களை மட்டுமே சேர்த்துள்ளது.

சிதறும் ஸ்டம்புகள்..

ஜடேஜா பந்துவீச்சில் கிளீன் போல்டானார் கேஷவ் மஹாராஜ்

மில்லரை கில் செய்த ஜடேஜா..

மில்லர் 11 ரன்கள் மட்டும் சேர்த்து ஜடேஜா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

வராத ரன்கள்..

16 ஓவர்கள் முடிவில் தென்னாப்ரிக்கா அணி 59 ரன்களை சேர்த்துள்ளது.

50 ரன்களை கடந்த தென்னாப்ரிக்கா..

15 ஓவர்கள் முடிவில் தென்னாப்ரிக்கா அணி 52 ரன்களை சேர்த்துள்ளது.

பாதி விக்கெட்டுகள் சரிந்தது..

14 ஓவர்கள் முடிவில் தென்னாப்ரிக்கா அணி 5 விக்கெட்டுகளை இழந்து 42 ரன்களை சேர்த்துள்ளது.

சொல்லி அடிக்கும் ஷமி

வன் டெர் டசன் 32 பந்துகளை எதிர்கொண்டு வெறும் 13 ரன்களை மட்டும் சேர்த்து ஷமி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

4வது விக்கெட்டை இழந்த தென்னாப்ரிக்கா..

அதிரடி வீரரான கிளாசென் 11 பந்துகளை எதிர்கொண்டு வெறும் 1 ரன் மட்டும் எடுத்து, ஜடேஜா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 

முடிந்தது பவர்பிளே..

பவர்பிளேயின் 10 ஓவர்கள் முடிவில் தென்னாப்ரிக்கா அணி 2 விக்கெட்டுகளை இழந்து 35 ரன்களை எடுத்துள்ளது.


 


 

ஷமி அபாரம்..

நட்சத்திர வீரரான மார்க்ரம் வெறும் 9 ரன்களை மட்டுமே எடுத்து ஷமி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

கேப்டன் பவுமா கிளீன் போல்ட்..

ஜடேஜா பந்துவீச்சில் கிளீன் போல்டானார் கேப்டன் பவுமா

முடிகிறது பவர்பிளே..

8 ஓவர்கள் முடிவில் தென்னாப்ரிக்கா அணி 21 ரன்களை சேர்த்துள்ளது.

நிதானமான ஆட்டம்..

7 ஓவர்கள் முடிவில் தென்னாப்ரிக்கா அணி 21 ரன்களை சேர்த்துள்ளது.

நிதான ஆட்டம்..

தென்னாப்ரிக்கா அணி முதல் 5 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 17 ரன்களை சேர்த்துள்ளது. 

7 ரன்கள் மட்டுமே

3 ஓவர்கள் முடிவில் தென்னாப்ரிக்கா அணி 7 ரன்களை மட்டுமே சேர்த்துள்ளது.

மெயின் தலையே போயிருச்சு..!

அபாரமான ஃபார்மில் உள்ள டி காக், வெறும் 5 ரன்கள் மட்டும் எடுத்து சிராஜ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

முடிந்தது முதல் ஓவர்..

முதல் ஓவர் முடிவில் தென்னாப்ரிக்கா அணி 2 ரன்களை சேர்த்துள்ளது.

களமிறங்கியது தென்னாப்ரிக்கா..

327 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கியது தென்னாப்ரிக்கா அணி

சிறப்பாக செயல்பட்ட வீரர்கள்..

இந்தியா சார்பில் கோலி 11 ரன்கள் சேர்த்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். தென்னாப்ரிக்கா சார்பில் கேசவ் மகாராஜ் 10 ஓவர்கள் வீசி 30 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட்டை சாய்த்தார்.

327 ரன்கள் இலக்கு..

50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்து 326 ரன்களை சேர்த்தது.

சச்சின் சாதனையை சமன் செய்த கோலி

இன்று தனது 35வது பிறந்தநாளை கொண்டாடும் கோலி, ஒருநாள் போட்டிகளில் 49வது சதத்தை விளாசியுள்ளார். இதன் மூலம், ஒருநாள் போட்டிகளில் அதிக சதம் விளாசிய வீரர் என்ற சச்சினின் சாதனையை கோலி சமன் செய்துள்ளார்.


 

300 ரன்களை எட்டிய இந்தியா

48 ஓவர்களில் 300 ரன்களை எட்டியது இந்தியா

சதத்தை பூர்த்தி செய்வாரா கோலி?

நடப்பு உலகக் கோப்பையில் ஏற்கனவே 4 முறை சதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்ட கோலி, இன்றைய போட்டியிலாவது தனது 49வது ஒருநாள் சதத்தை பூர்த்தி செய்வாரா என எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன.

46 ஓவர்கள் காலி..

46 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 285 ரன்களை சேர்த்துள்ளது.

சூர்யகுமார் யாதவ் அவுட்..

13 பந்துகளில் 22 ரன்களை சேர்த்து ஆட்டமிழந்தார் சூர்யகுமார் யாதவ்

90-களில் கோலி..

விராட் கோலி 112 பந்துகளை எதிர்கொண்டு 91 ரன்களை சேர்த்துள்ளார்.

5 ஓவர்கள் மட்டுமே மிச்சம்..

45 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 4 விக்கெட்டுகளை இழந்து 278 ரன்களை குவித்துள்ளது. கோலி 89 ரன்களுடனும், சூர்யகுமார் யாதவ் 17 ரன்களையும் சேர்த்து விளையாடி வருகின்றனர்.

250 ரன்களை கடந்த இந்தியா

44 ஓவர்கள் முடிவில் இந்தியா 4 விக்கெட்டுகளை இழந்து 262 ரன்களை சேர்த்துள்ளது.

கே.எல். ராகுல் அவுட்..

நிதானமாக விளையாடி வந்த கே.எல். ராகுல் 17 பந்துகளில் 8 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.

தடுமாறும் இந்தியா

42 ஓவர்கள் முடிவில் 249 ரன்களை மட்டுமே சேர்த்துள்ளது.

10 ஓவர்கள் மட்டுமே மிச்சம்..!

40 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 239 ரன்களை சேர்த்துள்ளது.

29 ஓவர்கள் முடிந்தது..

29 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்து 236 ரன்களை சேர்த்துள்ளது.

சதத்தை தவறவிட்ட ஸ்ரேயாஸ்

பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்ரேயாஸ் அய்யர் 87 பந்துகளில் 77 ரன்களை சேர்த்து, நிகிடி பந்துவீச்சில் கேட்ச் முறையில் ஆட்டமிழந்தார்.

250 ரன்களை கடக்குமா?

36 ஓவர்களில் இந்திய அணி 223 ரன்களை எடுத்துள்ளது. 40 ஓவர்களுக்குள் இந்திய அணி 250 ரன்களை எட்டுமா?

200 ரன்களை கடந்த இந்தியா..

34 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 213 ரன்களை சேர்த்துள்ளது.

கூடும் ரன் ரேட்..

அடித்து ஆடி ரன் சேர்க்க தொடங்கியுள்ளது கோலி - ஸ்ரேயாஸ் அய்யர் கூட்டணி

200 ரன்களை நெருங்கும் இந்தியா

32 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 196 ரன்களை சேர்த்துள்ளது.

100 ரன்கள் பார்ட்னர்ஷிப்..

31 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 193 ரன்களை சேர்த்துள்ளது. கோலி-ஸ்ரேயாஸ் அய்யர் கூட்டணி 100 ரன்களை சேர்த்துள்ளது.

அரைசதம் நெருங்கும் ஸ்ரேயாஸ்..

நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ஸ்ரேயாஸ் அய்யர், 64 பந்துகளில் அரைசதம் கடந்தார்.

பிறந்தநாளில் அரைசதம்

இன்று 35வது பிறந்தநாளை கொண்டாடும் கோலி தென்னாப்ரிக்கா அணிக்கு எதிராக 67 பந்துகளில் அரைசதம் விளாசினார்.

50-ஐ நெருங்கும் கோலி

28 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 163 ரன்களை சேர்த்துள்ளது. கோலி 49 ரன்களுடன் களத்தில் உள்ளார்,

150 ரன்களை நெருங்கும் இந்தியா..

இந்திய அணி 150 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 143 ரன்களை சேர்த்துள்ளது. கோலி 42 ரன்களுடனும், ஸ்ரேயாஸ் அய்யர் 24 ரன்களுடன் களத்தில் உள்ளனர்.

133 ரன்கள்..

22 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 133 ரன்களை எடுத்துள்ளது.

20 ஓவர்கள் முடிந்தது..

20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 2 விக்கெட்டுகளை இழந்து 124 ரன்களை சேர்த்துள்ளது.

18 ஓவர்கள் கதம்..

18 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 118 ரன்களை சேர்த்துள்ளது.

குறைந்த ரன் வேகம்..

அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகளை இழந்ததை தொடர்ந்து இந்திய அணியின் ரன் வேகம் குறைந்துள்ளது.

நிதான ஆட்டம்..

16 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 107 ரன்களை சேர்த்துள்ளது.

15 ஓவர்கள் முடிந்தது..

15 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 105 ரன்கள் சேர்த்துள்ளது.

90+களில் இந்தியா..

12 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 96 ரன்களை எடுத்துள்ளது.

முக்கிய விக்கெட்டை இழந்த இந்தியா..

நிதானமாக விளையாடி வந்த கில் 24 பந்துகளில், 23 ரன்கள் சேர்த்து கேசவ் மஹாராஜ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

100 ரன்களை நெருங்கும் இந்தியா..!

முதல் 10 ஓவர்கள் முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 91 ரன்களை எடுத்துள்ளது.

முடிவுக்கு வரும் பவர்பிளே..!

9 ஓவர்கள் முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 82 ரன்களை குவித்துள்ளது.

அடித்து ஆடும் இந்தியா..

ஒரு விக்கெட் சரிந்தாலும் தொடர்ந்து அதிரடி காட்டும் இந்தியா 8 ஓவர்கள் முடிவில் 72 ரன்களை சேர்த்துள்ளது.

அடுத்து என்ன?

7 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 68 ரன்களை சேர்த்துள்ளது.

களமிறங்கினார் கோலி..

ரோகித் சர்மா ஆட்டமிழந்ததை அடுத்து, கோலி களமிறங்கியுள்ளார். 6 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 62 ரன்களை எடுத்துள்ளது.

அதிரடியாக விளையாடி வந்த ரோகித் அவுட்..

அதிரடியாக விளையாடி வந்த ரோகித் சர்மா 24 பந்துகளில் 50 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.

பட்டையை கிளப்பும் இந்தியா..!

5 ஓவர்கள் முடிவில் இந்திய அணி அதிரடியாக ஆடி 61 ரன்களை சேர்த்துள்ளது.

அரைசதம் நெருங்கும் இந்திய அணி..

4 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 45 ரன்களை சேர்த்துள்ளது.

அதிரடியான பேட்டிங்..

3 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 35 ரன்களை சேர்த்துள்ளது.

வாரிக் கொடுக்கும் தென்னாப்ரிக்கா..!

2 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 22 ரன்களை சேர்த்துள்ளது. இதில் எக்ஸ்ட்ராக்களாக மட்டுமே 8 ரன்களை பந்துவீச்சாளர்கள் வழங்கியுள்ளனர்.

முடிந்தது முதல் ஓவர்

முதல் ஓவர் முடிவில் 5 ரன்களை சேர்த்தது இந்திய அணி

பவுண்டரியுடன் தொடங்கிய கணக்கு

முதல் ஓவரின் நான்காவது பந்தில் பவுண்டரி விளாசினார் ரோகித்

தொடங்கியது போட்டி..

கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் போட்டியை, இந்திய அணி பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மணி அடித்து தொடங்கி வைத்தார்.

வெற்றியை தொடருமா இந்தியா..?

இதுவரை விளையாடிய 7 போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்றுள்ள நிலையில், இன்றைய போட்டியிலும் இந்திய அணி வெல்லுமா? நடப்பு உலகக் கோப்பையில் தோல்வியையே சந்திக்காத அணி என்ற பெருமையை தொடருமா?

கோலிக்கு கிடைக்குமா பரிசு..

கிரிக்கெட் உலகின் கிங் என போற்றப்படும் கோலியின் 35வது பிறந்தநாளில் நடைபெறும் போட்டியில், தென்னாப்ரிக்கா அணியை வீழ்த்தி, அந்த வெற்றியை கோலிக்கு இந்திய அணி பரிசாக அளிக்குமா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

IND vs SA LIVE Score: தென்னாப்பிரிக்கா அணியின் பிளேயிங் 11..!

குயின்டன் டி காக் (விக்கெட் கீப்பர்), டெம்பா பவுமா (கேப்டன்), ரஸ்ஸி வான் டெர் டுசென், ஐடன் மார்க்ரம், ஹென்ரிச் கிளாசென், டேவிட் மில்லர், மார்கோ ஜான்சன், கேசவ் மகாராஜ், தப்ரைஸ் ஷம்சி, ககிசோ ரபாடா, லுங்கி என்கிடி

IND vs SA LIVE Score: இந்திய அணியின் பிளேயிங் 11..!

ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மான் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல் (விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா, குல்தீப் யாதவ், முகமது சிராஜ்

IND vs SA LIVE Score: டாஸ் வென்ற இந்திய பேட்டிங் தேர்வு.. அதிவேக பந்துவீச்சால் அசத்துமா தென்னாப்பிரிக்கா..?

தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. 

Background

உலகக் கோப்பை 2023 போட்டி இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா இடையே கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டனில் நடைபெறும். இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. ஆனாலும் அவன் பார்வை வெற்றியை நோக்கியே இருக்கும். இந்தப் போட்டியில் தென்னாப்பிரிக்கா சிறப்பாகச் செயல்பட்டது. ஆனால், இந்தியாவுக்கு எதிராக வெற்றி பெறுவது அவருக்கு எளிதாக இருக்காது. அந்த அணி பல போட்டிகளில் 300 ரன்களை தாண்டியது. ஆனால் இந்திய பந்துவீச்சாளர்களுக்கு இது கொஞ்சம் கடினமாக இருக்கும். இந்தியா இதுவரை அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளதுடன், அதன் வீரர்களும் ஃபார்மில் உள்ளனர். இந்திய அணியும் கடும் போட்டியை சந்திக்கும். ஆப்பிரிக்க அணி 7 போட்டிகளில் 6ல் வெற்றி பெற்றுள்ளது.


இந்த உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்தை விட பெரிய அணிகளை இந்தியா தோற்கடித்துள்ளது. 7 போட்டிகளில் விளையாடி அனைத்திலும் வெற்றி பெற்றுள்ளார். ஆனால் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான வெற்றி எளிதானது அல்ல. அணியின் ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியா காயம் காரணமாக முழு போட்டியிலிருந்தும் வெளியேறினார். பாண்டியா காரணமாக அந்த அணி சமநிலையில் இருந்தது. ஆனால் இப்போது இந்தியா பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம். அவர் ஐந்து பந்து வீச்சாளர்களுடன் களம் இறங்க வேண்டும். தென்னாப்பிரிக்க அணி மிகவும் வலுவான மற்றும் ஃபார்மில் உள்ளது. அதனால் கடும் போட்டி இருக்கும்.


தென்னாப்பிரிக்க அணி புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது. இதுவரை 7 போட்டிகளில் விளையாடி 6 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளார். ஆப்பிரிக்க அணி 12 புள்ளிகளுடன் உள்ளது. நெதர்லாந்து தனது ஒரே போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியது. பெரிய அணிகளை அதிக வித்தியாசத்தில் தோற்கடித்துள்ளார். ஆப்பிரிக்க அணி 134 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது. தென்னாப்பிரிக்க பேட்ஸ்மேன்களுக்கு இணையாக பந்துவீச்சாளர்களும் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். எனவே, இந்த போட்டி பார்வையாளர்களுக்கு சுவாரஸ்யமாக இருக்கும்.


கணிக்கப்பட்ட இரு அணிகளின் விவரம்:


இந்தியா: சுப்மன் கில், ரோகித் சர்மா (கேப்டன்), விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல் (விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ்.


தென்னாப்பிரிக்கா: டெம்பா பவுமா (கேப்டன்), குயின்டன் டி காக் (வி.கே.), ரஸ்ஸி வான் டெர் டுசென், ஐடன் மார்க்ரம், ஹென்ரிச் கிளாசென், டேவிட் மில்லர், மார்கோ ஜான்சன், ககிசோ ரபாடா, கேசவ் மகராஜ், லுங்கி என்கிடி, தப்ரைஸ் ஷம்சி.

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.