இந்தியா - தென்னாப்பிரிக்கா:


ஐசிசி உலகக் கோப்பையில் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணியிடம் தோல்வியை தழுவியது இந்திய அணி. இதனால் இந்திய அணி வீரர்கள் மட்டுமின்றி ரசிகர்களும் சோகத்தில் மூழ்கினார்கள். உலகக் கோப்பை போட்டி முடிந்த பின்னர் நடைபெற்ற போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவைத்தான் எதிர்கொண்டது.


அதன்படி, விராட் கோலி, ரோஹித் சர்மா, முகமது ஷமி, முகமது சிராஜ், கே.எல்.ராகுல் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் இல்லாமல் இளம் வீரர்களுடன் களம் இறங்கியது சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி. 5 டி 20 போட்டிகள் கொண்ட அந்த தொடரில் 4-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது இந்தியா. 


டி20:


இச்சூழலில், தென்னாப்பிரிக்காவிற்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி அங்கு 3 டி 20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடிவருகிறது. அதன்படி, முதல் போட்டி நேற்று (டிசம்பர் 10) டர்பனில் தொடங்கியது. ஆனால், அங்கு நிலவிய மழை காரணமாக டாஸ் போடாமல் ஆட்டம் ஒத்தி வைக்கப்பட்டது. மழை தொடர்ந்து பெய்ததால் ஆட்டம் முழுமையாக ரத்து செய்யப்பட்டது.


இச்சூழில், இந்த டி 20 தொடரின் இரண்டாவது போட்டி நாளை (டிசம்பர் 12) ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த போட்டியை வெற்றியுடன் தொடங்க வேண்டும் என்ற முனைப்பில் இருக்கிறது சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி. அதேநேரம், தங்கள் சொந்த நாட்டில் நடைபெறும் போட்டி என்பதால் தென்னாப்பிரிக்க அணியும் முழு பலத்துடன் களம் காண்கிறது. 


மழைக்கு வாய்ப்பு:


அந்த வகையில் இரு அணி வீரர்கள் மற்றும் ரசிகர்கள்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த போட்டி தென்னாப்பிரிக்காவின் போர்ட் எலிசபெத் நகரில் உள்ள செயின்ட் ஜார்ஜ் கிரிக்கெட் மைதானத்தில் இந்திய நேரப்படி நாளை இரவு 8.30 மணிக்கு நடைபெற உள்ளது. அதேநேரம் இந்த ஆட்டத்தின் போதும் மழையின் குறிக்கீடு இருக்கும் என்ற அச்சம் ரசிகர்களிடம் எழுந்துள்ளது.


அதேபோல், போட்டி நடைபெறும் போர்ட் எலிசபெத் நகரில் டிசம்பர் 12ஆம் தேதி சராசரியாக 30% மழை பெய்வதற்கு வாய்ப்புள்ளதாக அங்குள்ள வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், மழை படிப்படியாக குறைவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. 
 இருப்பினும் உள்ளூர் நேரப்படி மாலை 6 மணிக்கு தான் போட்டி துவங்குகிறது. ஆனால் அப்போது 32% என்றளவுக்கு குறையும் மழையின் அளவு இரவு 7 மணி முதல் 10 மணி வரை சராசரியாக 5% மட்டுமே பெய்வதற்கு வாய்ப்புள்ளது. இதனால் போட்டி தாமதமாக தொடங்கப்படலாம் என்று கூறப்படுகிறது. அப்படி மழை பெய்வது போன்ற சூழல் ஏற்பட்டால் ஓவர்கள் குறைக்கப்பட்டு ஆட்டம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


மேலும் படிக்க: U19 World Cup 2024: வந்தாச்சு அடுத்த உலகக் கோப்பை கிரிக்கெட்; U19-க்கு அட்டவணை வெளியிட்ட ஐசிசி


மேலும் படிக்க: IND vs ENG Test: 5 டெஸ்ட் போட்டிகள்! இந்திய வரப்போகும் இங்கிலாந்து அணியில் யார்? யார்?