ஐசிசி நடத்தும் 19 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்டுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் தென்னாப்பிரிக்காவில் நடைபெறவுள்ள இந்த உலகக் கோப்பை கிரிக்கெட் பிப்ரவரி 11ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. லீக் போட்டிகள், ப்ளே ஆஃப் போட்டிகள், சூப்பர் 6 போட்டிகள், அரையிறுதிப் போட்டிகள் மற்றும் இறுதிப் போட்டி என மொத்தம் 41 போட்டிகள் நடைபெறவுள்ளது. மொத்தம் 16 அணிகள் களமிறங்கவுள்ள இந்த உலகக் கோப்பையில் மொத்தம் 4 குழுக்கள் பிரிக்கப்பட்டுள்ளது.
அட்டவணைப்படி இந்தியா தனது உலகக் கோப்பை போட்டியை ஜனவரி 20 ஆம் தேதி தென்னாப்பிரிக்காவின் ப்ளூம்ஃபோன்டைனில் வங்கதேசத்துக்கு எதிராக தொடங்கவுள்ளது.
கிரிக்கெட் நிர்வாகத்தில் அரசியல் தலையீட்டிற்காக ஐ.சி.சி இலங்கை அணியை ஒட்டுமொத்தமாக இடைநீக்கம் செய்தது. இதன் பின்னர் போட்டி இலங்கையிலிருந்து தென்னாப்பிரிக்காவிற்கு மாற்றப்பட்டது. இதனால் போட்டி அட்டவணையில் மாற்றம் செய்ய வேண்டி இருந்ததால் ஐசிசி தற்போது புதிய அட்டவணையை வெளியிட்டுள்ளது. வங்கதேசம், அயர்லாந்து மற்றும் அமெரிக்காவுடன் இந்தியா குரூப் ஏ பிரிவில் இடம் பெற்றுள்ளது.
வங்கதேசத்துக்கு எதிரான போட்டிக்குப் பிறகு, இந்தியா ஜனவரி 25 ஆம் தேதி அயர்லாந்தை ப்ளூம்ஃபோன்டெய்னில் எதிர்கொள்கிறது, மேலும் ஜனவரி 28 ஆம் தேதி தனது கடைசி லீக் ஆட்டத்தில் அதே மைதானத்தில் அமெரிக்காவை எதிர்த்து களமிறங்கவுள்ளது.
மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்த போட்டியானது ஜனவரி 19 அன்று இரட்டை போட்டிகளுடன் தொடங்குகின்றது. அயர்லாந்து அமெரிக்காவை ப்ளூம்ஃபோன்டைனில் எதிர்கொள்ளவுள்ளது. அதே நேரத்தில் மேற்கிந்திய தீவுகள் மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகியவை போட்செஃப்ஸ்ட்ரூமில் உள்ள ஜேபி மார்க்ஸ் ஓவலில் மோதவுள்ளது.
இந்தியாவின் அட்டவணை:
ஜனவரி 20: இந்தியா vs வங்கதேசம்.
ஜனவரி 25: இந்தியா vs அயர்லாந்து
ஜனவரி 28: இந்தியா vs அமெரிக்கா
மற்ற குழுக்கள்
குழு B: இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், ஸ்காட்லாந்து.
குரூப் சி: ஆஸ்திரேலியா, இலங்கை, நமீபியா, ஜிம்பாப்வே.
குழு D: ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், நியூசிலாந்து, நேபாளம்.
ரிசர்வ் டேக்கள்
இந்த உலகக் கோப்பை அட்டவணையில் நாக் அவுட் போட்டிகளான அதாவது, இரண்டு அரையிறுதிப் போட்டிகள் மற்றும் இறுதிப் போட்டிகள் ரிசர்வ் டேக்களுடன் அட்டவணை தயார் செய்யப்பட்டுள்ளது.