IND vs PAK Asia Cup 2022 LIVE: கடைசி ஓவரில் சிக்ஸர் அடித்து இந்தியாவை வெற்றி பெற வைத்த ஹர்திக்..!

IND vs PAK Asia Cup 2022 LIVE Score: ஆசிய கோப்பையில் இன்று நடைபெறும் இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஸ்கோர் நிலவரங்களை உடனுக்குடன் கீழே காணலாம்.

சுகுமாறன் Last Updated: 28 Aug 2022 11:42 PM
கடைசி ஓவரில் சிக்ஸர் அடித்து இந்தியாவை வெற்றி பெற வைத்த ஹர்திக்..!

கடைசி ஓவரின் 4வது பந்தில் சிக்ஸர் அடித்து ஹர்திக் பாண்ட்யா சிக்ஸர் அடித்து இந்தியாவை அபார வெற்றி பெற வைத்தார். 

3 பந்தில் 6 ரன்கள் தேவை..! இந்தியா வெல்லுமா..?

கடைசி ஓவரில் ஜடேஜா ஆட்டமிழந்த நிலையில், இந்தியாவின் வெற்றிக்கு 3 பந்துகளில் 6 ரன்கள் தேவை என்ற சூழல் ஏற்பட்டது. 

கடைசி 2 ஓவர்களில் 21 ரன்கள் தேவை..! இந்தியாவை வெற்றி பெற வைப்பார்களா ஹர்திக் - பாண்ட்யா ஜோடி..?

இந்தியாவின் வெற்றிக்கு கடைசி 12 பந்துகளில் 21 ரன்கள் தேவைப்படுகிறது. களத்தில் ஹர்திக் பாண்ட்யாவும், ஜடேஜாவும் இருப்பதால் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. 

4 ஓவர்களில் 41 ரன்கள் தேவை..! வெற்றி பெறுமா இந்தியா...?

இந்தியாவின் வெற்றிக்கு 24 பந்துகளில் 41 ரன்கள் தேவைப்படுகிறது. 

சூர்யகுமார் யாதவ் போல்ட்..! வெல்லப்போவது யார்..?

இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமான சூர்யகுமார் யாதவ் 18 பந்துகளில் 1 பவுண்டரியுடன் 18 ரன்கள் எடுத்த நிலையில் நசீம்ஷா பந்தில் போல்டானார். 

கடைசி 36 பந்துகளில் 60 ரன்கள் தேவை..! அதிரடி காட்டப்போவது யார்...?

இந்திய அணியின் வெற்றிக்கு கடைசி 36 பந்துகளில் 60 ரன்கள் தேவைப்படுவதால் ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

அதிரடி காட்டும் ஜடேஜா..! ச

இந்திய அணிக்காக 4வது இடத்தில் களமிறங்கிய ஜடேஜா அதிரடியாக ஆடி வருவதால் இந்தியாவின் ரன் ஏறி வருகிறது. 

இந்திய கேப்டன் ரோகித்சர்மா 12 ரன்களில் அவுட்..!

இந்திய அணி 7.5 ஓவர்களில் 50 ரன்களை எட்டியபோது ரோகித்சர்மா 12 ரன்களில் சிக்ஸர் அடிக்க முயற்சித்து ஆட்டமிழந்தார். 

பவர்ப்ளேவில் இந்தியா 1 விக்கெட் இழப்பிற்கு 38 ரன்கள்..!

பவர்ப்ளேவான 6 ஓவர்களின் முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 38 ரன்களை எடுத்துள்ளது. 

இந்தியாவிற்காக முதல் சிக்ஸரை விளாசிய விராட்கோலி..!

இந்திய அணிக்காக முதல் சிக்ஸரை விராட்கோலி ஹரீஷ்ராவுப் பந்தில் விளாசியுள்ளார். 

3 ஓவர்களில் 15 ரன்கள்..! நிதானமாக ஆடும் இந்தியா..!

இந்திய அணி 3 ஓவர்களின் முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 15 ரன்களை எடுத்து ஆடி வருகிறது. 

இந்தியாவிற்காக முதல் பவுண்டரியை விளாசிய விராட்கோலி..!

இந்திய அணிக்காக விராட்கோலி முதல் பவுண்டரியை விளாசினார். 

இந்தியா நிதான தொடக்கம்..!

பாகிஸ்தான் அணி வீசிய முதல் ஓவரில் இந்திய அணி 1 விக்கெட் இழப்பிற்கு 3 ரன்கள் மட்டுமே எடுத்து நிதானமான தொடக்கத்தை எடுத்துள்ளது. 

விராட்கோலியின் கேட்ச் வாய்ப்பை நழுவவிட்ட பாகிஸ்தான் கேப்டன்

இந்திய வீரர் விராட்கோலி கொடுத்த கேட்ச் வாய்ப்பை பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் நழுவவிட்டார். 

கோல்டன் டக் அவுட்டாகிய கே.எல்.ராகுல்..!

இந்திய அணியின் தொடக்க வீரர் கே.எல்.ராகுல் டக் அவுட்டாகி இந்திய ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தார். 

இலக்கை நோக்கி களமிறங்கிய இந்தியா..!

பாகிஸ்தான் அணி நிர்ணயித்த 148 ரன்கள் இலக்கை நோக்கி இந்திய கேப்டன் ரோகித்சர்மாவும், துணை கேப்டன் கே.எல்.ராகுலும் களமிறங்கியுள்ளனர். 

இந்தியாவிற்கு 148 ரன்கள் இலக்கு..!

19.4 ஓவர்களில் பாகிஸ்தான் அணி 147 ரன்களுக்கு ஆட்டமிழந்ததால் இந்தியாவிற்கு 148 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

அடுத்தடுத்து 2 விக்கெட்டுகள்..! பாகிஸ்தானை கலங்க வைத்த புவனேஷ்குமார்.!

புவனேஷ்குமார் வீசிய 19வது ஓவரில் பாகிஸ்தானின் ஷதாப்கானும், நசீம்ஷாவும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். 

அர்ஷ்தீப்சிங் அபாரம்..! 7வது விக்கெட்டை இழந்து பாகிஸ்தான் தடுமாற்றம்..!

அர்ஷ்தீப் சிங் வீசிய 18வது ஓவரில் பாகிஸ்தானின் முகமது நவாஸ் 1 ரன்னில் அவுட்டானார். 

9 ரன்களில் அவுட்டான ஆசிப் அலி..! புவனேஷ்குமார் அபாரம்..!

பாகிஸ்தான் அணியின் ஆசிப் அலி 9 ரன்கள் எடுத்த நிலையில் புவனேஷ்குமார் பந்தில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். 

கடைசி 5 ஓவர்களில் அதிரடி காட்டுமா பாகிஸ்தான்..?

பாகிஸ்தான் அணி கடைசி 5 ஓவர்களில் அதிரடி காட்டுமா என்று அந்த நாட்டு ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். 

100 ரன்களை கடந்த பாகிஸ்தான்..!

தொடக்கம் முதல் தடுமாறி ஆடி வந்த பாகிஸ்தான் அணி 14.4 ஓவர்களில் 100 ரன்களை எடுத்தது. 

ஒரே ஓவரில் 2வது விக்கெட்டை இழந்த பாகிஸ்தான்..! ஹர்திக் அபாரம்..!

பாகிஸ்தான் அணியின் முக்கிய வீரர் குஷ்தில் ஷா 2 ரன்னில் அவுட்டாகியதால் பாகிஸ்தான் அணி 5வது விக்கெட்டை இழந்தது.

ரிஸ்வானை அவுட்டாக்கிய ஹர்திக்..! 96 ரன்களுக்கு 4 விக்கெட்..!

பாகிஸ்தான் அணிக்காக தொடக்கம் முதலே களத்தில் நின்ற முகமது ரிஸ்வான் 43 ரன்களில் ஹர்திக் பாண்ட்யா பந்தில் அவுட்டானார். 

அதிரடி காட்டிய அகமது அவுட்..! 3வது விக்கெட்டை பறிகொடுத்தது பாகிஸ்தான்..!

பாகிஸ்தான் அணிக்காக சிறப்பாக ஆடிய இப்திகார் அகமது 22 பந்தில் 2 பவுண்டரி 1 சிக்ஸருடன் 28 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். 

2வது விக்கெட்டை இழந்தது பாகிஸ்தான்..!

இந்திய அணியின் ஆவேஷ்கான் வீசிய பந்தில் பக்கர் ஜமான் 10 ரன்களில் தினேஷ்கார்த்திக்கிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். 

பாகிஸ்தானுக்காக முதல் சிக்ஸரை அடித்த முகமது ரிஸ்வான்..!

பாகிஸ்தான் அணிக்காக முதல் சிக்ஸரை முகமது ரிஸ்வான் ஆவேஷ்கான் வீசிய பந்தில் சிக்ஸர் அடித்து அசத்தினார். 

Pakistan players are wearing black armbands : ஆசிய கோப்பை 2022 : இந்தியாவுடன் மோதும் பாக். வீரர்கள் ஏன் கைகளில் கருப்புப்பட்டை அணிந்தார்கள் தெரியுமா?

Pakistan players are wearing black armbands : பாகிஸ்தானில் பலரும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். பாகிஸ்தான் குடிமக்கள் சுமார் 1,033 பேர் வெள்ளத்தால் உயிர் இழந்திருக்கிறார்கள். மக்களுடன் துணை நிற்கிறோம் என்பதற்கு அடையாளமாக பாக். வீரர்கள் கைகளில் கருப்புப்பட்டை அணிந்திருந்தனர்

பாகிஸ்தான் 3 ஓவர்களில் 1 விக்கெட் இழப்பிற்கு 19 ரன்கள்..!

பாகிஸ்தான் அணி 3 ஓவர்களின் முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 19 ரன்களை எடுத்துள்ளது. 

கொரோனாவில் மீண்டு இந்திய அணியுடன் இணைந்த ராகுல்டிராவிட்..!

கொரோனாவில் இருந்து மீண்ட இந்திய பயிற்சியாளர் ராகுல் டிராவிட் இந்திய அணியுடன் இணைந்து பயிற்சியாளர் பணியைத் தொடர்ந்து வருகிறார். 

ரிவியூ மூலம் வாழ்வு பெற்ற முகமது ரிஸ்வான்..!

பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர் முகமது ரிஸ்வனுக்கு அவுட் வழங்கிய நிலையில் ரிவியூவில் அது நாட் அவுட் என்று வழங்கப்பட்டது. 

ரிஷப்பண்ட் வெளியே..! தினேஷ் கார்த்திக் உள்ளே..!

பாகிஸ்தான் அணிக்கு எதிராக டாஸ் வென்ற இந்திய அணியில் ரிஷப்பண்டிற்கு பதிலாக தினேஷ் கார்த்திக் இடம்பெற்றுள்ளார். 

டாஸ் வென்றார் ரோகித் சர்மா..! இந்தியா பந்துவீச்சு தேர்வு..!

ஆசிய கோப்பையில் பாகிஸ்தான் அணியுடனான போட்டியில் இந்திய கேப்டன் ரோகித் சர்மா டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளார். 

இன்னும் சற்று நேரத்தில் டாஸ்..! மைதானத்தில் ஆர்ப்பரிக்கும் ரசிகர்கள்..!

இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டிக்கான டாஸ் இன்னும் சற்று நேரத்தில் போட உள்ளதால் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளனர். 

இந்தியா - பாகிஸ்தான் போட்டியில் டாஸ் முக்கிய பங்கு வகிக்குமா..?

இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டியில் டாஸ் முக்கிய பங்கு வகிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

Background

இந்தியா-பாகிஸ்தான் போட்டிகள் கொண்ட தொடர் நடப்பது அரிதாகிவிட்டது. சமீப காலமாக இந்தியாவும் பாகிஸ்தானும் ஆசிய கோப்பை மற்றும் ஐசிசி போட்டிகளில் மட்டுமே விளையாடி வருகின்றன. இதனால் போட்டி குறித்து பெரும் பரபரப்பும், பில்டப்பும் நிலவி வருகிறது. இந்தியா-பாகிஸ்தான் போட்டிக்கான டிக்கெட்டுகள் மற்றும் பாஸ்கள் வெளியிட்ட சில மணி நேரங்களிலேயே அனைத்து விற்று தீர்ந்து விடுகின்றனர். 


இதுவரை ஆசிய கோப்பை தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் 14 போட்டிகளில் நேருக்கு நேர் மோதி அதில், இந்தியா 8 போட்டிகளிலும், பாகிஸ்தான் 5 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. இந்திய நிலையில், இந்திய அணி இன்று ஆசிய கோப்பை தொடரில் இன்று பாகிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது. இதனால் இந்திய மற்றும் பாகிஸ்தான் ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. 


முன்னதாக, கடந்த ஆண்டு நடைபெற்ற உலககோப்பை டி20 தொடரில் இதுவரை உலககோப்பை தொடரில் பாகிஸ்தான் அணியுடன் தோல்வியே சந்திக்காத இந்திய அணி தோல்வியை சந்தித்தது. இதனால் இன்று நடைபெறும் போட்டியில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி பழி தீர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.  தற்போது ட்விட்டரில் #IndvsPak என்ற ஹேஷ்டேக் இந்தியளவில் ட்ரெண்டாகி வருகிறது. 


இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆசிய கோப்பை 2022 போட்டி எப்போது நடைபெறும்?


ஆசிய கோப்பை 2022 : இந்தியா மற்றும் பாகிஸ்தான் மோதும் போட்டி (இன்று) ஆகஸ்ட் 28 ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருக்கிறது.


இடம் : துபாயில் உள்ள துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானம்


நேரம் : இந்தியா மற்றும் பாகிஸ்தான் போட்டி இந்திய நேரப்படி இரவு 7:30 மணிக்கு தொடங்குகிறது. டாஸ் இரவு 7 மணிக்கு போடப்பட இருக்கிறது. 


போட்டியை ஒளிபரப்பும் சேனல் : 


இந்த போட்டியானது ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 3 மற்றும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் செலக்ட் எச்டி சேனல்களில் ஒளிபரப்பப்பட இருக்கிறது. 


ஆன்லைனில் பார்க்க : 


ஆசிய கோப்பை 2022 இந்தியா மற்றும் பாகிஸ்தான் போட்டியை நேரடியாக ஹாட்ஸ்டாரில் பார்க்கலாம். 


இந்தியா vs பாகிஸ்தான் – ஆசிய கோப்பை புள்ளிவிவரங்கள்:



  • ஆசிய கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக அதிக ரன் அடித்த இந்திய வீரர்  - ரோஹித் சர்மா -328

  • ஆசிய கோப்பையில் இந்தியாவிற்கு எதிராக அதிக ரன் அடித்த பாகிஸ்தான் வீரர் - சோயப் மாலிக் - 400

  • ஆசியக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் அதிக விக்கெட்டு எடுத்த இந்திய வீரர் - ஹர்திக் பாண்டியா - 3

  • ஆசிய கோப்பையில் இந்தியாவுக்கு எதிரான பாகிஸ்தானுக்கு அதிக விக்கெட்டுகள்: முகமது அமீர் – 8

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.