IND vs NZ 3rd T20 LIVE: நியூசிலாந்துக்கு எதிரான 3வது டி20 போட்டி டை... தொடரை வென்றது இந்திய அணி

IND vs NZ 3rd T20 LIVE Updates: இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது மற்றும் இறுதி டி20 போட்டி குறித்த லைவ் அப்டேட்களை இங்கு காணலாம்.

ABP NADU Last Updated: 22 Nov 2022 04:07 PM
IND vs NZ 3rd T20 LIVE: இந்தியா - நியூசிலாந்து ஆட்டம் மழையால் டை..! தொடரை வென்ற இந்தியா!

இந்தியா - நியூசிலாந்து இடையேயான மூன்றாவது டி20 போட்டி மழையால் டை ஆன நிலையில், இந்தியா தொடரை  1-0 என்ற கணக்கில் வென்றுள்ளது.


 

IND vs NZ 3rd T20 LIVE: மழையால் பாதியில் நின்ற ஆட்டம் தொடராவிட்டால் இந்தியா தொடரை வெல்லும் வாய்ப்பு!

மழையால் இந்தப் போட்டி ஒருவேளை தொடராவிட்டால் ஆட்டம் டையில் முடிவடையும். இந்தியா 1-0 என்ற கணக்கில் தொடரை வெல்லும்.

IND vs NZ 3rd T20 LIVE: மழையால் போட்டி பாதியில் நிறுத்தம்....வெற்றி வாய்ப்பு இருக்கு?

இந்தியா - நியூசிலாந்து இடையேயான மூன்றாவது டி20 போட்டி மழையால் பாதியில் நிறுத்தம்.


டிஎல்எஸ் முறைப்படி 9 ஓவர்களுக்கு 75 ரன்கள் எடுத்திருக்க வேண்டும். இந்திய அணி தற்போது சரியாக 9 ஓவர்களுக்கு 75 ரன்கள் எடுத்துள்ளது.

நியூசிலாந்து ஆல் அவுட்..!

நியூசிலாந்து அணி 19.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 160 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய அணிக்கு 161 ரன்கள் இலக்காக நிர்ணயம். 

19வது ஓவரில் இந்தியா அணி ஹாட்ரிக் விக்கெட்..!

19வது ஓவரில் இந்திய அணி ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி, போட்டியை முழுவதுமாக தன் பக்கம் திருப்பியுள்ளது. 

அடுத்தடுத்து விக்கெட்...

18வது ஓவரை வீசிய முகமது சிராஜ் அடுத்தடுத்து விக்கெட்டுகளை வீழ்த்தி நியூசிலாந்து அணியின் அதிரடியை கட்டுப்படுத்தியுள்ளார். இந்த ஓவரில் மிட்ஷெல் சாண்ட்னர்  1 ரன்னிலும், நிஷம் ரன் ஏதும் இல்லாமலும் அவுட் ஆகியுள்ளனர்.  

ஜெம்மி நிஷம் டக் அவுட்..!

ஏழாவது வீரராக களம் இறங்கிய ஜெம்மி நிஷம்,  சிராஜ் பந்து வீச்சில் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். 

கான்வே அவுட்..!

தொடக்க ஆட்டக்காரர் கான்வே 49 பந்துகளில் 59 ரன்கள் எடுத்த நிலையில் ஹர்ஷ்தீப் சிங் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். நியூசிலாந்து அணி 4 விக்கெட் இழப்பிற்கு 146 ரன்கள் குவித்துள்ளது. 

டெத் ஓவரில் நோ பால்..!

ஆட்டத்தின் 17 ஓவரை வீசிய ஹர்ஷ்தீப் சிங் நோ பால் வீசியுள்ளார். 

10 ஓவர்களுக்குப் பிறகு 3வது விக்கெட்..!

அதிரடியாக ஆடிவந்த ப்லிப்ஸ் முகமது சிராஜ் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். இந்த விக்கெட் சரியாக 10 ஓவர்களுக்குப் பிறகு வீழ்த்தப்பட்டுள்ளது. 

15 ஓவர் முடிவுக்கு நியூசிலாந்து..!

நியூசிலாந்து அணி 15 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 129 ரன்கள் குவித்து அதிரடியாக ஆடி வருகிறது. 

அடுத்தடுத்து அரைசதம்..!

கான்வேவை அடுத்து பிலிப்ஸ் அதிரடியாக அரைசதம் அடித்துள்ளார். அவர் 32 பந்தில் 3 சிக்ஸ், 5 ஃபோர் என 54 ரன்கள் குவித்து அதிரடி காட்டி வருகிறார். 

பந்துகளை பறக்கவிடும் பிலிப்ஸ்..!

அதிரடியாக ஆடிவரும் பிலிப்ஸ் பவுண்ட்ரிகளை நாலாபுறமும் பறக்கவிட்டு வருகிறார். 

கான்வே அரைசதம்..!

நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர் கான்வே நிலைத்து நின்று ஆடி 39வ்பந்துகளில் 2 சிக்ஸர் மற்றும் 4 ஃபோர்கள் உட்பட அரைசதத்தை கடந்து ஆடிவருகிறார். 

100 ரன்கள் குவித்த நியூசிலாந்து..!

13 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 107 ரன்கள் குவித்துள்ளது..

நியூசிலாந்து அபாரம்..!

10 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 2 விக்கெட் இழப்பிற்கு 74 ரன்கள் எடுத்துள்ளது. தொடக்க ஆட்டக்காரர் கான்வே 31 பந்துகளில் 38 ரன்கள் குவித்து நிலைத்து நின்று விளையாடி வருகிறார். 

8 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து..!

8 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 2 விக்கெட் இழப்பிற்கு 55 ரன்கள் எடுத்துள்ளது. 

இரண்டாவது விக்கெட்..!

அதிராடியாக ஆடிவந்த நியூசிலாந்து அணியின் சாம்ப்மனை (12 பந்துகள் 12 ரன்கள்) முகமது சிராஜ் பெவிலியன் அனுப்பினார். 

கியரை அதிரடிக்கு மாற்றிய நியூசிலாந்து..!

ஐந்து ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 44 ரன்கள் குவித்துள்ளது.

நியூசிலாந்து விக்கெட்..!

ஹர்ஷ்தீப் சிங்கின் அபார பந்து வீச்சில் 3 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார் ஃபின் ஆலன். 

களம் இறங்கியது நியூசிலாந்து..!

மழை குறுக்கீட்டுக்குப் பிறகு நியூசிலாந்து அணி பேட்டிங்கை தொடங்கியுள்ளது. புவனேஷ்வர் குமார் முதல் ஓவரை வீசுகிறார். 

மீண்டும் மீண்டும் மழை..!

டாஸ் வென்ற நியூசிலாந்து பேட்டிங்கை தொடங்கவிருந்த நிலையில் மீண்டும் மழை குறுக்கீட்டால் போட்டி தொடங்குவதில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. 

3வது டி20யில் களம் இறங்கும் இந்திய அணி இது தான்..!

3வது மற்றும் கடைசி டி20 போட்டியில் ஹர்திக் தலைமையில் களம் இறங்கும் இந்திய அணி.





டாஸ் வென்ற நியூசிலாந்து..!

3வது டி20 போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் டிம் சவுதி பேட்டிங் தேர்வு செய்துள்ளார்.

டாஸ் வென்ற நியூசிலாந்து..!

3வது டி20 போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் டிம் சவுதி பேட்டிங் தேர்வு செய்துள்ளார்.

ஓய்ந்தது மழை; டாஸ் போடுவதில் தாமதம்..!

போட்டி நடக்கும் நேப்பியரில் மழை ஓய்ந்தது. டாஸ் போடுவதில் தாமதமாகியுள்ளது. 

தொடர்ந்து கொட்டும் மழை..!

போட்டி நடக்கும் நேப்பியர் பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் போட்டி குறிப்பிட்ட நேரத்தில் தொடங்குமா என்பதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. 

Background

IND Vs NZ 3rd T20I: டி20 உலகக் கோப்பைத் தொடருக்குப் பிறகு ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய இளம் படை நியூசிலாந்துக்கு பயணம் மேற்கொண்டு மூன்று டி20 போட்டியில் விளையாட திட்டமிடப்பட்டது. இதில் ஏற்கனவே இரண்டு போட்டிகள் முடிவடைந்த நிலையில் மூன்றாவது மற்றும் இறுதிப் போட்டி இன்று நடைபெறவுள்ளது. 


சூர்யகுமார் பலம்:


மூன்று போட்டிகள் கொண்ட தொடரில், முதலாவது போட்டி மழையால் தடைபட்டது. இரண்டாவது போட்டியில் அனுபவம் வாய்ந்த நியூசிலாந்து அணியை இளம் இந்திய அணி அடித்து நொறுக்கியது. இந்த போட்டியில் இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரர் சூர்யகுமார் யாதவ் 51 பந்துகளில் 111 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதனால் இந்திய அணி 191 ரன்கள் குவித்தது. 


192 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து ஆரம்பம் முதலே தடுமாற்றத்தை சந்தித்தது. அந்த அணியின் பேட்ஸ்மேன்களுக்கு கடும் சாவலை அளித்தனர் இந்திய பந்துவீச்சாளர்கள்.
குறிப்பாக தீபக் ஹூடா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 19 ஆவது ஓவரை வீசிய தீபக் ஹூடா அந்த ஓவரின் 2ஆவது பந்தில் இஷ் சோதியை ஆட்டமிழக்கச் செய்தார். இந்த போட்டியில் இந்திய அணி 65 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் நியூசிலாந்து அணியின் டிம் சவுதி ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தினார். 






கேன் வில்லியம்சன் விலகல்


மூன்றாவது போட்டி இன்று நடக்கவுள்ள நிலையில், நேற்று நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் சொந்த காரணங்களால் மூன்றாவது போட்டியில் இருந்து விலகியுள்ளார். இந்த போட்டியில் டிம் சவுதி  கேப்டனாக இருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  


சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கிடைக்குமா?


மூன்றாவது மற்றும் இறுதி டி20 போட்டி இன்று மதியம் 12 மணிக்கு மெக்லன் பார்க் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த தொடரில் இன்னும் களமிறக்கப்படாத சஞ்சு சாம்சனுக்கு இம்முறை வாய்ப்பு கிடைக்குமா? அவரை கேப்டன் ஹர்திக் களமிறக்குவாரா என ரசிகர்கள் மத்தியில் பெரும் எத்ரி பார்ப்பு ஏற்பட்டுள்ளது. மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி ஏற்கனவே 1 - 0 என்ற கணக்கில் முன்னிலை வகிப்பதால், இந்த போட்டியை வென்றால் தொடரை வெல்லும். மேலும், சொந்த மண்ணில் தொடரை இலக்கக் கூடாது என இந்த போட்டியில் வெல்ல கடும் முயற்சி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. மிகவும் முக்கியமான போட்டியில் என்பதால் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. 


குறுக்கிடும் மழை


போட்டி நடக்கும் நேப்பியரில் அமைந்துள்ள மெக்லைன் பார்க்கில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் போட்டி தொடங்குவதில் தாமதமாகலாம். தொடர்ந்து மழை பெய்து வந்தால் போட்டி ரத்து ஆகவும் வாய்ப்புகள் இருக்கிறது. 


இந்திய அணி: சுப்மான் கில், இஷான் கிஷன், சஞ்சு சாம்சன், சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா(கேப்டன்), ரிஷப் பந்த்(விக்கெட் கீப்பர்), தீபக் ஹூடா, புவனேஷ்வர் குமார், யுஸ்வேந்திர சாஹல், அர்ஷ்தீப் சிங், உம்ரான் மாலிக், வாஷிங்டன் சுந்தர், முகமது சிராஜ், ஸ்ரேயாஸ் ஐய் , குல்தீப் யாதவ், ஹர்ஷல் படேல்


நியூசிலாந்து அணி: ஃபின் ஆலன், டெவோன் கான்வே(விக்கெட் கீப்பர்), மார்க் சாம்ப்மென், க்ளென் பிலிப்ஸ், டேரில் மிட்செல், ஜேம்ஸ் நீஷம், மிட்செல் சான்ட்னர், டிம் சவுதி (கேப்டன்), ஆடம் மில்னே, லாக்கி பெர்குசன், பிளேர் டிக்னர், மைக்கேல் பிரேஸ்வெல், இஷ் சோதி

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.