இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதும் இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இந்திய அணி நியூசிலாந்து அணிக்கு 539 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. இந்திய அணி நிர்ணயித்துள்ள இமாலய இலக்கை நோக்கி ஆடி வரும் நியூசிலாந்து அணி தற்போது வரை 75 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.
நியூசிலாந்து அணியின் மூன்று விக்கெட்டுகளையும் இந்திய சுழற்பந்துவீச்சாளர் அஸ்வினே கைப்பற்றி அசத்தியுள்ளர். மூன்று வடிவிலான கிரிக்கெட் போட்டிகளில் தலைசிறந்த சுழற்பந்துவீச்சாளரான அஸ்வின் நியூசிலாந்தின் டாம் லாதம், வில் யங் விக்கெட்டுகளை கைப்பற்றியதன் மூலம் 2021ம் ஆண்டில் மட்டும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 50 விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
அஸ்வின் இதுவரை 81 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 426 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். அதிகபட்சமாக ஒரே இன்னிங்சில் 7 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். அஸ்வின் 2021ம் ஆண்டில் மட்டும் 8 டெஸ்ட் போட்டிகளில் ஆடி இதுவரை 51 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். இவற்றில் 3 முறை 5 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். நடப்பாண்டின் சிறந்த பந்துவீச்சாக ஒரு இன்னிங்சில் 61 ரன்களை விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளையும், ஒரு போட்டியில் 207 ரன்களை விட்டுக்கொடுத்து 9 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்.
அஸ்வினுக்கு அடுத்த இடத்தில் பாகிஸ்தானின் இளம் வேகப்பந்துவீச்சாளர் ஷாகின் ஷா அப்ரிடி 44 விக்கெட்டுகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார். மூன்றாவது இடத்தில் பாகிஸ்தானின் ஹசன் அலி 39 விக்கெட்டுகளுடன் உள்ளார். முதல் 10 வீரர்கள் பட்டியலில் இந்திய வீரர் அக்ஷர் படேல் (5 டெஸ்ட் போட்டி) 35 விக்கெட்டுகளுடன் 4வது இடத்திலும், முகமது சிராஜ் (9 டெஸ்ட் போட்டிகள்) 30 விக்கெட்டுகளுடன் 9வது இடத்திலும் உள்ளனர்.
ஒட்டுமொத்தமாக டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் அஸ்வின் 12வது இடத்தில் உள்ளார். அஸ்வின் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 7 முறை ஒரே போட்டியில் 10க்கும் அதிகமான விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.
மேலும் படிக்க...
Migraine | ஒற்றைத் தலைவலி பாடாய்படுத்துதா? இந்த 7 விஷயமும் உங்களுக்கான மந்திரம்..
இந்த பாகங்களில் தொடர்ச்சியாக வலி இருந்தால் கவனிங்க.. மாரடைப்பின் அறிகுறியாக இருக்கலாம்..
Jaw Pain and Heart Attack | தாடை வலி, மாரடைப்பு வருவதற்கான அறிகுறியா?
முடி கொட்டுதா? பிரச்னை இதுதான்..! தலைமுடியும்.. தெரியாத தகவல்களும்!
Diabetes | சர்க்கரை நோய் குறித்து பரப்பப்படும் டாப் 10 பொய்கள் இவைதான்.. இதையெல்லாம் நம்பாதீங்க..
மழைக்காலத்தில் உடலை கதகதப்பாக்கும் உணவுகள் இதோ!
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய லைப்ஸ்டைல் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் லைப்ஸ்டைல் செய்திகளைத் (Tamil Lifestyle News) தொடரவும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்