இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியின் இரண்டாவது நாளான நேற் இந்திய அணி தன்னுடைய முதல் இன்னிங்ஸை தொடர்ந்தது. இந்திய அணி 325 ரன்களுக்கு தன்னுடைய அனைத்து விக்கெட்டையும் இழந்தது. இந்திய அணியின் முதல் இன்னிங்ஸின் 10 விக்கெட்டையும் நியூசிலாந்து வீரர் அஜாஸ் பட்டேல் எடுத்து சாதனைப் படைத்தார்.


இதைத் தொடர்ந்து நேற்று இந்திய அணி தன்னுடைய இரண்டாவது இன்னிங்ஸில் களமிறங்கியது. நேற்றைய ஆட்டநேர முடிவில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 69 ரன்கள் எடுத்திருந்தது. நான்காவது நாளான இன்று இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்தது. அதில் மீண்டும் சிறப்பாக பந்துவீசிய அஜாஸ் பட்டேல் 4 விக்கெட் எடுத்து அசத்தினார். இந்திய அணி தன்னுடைய இரண்டாவது இன்னிங்ஸில் 7விக்கெட் இழப்பிற்கு 276 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. அத்துடன் நியூசிலாந்து அணிக்கு 540 ரன்கள் என்ற இலக்கை நிர்ணயித்துள்ளது. 






இரண்டாவது இன்னிங்ஸில் 4விக்கெட் எடுத்ததன் மூலம் அஜாஸ் பட்டேல் மொத்தமாக இப்போட்டியில் 225 ரன்கள் விட்டு கொடுத்து 14 விக்கெட் வீழ்த்தினார். இதன்மூல 1999ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டியில் இந்தியாவின் அனில் கும்ப்ளே செய்த சாதனையை சமன் செய்துள்ளார். அந்தப் போட்டியில் அனில் கும்ப்ளே முதல் இன்னிங்ஸில் 4 விக்கெட்டும், இரண்டாவது இன்னிங்ஸில் 10 விக்கெட்டும் எடுத்திருப்பார். அந்த சாதனையை தற்போது அஜாஸ் பட்டேல் சமன் செய்துள்ளார். 


மேலும் இந்திய அணிக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் சிறப்பான பந்துவீச்சையும் அஜாஸ் பட்டேல் பதிவு செய்துள்ளார். இதற்கு முன்பாக இந்தியாவிற்கு எதிராக டெஸ்ட் போட்டிகளில் 1980ஆம் ஆண்டு ஐயான் பாத்தம் 106 ரன்கள் விடுத்து கொடுத்து 13 விக்கெட் வீழ்த்தியிருந்தார். தற்போது அதைவிட அஜாஸ் பட்டேல் 14/225 என்ற சிறப்பான பந்துவீச்சை பதிவு செய்துள்ளார்.


இந்தியாவிற்கு எதிராக டெஸ்ட்டில் சிறப்பான பந்துவீச்சு:


 14/225- அஜாஸ் பட்டேல் vs இந்தியா (மும்பை)2021


13/106- ஐயான் பாத்தம் vs இந்தியா (மும்பை)1980


12-70- ஸ்டீவ் ஒ கீஃப் vs இந்தியா(புனே) 2016


இவை தவிர மும்பை வான்கடே மைதானத்தில் சிறப்பான பந்துவீச்சையும் இவர் பதிவு செய்துள்ளார்.


மும்பை வான்கடே மைதானத்தில் பதிவான சிறப்பான பந்துவீச்சு:


14/225- அஜாஸ் பட்டேல் vs இந்தியா 2021


13/106- ஐயான் பாத்தம் vs இந்தியா 1980


12/167- அஸ்வின் vs இங்கிலாந்து 2017


இந்தியாவிற்கு எதிரான சிறப்பான பந்துவீச்சுகள் இரண்டும் மும்பை வான்கடே மைதானத்தில் தான் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க: சிக்கலில் ஐபிஎல்? முறைகேடு செய்ததா அதானி குழுமம்? விசாரிக்க களமிறங்கும் பிசிசிஐ..!