இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் தொடர்:


இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் வந்துள்ள இங்கிலாந்து அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட நீண்ட தொடரில் விளையாடி வருகிறதுஅதன்படிமுதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியை 28 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வீழ்த்தியது. இரண்டாவது போட்டியில் இந்திய அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுஇதனிடையேஇந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி பிப்ரவரி 15 ஆம் தேதி  குஜராத் மாநிலம் ராஜ்கோட் சௌராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற்றது.


இந்தியா முன்னிலை:


இந்த போட்டியில் இந்திய அணி 434 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில், பிப்ரவரி 23 ஆம் தேதி ராஞ்சியில் உள்ள ஜே.எஸ்.சி.ஏ சர்வதேச மைதானத்தில் நான்காவது டெஸ்ட் போட்டி தொடங்கியது.  இதில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை  வென்றது. அந்தவகையில் இந்திய அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தியது. இதன் மூலம் 3-1 என்ற கணக்கில் தனது சொந்த நாட்டில் நடைபெறும் டெஸ்ட் தொடரை இந்திய அணி  வென்றுள்ளது. கடைசி மற்றும் 5 வது டெஸ்ட் போட்டி மார்ச் 7 ஆம் தேதி தொடங்க உள்ளது.


இந்நிலையில் இந்த போட்டிக்கான வீரர்கள் விவரம் இன்று (பிப்ரவரி 29) வெளியாகியுள்ளது.





அதன்படி பிசிசிஐ அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், கடைசி டெஸ்ட் போட்டியில் உடற்தகுதியை கருத்தில் கொண்டு கே.எல்.ராகுல் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இதற்கிடையில் ராஞ்சியில் நடைபெற்ற 4வது டெஸ்ட் போட்டியில் நீக்கப்பட்ட ஜஸ்ப்ரித் பும்ரா 5 வது போட்டியில் இணைந்துள்ளார். வாசிங்டன் சுந்தர் அணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். மார்ச் 2 ஆம் தேதி நடைபெறும் மும்பை அணிக்கு எதிரான ரஞ்சி டிராபி அரையிறுதி போட்டியில் தமிழ்நாடு அணிக்காக விளையாடுவார் என்று கூறப்பட்டுள்ளது. அதேபோல் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமிக்கு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு சென்று மீண்டும் பயிற்சியை தொடங்குவார் என்று கூறப்பட்டுள்ளது.


5-வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி:


ரோகித் சர்மா (கேப்டன்), ஜஸ்பிரித் பும்ரா, யஷஸ்வி ஜெய்ஸ்வால், சுப்மன் கில், ரஜத் படிதார், சர்பராஸ் கான், துருவ் ஜூரல் (WK), கேஎஸ் பாரத் (WK), தேவ்தத் படிக்கல், அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், முகமதுசிராஜ், முகேஷ் குமார், ஆகாஷ் தீப் ஆகியோர் அணியில் இடம் பெற்றுள்ளனர்.


மேலும் படிக்க: Virat Kohli IPL Record: IPL-ல் ஒரு சீரிஸில் அதிக ரன்களை விளாசிய வீரர்! விராட் கோலியின் சாதனை!


 


மேலும் படிக்க: Watch Video: என்ன ஹீரோயிசமா? சர்பராஸ் கானை கண்டித்த ரோகித் சர்மா - நடந்தது இதுதான்!