IND vs ENG 2nd T20 Score 2 LIVE : 6 வது விக்கெட்டை இழந்த இங்கிலாந்து..!

IND vs ENG 2nd T20 Score Live Updates: இந்தியா - இங்கிலாந்து மோதும் இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டி இன்று பர்மிங்காமில் நடக்கிறது.

ABP NADU Last Updated: 09 Jul 2022 09:50 PM
IND vs ENG 2nd T20 Score 2 LIVE : 6 விக்கெட்டை இழந்த இங்கிலாந்து..!

பும்ரா வீசிய 10 வது ஓவரில் சாம் கர்ரன் 2 ரன்களில் ஹர்திக் பாண்டியாவிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். 

IND vs ENG 2nd T20 Score 2 LIVE : 10 ஓவர் முடிவில் இங்கிலாந்து அணி 59/5

 இந்திய அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இங்கிலாந்து அணி 10 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 59 ரன்கள் எடுத்துள்ளது. 

IND vs ENG 2nd T20 Score 2 LIVE : என்னா பந்து... போல்டை தெறிக்கவிட்ட பும்ரா.. சோகமாய் வெளியேறிய லிவிங்ஸ்டன்!

அதிரடியாக விளையாடி கொண்டிருந்த லிவிங்ஸ்டனை 15 ரன்களில் கிளீன் போல்ட் செய்தார் பும்ரா. 

IND vs ENG 2nd T20 Score 2 LIVE : பட்லரை பந்தாடிய புவி... 4 ரன்களில் வெளியேறிய சோகம்..!

புவனேஷ்வர் குமார் வீசிய 3வது ஓவரில் இங்கிலாந்து அணி கேப்டன் ஜாஸ் பட்லர் 4 ரன்களில் அவுட்டாகி வெளியேறினார். 

IND vs ENG 2nd T20 Score 2 LIVE : முதல் ஓவர் முதல் பந்தே முத்தான விக்கெட்.. தட்டிதூக்கிய புவி..!

முதல் ஓவர் முதல் பந்தே இங்கிலாந்து தொடக்க வீரர் ராயை முட்டை ரன்களில் வெளியேற்றினார் புவனேஷ்வர் குமார். 

IND vs ENG 2nd T20 Score 2 LIVE : இங்கிலாந்து அணிக்கு 171 ரன்கள் இலக்கு..!

இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் 20 ஓவர் முடிவில் இந்திய அணி 170 ரன்கள் எடுத்துள்ளது. 

IND vs ENG 2nd T20 Score 2 LIVE : 150 ரன்களை கடந்த இந்திய அணி.. மீட்ட ஜடேஜா..!

இங்கிலாந்து அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்திய அணி 18 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 152 ரன்கள் எடுத்துள்ளது. 

IND vs ENG 2nd T20 Score 2 LIVE : 14 ஓவர் முடிவில் இந்திய அணி 106/5

இங்கிலாந்து அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்திய அணி 14 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 106 ரன்கள் எடுத்துள்ளது. 

IND vs ENG 2nd T20 Score 2 LIVE : 15 ரன்களில் சூர்யகுமார் அவுட்..!

11 வது ஓவரில் அடிக்க முயன்ற  சூர்யகுமார் யாதவ் கிறிஸ் ஜார்டன் பந்தில் சாம் கர்ரனிடம் கேட்ச் கொடுக்க, அடுத்த பந்தே ஹர்திக் பாண்டியாவும் 12 ரன்களில் அவுட்டானார். 

IND vs ENG 2nd T20 Score 2 LIVE : 10 ஓவர் முடிவில் இந்திய அணி 86/3

இங்கிலாந்து அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்திய அணி 10 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 86 ரன்கள் எடுத்துள்ளது. 

IND vs ENG 2nd T20 Score 2 LIVE : 1 ரன்னில் கோலியும் காலி... 2 வது விக்கெட்டை இழந்த இந்தியா அணி..!

இங்கிலாந்து அணிக்கு எதிரான 2வது போட்டியிலாவது அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட கோலி 1 ரன்னில் அவுட்டாகி வெளியேற, அடுத்த பந்தே பண்ட் 26 ரன்களில் வெளியேறினார். 

IND vs ENG 2nd T20 Score 2 LIVE : 5வது ஓவரில் அவுட்டான கேப்டன் ரோகித்..! இந்திய அணி 49 / 1

இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா அதிரடியால் இந்திய அணி 50 ரன்களை கடக்கும் என எதிர்பார்க்கப்பட்டனிலையில் 31 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார். 

IND vs ENG 2nd T20 Score 2 LIVE : 2 ஓவர் முடிவில் இந்திய அணி 15/0

இங்கிலாந்து அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 2 ஓவர் முடிவில் 15 ரன்கள் எடுத்துள்ளது. 

IND vs ENG 2nd T20 Score 2 LIVE : இந்தியாவிற்கு எதிரான 2வது டி20 போட்டி : இங்கிலாந்து டாஸ் வென்று பீல்டிங் தேர்வு

இந்தியாவிற்கு எதிரான 2வது டி20 போட்டியில் இங்கிலாந்து டாஸ் வென்று பீல்டிங் தேர்வு செய்துள்ளது. 

இங்கிலாந்து அணி விவரம்..!



இந்திய அணி விவரம்..!



Background

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி கடைசி டெஸ்ட் போட்டியில் தோல்வியை தழுவியது. இதையடுத்து, இரு அணிகளும் மோதிய டி20 கிரிக்கெட் போட்டித் தொடர் நடைபெற்று வருகிறது. முதலில் நடைபெற்ற டி20 போட்டியில் இந்திய அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.


இந்த நிலையில் இரு அணிகளும் மோதும் இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டி இன்று பர்மிங்காமில் நடக்கிறது. இந்த போட்டியில் இந்திய அணியில் விராட்கோலி மீண்டும் களமிறங்க உள்ளார். மற்றபடி அணியின் ஆடும் லெவனில் பெரியளவில் மாற்றம் இருக்காது. கடந்த போட்டியில் தீபக் ஹூடா, சூர்யகுமார் யாதவ், அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் யாரை வெளியில் உட்காரவைப்பது என்ற கேள்வி எழும்.


இந்திய அணிக்கு கேப்டன் ரோகித்தும், இஷான்கிஷானும் அற்புதமான தொடக்கத்தை அளிப்பது அவசியம்  ஆகும். விராட்கோலி மீண்டும் தனது பார்மை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். தீபக்ஹூடா, சூர்யகுமார் யாதவ் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள் என்று நம்பலாம்.


கடந்த போட்டியில் மிகவும் சிறப்பாக ஆடிய ஹர்திக்பாண்ட்யா இந்த போட்டியிலும் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டியது அவசியம் ஆகும். தினேஷ்கார்த்திக் பினிஷர் பிளேசில் சிறப்பாக ஆடுவார் என்று நம்பலாம். பந்துவீச்சாளர்களான ஹர்ஷல், புவனேஷ்குமார், அர்ஷ்தீப்சிங்கும் அசத்தலான பந்துவீச்சை வெளிப்படுத்தினால் இந்தியா வசம் வெற்றியாகும்.


கடந்த போட்டியில் தோல்வியடைந்த இங்கிலாந்து அணி வெற்றி பெறத்துடிக்கும். அந்த அணியின் கேப்டன் பட்லர் அதிரடி காட்ட வேண்டியது அவசியம். தொடர்ந்து சொதப்பும் ராய் மீண்டும் பார்முக்கு திரும்ப வேண்டும். ஐ.பி.எல்.லில் கலக்கிய லிவிங்ஸ்டனின் அதிரடி இங்கிலாந்து ஸ்கோர் ஏறுவதற்கு கைகொடுக்கும். ஆல்ரவுண்டர் மொயின் அலி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். பந்துவீச்சாளர்களான கிறிஸ் ஜோர்டன், சாம்கரண், மில்ஸ் ஆகியோரும் சிறப்பாக ஆடினால் மட்டுமே அந்த அணி வெற்றி பெற முடியும்.


இந்த போட்டியில் வெற்றி பெற்றால் இந்திய அணி இங்கிலாந்தின் சொந்த மண்ணிலே டி20 தொடரை வென்று அசத்தும். அதேசமயத்தில் தொடரை இழக்கக்கூடாது என்று இங்கிலாந்தும் முழுவீச்சில் ஆடுவார்கள் என்பதால் இந்த போட்டிக்கு பஞ்சமிருக்காது. பர்மிங்காமில் உள்ள எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டி இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்க உள்ளது.


இந்த போட்டியை சோனி ஸ்போர்ட்ஸ், சோனி சிக்ஸ், சோனி சிக்ஸ் எச்.டி. ஆகிய தொலைக்காட்சிகளில் கண்டுகளிக்கலாம்.

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.