பிரித்வி ஷா மீது மும்பை கிரிக்கெட் சங்க நிர்வாகி ஒருவர் சரமாரியான குற்றச்சாட்டை முன் வைத்துள்ளது பரப்பரப்பை கிளப்பியுள்ளது. 


பிரித்வி ஷா: 


இந்திய அணியின் U19 கேப்டனாக செயல்பட்டு 2018 ஆம் ஆண்டு இந்திய அணி U19 கோப்பையை அவரத் கேப்டன்சியில் கீழ் உலகக்கோப்பையையும் வென்றிருந்தது, அவரது பேட்டிங் ஸ்டலை வைத்து அவரை அடுத்த சச்சின் மற்றும் சேவாக் என்று சொல்லி வந்தனர். இதனாலேயே தன்னுடைய 18வது வயதில் இந்திய டெஸ்ட் அணியில் இடம்பெற்று தனது அறிமுக போட்டியிலேயே சதம் அடித்து அசத்தினார்.


ஆனால் 2020ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 0 மற்றும் 4 ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினார். பிரித்வி ஷாவின் பேட்டிங் டெக்னிக்கில் பெரிய பிழை இருப்பதாக ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் ரிக்கி பாண்டிங் தெரிவித்திருந்தார். 


அதன் பிறகு இந்திய அணியில் அவரால் இடம்பெற முடியவில்லை, உள்ளூர் போட்டிகள் மற்றும் ஐபிஎல்லில் தொடரில் மட்டுமே விளையாடி வந்தார்.


மும்பை அணியில் இருந்து நீக்கம்: 


இந்த நிலையில் சமீபத்தில் நடந்த சையத் முஷ்டாக் அலி கோப்பை தொடரில் மும்பை அணி சாம்பியன் பட்டத்தை வென்றது, இந்த தொடரில் மும்பை தொடக்க வீரரரக பிரித்வி ஷா விளையாடினார். இருப்பினும் அவரால் பெரிய அளவில் ரன்களை அடிக்கவில்லை. இதனால் விஜய் ஹசாரே தொடரில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். இதனால் விரக்தி அடைந்த பிரித்வி ஷா தான் சிறப்பாக விளையாடியதாக தனது புள்ளி விவரங்களை தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு புலம்பி தள்ளினார்


போட்டு உடைத்த MCA நிர்வாகி: 


மும்பை கிரிக்கெட் சங்க நிர்வாகி ஒருவர் பிரித்வி ஷாவை கடுமையாக விமர்சித்து பேசினார்.. அவர் பேசியதாவது "சையத் முஷ்டாக் அலி டிராபியில், நாங்கள் 10 பீல்டர்களுடன் விளையாடினோம், ஏனெனில் நாங்கள் ப்ரித்வி ஷாவை ஒளித்து வைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது, பந்து அவருக்கு அருகில் சென்றால் அவரால்  அதை குனிந்துன் எடுக்க முடியாது," 


"பேட்டிங் செய்யும் போது கூட, அவர் பந்தை ஆட சிரமப்பட்டதை நாங்கள் பார்க்க முடிந்தது. அவரது உடற்தகுதி, ஓழுக்கமில்லாமல் உள்ளது ஆகியவை மோசமாக உள்ளன, ஒவ்வொரு வீரர்களுக்கும் எங்களால் தனித்தனி விதிகளை விதிக்க முடியாது”


"அணியில் உள்ள மூத்த வீரர்கள் கூட அவரது அணுகுமுறை குறித்து இப்போது புகார் செய்யத் தொடங்கியுள்ளனர்," என்று கூறினார்.


இதையும் படிங்க: ”ஜாகீர் உங்களை மாதிரியே இருக்கு” சிறுமியை பாராட்டிய சச்சின்.. வைரல் வீடியோ


6 மணிக்கு தான் வந்தார்: 


மேலும் அவர் கூறியதாவது “சையத் முஷ்டாக் அலி டிராபியின் போது, ​​பிரித்வி ஷா பயிற்சிக்கு வராமல் பார்ட்டிக்கு சென்று ஊர் சுற்றிவிட்டு காலை மணிக்கு தான் ஓட்டல் அறைக்கு திரும்புகிறார், இதற்கான ஆதாரம் கூட எங்களிடம் உள்ளது, "சமூக ஊடகங்களில் இதுபோன்ற பதிவுகள் மூலம் மும்பை தேர்வாளர்கள் மற்றும் MCA மீது ஏதேனும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நீங்கள் நினைப்பது தவறு" என்று கடுமையாக விமர்சித்து இருந்தார்.