IND vs AUS U19 WC Final LIVE: விக்கெட்டுகளை இழந்து தோல்வியின் பிடியில் இந்தியா; வெற்றியை நெருங்கும் ஆஸ்திரேலியா

IND vs AUS U19 World Cup Final LIVE Score: U19 உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை எதிர்கொள்கிறது இந்திய அணி. இந்த போட்டிக்கான அப்டேட்களை இங்கு உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ABP NADU Last Updated: 11 Feb 2024 07:42 PM
விக்கெட்டுகளை இழந்து தோல்வியின் பிடியில் இந்தியா; வெற்றியை நெருங்கும் ஆஸ்திரேலியா

இந்திய அணி 26 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 91 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது. 

IND vs AUS U19 WC Final LIVE: 20 ஓவர்கள் முடிந்தது

20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 4 விக்கெட்டுகளை இழந்து 74 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது. 

IND vs AUS U19 WC Final LIVE: 4வது விக்கெட்டினை இழந்த இந்திய அணி

இந்திய அணி தனது 4வது விக்கெட்டினை இழந்து வெளியேறினார். இந்திய அணி 19.1 ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்து 68 ரன்கள் சேர்த்துள்ளது. 

IND vs AUS U19 WC Final LIVE: 17 ஓவர்கள் முடிந்தது.

இந்திய அணி 17 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 56 ரன்கள் சேர்த்துள்ளது. வெற்றிக்கு இன்னும் 198 ரன்கள் தேவைப்படுகின்றது. 

IND vs AUS U19 WC Final LIVE: இந்திய அணியின் கேப்டன் அவுட்

இந்திய அணியின் கேப்டன் உதய் சரண் தனது விக்கெட்டினை 8 ரன்களுக்கு இழந்து வெளியேறினார். 

IND vs AUS U19 WC Final LIVE: 50 ரன்களைக் கடந்த இந்தியா

15 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 2 விக்கெட்டுகளை இழந்து 52 ரன்கள் சேர்த்துள்ளது. 

IND vs AUS U19 WC Final LIVE: இரண்டாவது விக்கெட்டினை இழந்த இந்தியா

போட்டியின் 13வது ஓவரில் இந்திய அணி தனது இரண்டாவது விக்கெட்டினை இழந்துள்ளது. 12.2 ஓவர்களில் அணியின் ஸ்கோர் 40ஆக உள்ளது. 

IND vs AUS U19 WC Final LIVE: தொடக்கமே சொதப்பல்

இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் அர்ஷின் குல்கர்னி தனது விக்கெட்டினை போட்டியின் மூன்றாவது ஓவரில் இழந்து வெளியேறினார். 

IND vs AUS U19 WC Final LIVE: இலக்கைத் துரத்த களமிறங்கிய இந்தியா

254 ரன்கள் எடுத்தால் உலகக் கோப்பை என்ற இலக்கை நோக்கி இந்திய அணி களமிறங்கியுள்ளது. 

IND vs AUS U19 WC Final LIVE: பேட்டிங்கில் மிரட்டிய ஆஸ்திரேலியா; பந்து வீச்சில் கம்பேக் கொடுத்த இந்தியாவுக்கு 254 ரன்கள் இலக்கு

50 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலியா அணி 7 விக்கெட்டுகளை இழந்து 254 ரன்கள் சேர்த்தது. 

: IND vs AUS U19 WC Final LIVE: 200 ரன்களை எட்டிய ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியா அணி 42 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 200 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது. 

IND vs AUS U19 WC Final LIVE: பந்து வீச்சில் பலம் காட்டும் இந்தியா; 6 விக்கெட்டுகளை இழந்து போராடும் ஆஸீ.,

ஆஸ்திரேலியா அணி 6 விக்கெட்டுகளை இழந்து விளையாடி வருகின்றது. 40 ஓவர்கள் முடிவில் 186 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது. 

IND vs AUS U19 WC Final LIVE: 38 ஓவர்கள் முடிந்தது

38 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலியா அணி 5 விக்கெட்டுகளை இழந்து 181 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது. 

IND vs AUS U19 WC Final LIVE: ஹர்ஜாஸ் சிங் அவுட்

அரைசதம் விளாசி சிறப்பாக விளையாடி வந்த ஹர்ஜாஸ் சிங் தனது விக்கெட்டினை சௌமி பாண்டே பந்தில் இழந்து வெளியேறினார். இவர் 55 ரன்னில் தனது விக்கெட்டினை இழந்து வெளியேறினார். 

IND vs AUS U19 WC Final LIVE: அரைசதம் விளாசிய சிங்

ஆஸ்திரேலியா அணியின் ஹர்ஜாஸ் சிங் அரைசதம் விளாசி சிறப்பாக விளையாடி வருகின்றார். 

IND vs AUS U19 WC Final LIVE: வீழ்த்தப்பட்ட 4வது விக்கெட் - ராஜ் லிம்பானி அசத்தல்

ஆஸ்திரேலியா அணியின் 4வது விக்கெட்டினை இந்திய வேகப்பந்து வீச்சாளர் ராஜ் லிம்பானி கைப்பற்றியுள்ளார். இவரது பந்தில் ரியான் ஹிக்ஸ் 20 ரன்னில் வெளியேறினார். 

IND vs AUS U19 WC Final LIVE: 150 ரன்களைக் கடந்த ஆஸ்திரேலியா

32 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலியா அணி 3 விக்கெட்டுகளை இழந்து 152 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது. 

IND vs AUS U19 WC Final LIVE: பாதி ஆட்டம் முடிந்தது

25 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலியா அணி 3 விக்கெட்டுகளை இழந்து 110 ரன்கள் சேர்த்துள்ளது. களத்தில் சிங் மற்றும் ஹிக்ஸ் உள்ளனர். 

IND vs AUS U19 WC Final LIVE: 3 விக்கெட்டுகளை இழந்த ஆஸ்திரேலியா

25 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலியா அணி 3 விக்கெட்டுகளை இழந்து 110 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது. 

முதல் விக்கெட்டை பறிகொடுத்தது ஆஸ்திரேலியா! மிரட்டும் இந்திய பவுலிங்!

ஆஸ்திரேலியாவின் தொடக்க வீரர் சாம் இந்திய வீரர் ராஜ் லிம்பானியின் பந்தில் டக் அவுட்டானார்.

IND vs AUS U19 WC Final LIVE: விளையாடும் ஆஸ்திரேலிய அணி..!

ஹாரி டிக்சன், சாம் கான்ஸ்டாஸ், ஹக் வெய்ப்ஜென் (கேப்டன்), ஹர்ஜாஸ் சிங், ரியான் ஹிக்ஸ் (விக்கெட் கீப்பர்), ஆலிவர் பீக், சார்லி ஆண்டர்சன், ராஃப் மேக்மில்லன், டாம் ஸ்ட்ரேக்கர், மஹ்லி பியர்ட்மேன், கால்லம் விட்லர்

IND vs AUS U19 WC Final LIVE: விளையாடும் இந்திய அணி..!

ஆதர்ஷ் சிங், அர்ஷின் குல்கர்னி, முஷீர் கான், உதய் சஹாரன் (கேப்டன்), பிரியன்ஷு மோலியா, சச்சின் தாஸ், ஆரவெல்லி அவனிஷ் (விக்கெட் கீப்பர்), முருகன் அபிஷேக், ராஜ் லிம்பானி, நமன் திவாரி, சௌமி பாண்டே

IND vs AUS U19 WC Final LIVE: டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பேட்டிங் தேர்வு.. பவுலிங்கில் அசத்துமா இந்திய அணி..?

இந்தியாவிற்கு எதிரான 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. 

Background

19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை எதிர்கொள்கிறது இந்திய அணி. இதுவரை 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையில் இந்திய அணி, 8 முறை இறுதிப்போட்டியில் விளையாடியுள்ளது. அதில், இந்திய அணி 5 முறை சாம்பியன் பட்டத்தையும், 3 முறை இரண்டாம் இடத்தையும் பிடித்துள்ளது. 


உலகக்கோப்பை இறுதிப்போட்டி:


இந்தநிலையில், ஆறாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வெல்லும் முனைப்புடன் இந்திய அணி, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக களம் இறங்குகிறது. தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்தியாவும், பாகிஸ்தானை வீழ்த்தி ஆஸ்திரேலியாவும் இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளன. 


இதுவரை 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை வரலாற்றில், இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் இறுதிப் போட்டியில் இரண்டு முறை மோதியுள்ளன. இந்த இரண்டு முறையும் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. இப்போது 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையின் இறுதிப் போட்டி இரு அணிகளுக்கும் இடையே மூன்றாவது முறையாக நடைபெறவுள்ளது.


போட்டியை எங்கு காணலாம்..?


இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான இறுதிப் போட்டி பெனோனியில் இன்று நடைபெறுகிறது. இந்த போட்டியானது இந்திய நேரப்படி பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்குகிறது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கில் நேரடியாக இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இறுதிப் போட்டியினை இந்திய ரசிகர்கள் கண்டு களிக்கலாம். இது தவிர, ஜியோ சினிமாவில், இந்தி மற்றும் ஆங்கிலம் தவிர மற்ற மொழிகளில் முழு போட்டியையும் பார்க்கலாம்.






பெனோனி பிட்ச் எப்படி..?


போட்டி நடைபெறும் பெனோனி வில்லோமூர் பார்க்கில் உள்ள பிட்ச் பேட்ஸ்மேன்கள் மற்றும் பந்துவீச்சாளர்கள் என இருவருக்கும் சாதகமாக இருக்கும். போட்டியின் தொடக்கத்தில் பந்துவீச்சாளர்கள் புதிய பந்தில் பவுன்ஸ் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இங்கு இதுவரை 27 ஒருநாள் போட்டிகள் நடந்துள்ள நிலையில், இதுவரை முதலில் பேட்டிங் செய்த அணி எட்டு போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. 


இதுவரை விளையாடிய போட்டி விவரங்கள்: 



  • மொத்த ஒருநாள் போட்டிகள்: 27

  • முதலில் பேட்டிங் செய்து வென்ற போட்டிகள்: 8

  • இரண்டாவது பேட்டிங் செய்து வென்ற போட்டிகள்: 17

  • சராசரி முதல் இன்னிங்ஸ் ஸ்கோர்: 233

  • சராசரி இரண்டாவது இன்னிங்ஸ் ஸ்கோர்: 279

  • அதிகபட்ச ஸ்கோர்: தென்னாப்பிரிக்கா vs ஜிம்பாப்வே 399/6

  • துரத்தப்பட்ட அதிகபட்ச ஸ்கோர்: இலங்கைக்கு எதிராக தென்னாப்பிரிக்கா அணி 3 விக்கெட் இழப்பிற்கு 258 ரன்களை துரத்தியது.

  • குறைந்தபட்ச ஸ்கோர்: நெதர்லாந்து எதிரான போட்டியில் பெர்முடா அணி 91 ரன்களுக்குள் சுருண்டது.


இரு அணிகளின் விவரம்: 


இந்தியா:

 

உதய் சஹாரன் (கேப்டன்), அர்ஷின் குல்கர்னி, ஆதர்ஷ் சிங், ருத்ரா மயூர் படேல், சச்சின் தாஸ், பிரியான்சு மோலியா, முஷீர் கான், ஆரவெல்லி அவனிஷ் ராவ் (விக்கெட் கீப்பர்), சௌமி குமார் பாண்டே (துணை கேப்டன்), முருகன் அபிஷேக், இன்னேஷ் மகாஜன் (விக்கெட் கீப்பர் ), தனுஷ் கவுடா, ஆராத்யா சுக்லா, ராஜ் லிம்பானி, நமன் திவாரி.

 

ஆஸ்திரேலியா:

 

ஹக் வெய்ப்ஜென் (கேப்டன்), லாச்லான் ஐட்கென், சார்லி ஆண்டர்சன், ஹர்கிரத் பஜ்வா, மஹ்லி பியர்ட்மேன், டாம் காம்ப்பெல், ஹாரி டிக்சன், ரியான் ஹிக்ஸ் (விக்கெட் கீப்பர்), சாம் கான்ஸ்டாஸ், ரஃபேல் மேக்மில்லன், எய்டன் ஓ'கானர், ஹர்ஜாஸ் சிங், டாம் ஸ்ட்ரேக்கர், கால்லம் விட்லர், ஒல்லி பீக்.

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.