IND vs AFG, T20 WC LIVE: ஆஃப்கானிஸ்தானிற்கு எதிரான போட்டியில் வலுவான ஸ்கோரை நோக்கி இந்திய அணி !
ஆப்கானிஸ்தான் அணியுடன் ஒப்பிடும்போது இந்திய அணி பன்மடங்கு பலமான அணி என்றாலும், கடந்த இரு போட்டிகளின் தோல்வி இந்திய அணியினரை மனதளவில் பாதித்துள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக ராகுல் திராவிட் நியமிக்கப்பட்டுள்ளார்.
17 ஓவர்களின் முடிவில் இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 160 ரன்கள் குவித்துள்ளது.
ரோகித் சர்மாவை தொடர்ந்து சிறப்பாக ஆடி வந்த கே.எல்.ராகுலும் 69 ரன்களுடம் பெவிலியன் திரும்பினார்
சிறப்பாக விளையாடிய ரோகித் சர்மா 47 பந்துகளில் 3 சிக்சர்கள் மற்றும் 8 பவுண்டரிகளுடன் ரோகித் சர்மா ஆட்டமிழந்தார்.
13 ஓவர்களின் முடிவில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 119 ரன்கள் எடுத்துள்ளது. ரோகித் சர்மா (60*), கே.எல்.ராகுல்(58*) களத்தில் உள்ளனர்.
ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் ரோகித் சர்மாவை போல் கே.எல்.ராகுலும் அரைசதம் கடந்து அசத்தியுள்ளார்.
ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் கே.எல்.ராகுல் - ரோகித் சர்மா ஜோடி 100 ரன்களுக்கு மேல் அடித்துள்ளது. டி20 வரலாற்றில் இவர்கள் இருவரும் ஜோடியாக சேர்ந்த்து நான்காவது முறையாக 100 ரன்களுக்கு மேல் அடித்துள்ளனர்.
ரோகித் சர்மா 37 பந்துகளில் 6 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்சர் உதவியுடன் அரைசதம் கடந்து அசத்தினார்.
10 ஓவர்களின் முடிவில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 85 ரன்கள் எடுத்துள்ளது. ரோகித் 44 ரன்களுடனும், ராகுல் 40 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
8 ஓவர்களின் முடிவில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 65 ரன்கள் எடுத்துள்ளது. ரோகித் 38 ரன்களுடனும், ராகுல் 26 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
6 ஓவர்களின் முடிவில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 53 ரன்கள் எடுத்துள்ளது.
இந்த ஓவரில் ரோஹித் 2021 டி-20 உலகக்கோப்பையில் தனது முதல் சிக்சரை அடித்திருக்கிறார்
ஹமீது வீசிய இந்த ஓவரில், சிங்கிள்ஸ்களாக மொத்தம் 5 ரன்கள் எடுத்திருக்கிறது இந்திய அணி
நவீன் உல் ஹக் வீசிய இந்த ஓவரில் ரோஹித் ஒரு பவுண்டரியை விளாசினார்
ஷராஃபுதின் பந்துவீசிய இரண்டாவது ஓவரில் ராகுல் ஒரு சிக்சர், பவுண்டரி அடிக்க, இந்திய அணிக்கு இந்த ஓவரில் 16 ரன்கள் கிடைத்திருக்கிறது
ரோஹித் ஷர்மா, ராகுல் ஓப்பனிங் களமிறங்க, முதல் ஓவர் முடிவில் இந்திய அணி 7 ரன்கள் எடுத்துள்ளது. கடைசி பந்தில் ஒரு ரோஹித் ஒரு பவுண்டரியை அடித்திருக்கிறார்.
Background
IND vs AFG: ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை கிரிக்கெட் டி20 தொடரில் இந்திய அணி ஆப்கானிஸ்தான் அணியுடன் இன்று நேருக்கு நேர் மோதுகிறது. ஆப்கானிஸ்தான் அணியுடன் ஒப்பிடும்போது இந்திய அணி பன்மடங்கு பலமான அணி என்றாலும், கடந்த இரு போட்டிகளின் தோல்வி இந்திய அணியினரை மனதளவில் பாதித்துள்ளது.
துபாயில் நடைபெற்ற கடந்த இரு போட்டிகளில் இந்திய அணி மேற்கொண்ட முயற்சிகள் இந்திய அணிக்கு எந்தவொரு பலனையும் அளிக்கவில்லை. இதனால், கடந்த போட்டிகளில் இருந்த தவறுகளை திருத்திக்கொண்டு இந்திய அணி புத்துணர்ச்சியுடன் இந்த போட்டியில் களமிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், கடந்த போட்டிகளில் முன்னணி வீரர்கள் வைத்த முக்கிய குற்றச்சாட்டு அணியின் ப்ளேயிங் லெவன் சரியாக அமையவில்லை என்பதே.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -