IND vs AFG 1st T20 LIVE: முதல் போட்டியை வென்றது இந்தியா; அரைசதம் விளாசிய ஷிபம் துபே
IND vs AFG 1st T20 LIVE Score: இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதல் போட்டி குறித்த அப்டேட்களை இங்கு உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.
ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான முதல் போட்டியில் இந்திய அணி 17.3 ஓவர்கள் முடிவில்- 4 விக்கெட்டுகளை இழந்து 159 ரன்கள் எடுத்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்திய அணி 12 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 102 ரன்கள் சேர்த்துள்ளது.
9 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்து 74 ரன்கள் சேர்த்துள்ளது.
சிறப்பாக விளையாடி வந்த திலக் வர்மா தனது விக்கெட்டினை 26 ரன்கள் சேர்த்த நிலையில் ஒமர்சாய் பந்தில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
தொடக்க ஆட்டக்காரர் கில் 12 பந்தில் 23 ரன்கள் சேர்த்து தனது விக்கெட்டினை இழந்து வெளியேறினார்.
3 ஓவர்கள் முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட்டினை இழந்து 19 ரன்கள் சேர்த்துள்ளது.
இந்திய அணி முதல் ஓவர் முடிவில் ஒரு விக்கெட்டினை இழந்து 5 ரன்கள் சேர்த்துள்ளது.
இந்திய அணியின் இன்னிங்ஸை தொடங்கிய ரோகித் சர்மா ரன் அவுட் ஆகி வெளியேறினார். ரோகித் சர்மா ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினார்.
159 ரன்கள் சேர்த்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இந்திய அணி களமிறங்கியுள்ளது.
இந்திய அணிக்கு எதிராக முதலில் ஆடிய ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்களை எடுத்தது.
அதிரடியாக ஆடிவரும் ஆஃப்கான் அணி 15 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 105 ரன்கள் சேர்த்துள்ளது.
13 ஓவர்கள் முடிவில் ஆஃப்கான் அணி 3 விக்கெட்டுகளை இழந்து 83 ரன்கள் சேர்த்துள்ளது.
11 ஓவர்கள் முடிவில் ஆஃப்கானிஸ்தான் அணி 3 விக்கெட்டுகளை இழந்து 65 ரன்கள் சேர்த்துள்ளது.
ஆஃப்கானிஸ்தான் அணியின் ரஹ்மத் தனது விக்கெட்டினை அக்ஷர் பட்டேல் பந்தில் இழந்து வெளியேறினார்.
ஆஃப்கான் அணியின் மற்றொரு தொடக்க வீரரான இப்ராஹிம் தனது விக்கெட்டினை 9வது ஓவரின் 2வது பந்தில் இழந்தார். இவரது விக்கெட்டினை ஷிவம் துபே கைப்பற்றினார்.
8 ஓவர்கள் முடிவில் ஆஃப்கானிஸ்தான் அணி தனது முதல் விக்கெட்டினை இழந்துள்ளது. அக்ஷர் பட்டேல் பந்தில் குர்பாஸ் தனது விக்கெட்டினை இழந்து வெளியேறினார்.
ஆஃப்கான் அணி 7.4 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 50 ரன்கள் சேர்த்து சிறப்பாக விளையாடி வருகின்றது.
பவர்ப்ளே முடிவில் ஆஃப்கான் அணி விக்கெட் இழப்பின்றி 33 ரன்கள் சேர்த்துள்ளது.
4 ஓவர்கள் முடிவில் ஆஃப்கான் அணி விக்கெட் இழப்பின்றி 23 ரன்கள் சேர்த்துள்ளது.
இரண்டு ஓவர்கள் முடிவில் ஆஃப்கானிஸ்தான் அணி விக்கெட் இழப்பின்றி 6 ரன்கள் சேர்த்துள்ளது.
இந்திய அணிக்கு எதிராக ஆஃப்கான் அணி தனது முதல் ரன்னை இரண்டாவது ஓவரில் அடித்துள்ளார்.
ஆஃப்கான் அணிக்கு எதிராக முதல் ஓவரை வீசிய ஷர்தீப் சிங் சிறப்பாக பந்து வீசி மெய்டனாக வீசியுள்ளார்.
போட்டி நடைபெற்று வரும் பஞ்சாப் கிரிக்கெட் அசோசியேசன் மைதானத்தில் அதிகப்படியான பனிப்பொழிவு ஏற்பட்டு வருகின்றது.
ஆஃப்கானிஸ்தான் அணி இந்திய அணிக்கு எதிராக களமிறங்கியது.
பந்து வீசப்படுவதற்கு முன்னதாக இருநாட்டு தேசிய கீதமும் மைதானத்தில் இசைக்கப்படுவது சரவதேச போட்டிகளில் பின்பற்றப்பட்டு வரும் ஒரு முறையாகும். அப்படியான நிலையில் இருநாட்டு தேசிய கீதமும் இசைக்கப்படுகின்றது.
இந்தியா ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி தொடங்கியது. இரு அணி வீரர்களும் களத்திற்கு வந்துள்ளனர்.
ஆப்கானிஸ்தான் (பிளேயிங் லெவன்): ரஹ்மானுல்லா குர்பாஸ் (விக்கெட் கீப்பர்), இப்ராஹிம் சத்ரான் (கேப்டன்), ரஹ்மத் ஷா, அஸ்மத்துல்லா உமர்சாய், நஜிபுல்லா ஜத்ரான், முகமது நபி, குல்பாடின் நைப், கரீம் ஜனத், ஃபசல்ஹக் ஃபரூக்கி, நவீன்-உல்-ரஹ்மான் ரஹ்மான்.
இந்தியா (பிளேயிங் லெவன்): ரோஹித் சர்மா (கேப்டன்), ஷுப்மான் கில், திலக் வர்மா, ஷிவம் துபே, ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), ரின்கு சிங், அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங், முகேஷ் குமார்
ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து விச முடிவு செய்துள்ளது.
Background
தென்னாப்பிரிக்காவில் நீண்ட சுற்றுப்பயணத்திற்குப் பிறகு, இந்திய கிரிக்கெட் அணி இந்த ஆண்டு முதல் முறையாக சொந்த மண்ணில் விளையாடுகிறது. இந்திய ஐ டி20 தொடருடன் சொந்த மண்ணில் புத்தாண்டை தொடங்கவுள்ளது. ஆப்கானிஸ்தானுடன் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி விளையாடவுள்ளது. இந்த தொடரின் முதல் போட்டி இன்று ஜனவரி 11 ம் தேதி மொஹாலியில் நடைபெறவுள்ளது.
ஆப்கானிஸ்தான் டி20 தொடருக்கு ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் இந்திய டி20 அணிக்கு திரும்பியுள்ளனர். இதன்மூலம் நீண்ட நாட்களுக்கு பிறகு, இந்திய அணிக்காக டி20 போட்டிகளில் இருவரும் விளையாட இருக்கின்றனர். ஆப்கானிஸ்தானுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் ஃபர்சனல் காரணங்களுக்காக விராட் கோலி விளையாடவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து, ரோஹித் சர்மாவுடன் ஜெய்ஸ்வால் ஓப்பனிங் செய்வார். மூன்றாவது இடத்தில் சுப்மன் கில் இறங்குவார் என்று தெரிகிறது.
ரோஹித் சர்மா, கடைசியாக 2022 டி20 உலகக் கோப்பையில் டி20 சர்வதேச போட்டியில் விளையாடினார். இந்த ஆப்கானிஸ்தான் டி20 தொடருக்குப் பிறகு, இந்திய அணி இங்கிலாந்துடன் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இந்த டெஸ்ட் தொடரானது ஜனவரி 25ம் தேதி முதல் தொடங்குகிறது.
இரு அணிகளுக்கும் இடையே இதுவரை ஒரே ஒரு தொடர் மட்டுமே:
இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் இடையே இதுவரை ஒரே ஒரு சர்வதேச இருதரப்பு தொடர் மட்டுமே விளையாடப்பட்டுள்ளது. இது ஒரு டெஸ்ட் தொடர், இது ஜூன் 2018 இல் நடந்தது. அந்த நேரத்தில், அந்த இருதரப்பு தொடரில் ஒரே ஒரு டெஸ்ட் போட்டி மட்டுமே விளையாடப்பட்டது, இதில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 262 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இது தவிர, இதுவரை இந்தியா - ஆப்கானிஸ்தான் இடையே ஒருநாள் மற்றும் டி20 இருதரப்பு தொடர்கள் நடைபெறவில்லை. இந்நிலையில் இரு அணிகள் மோதும் முதல் டி20 தொடர் இதுவாகும். இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் தொடருக்காக ஆப்கானிஸ்தான் விளையாட காத்திருக்கிறது.
பிட்ச் எப்படி..?
இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி மொஹாலியில் உள்ள பஞ்சாப் கிரிக்கெட் சங்கம் ஐஎஸ் பிந்த்ரா ஸ்டேடியத்தில் நடக்கிறது. இந்த மைதானம் பேட்டிங்கிற்கு மிகவும் ஏற்றது. இருப்பினும், பனி குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும். இதுபோன்ற சூழ்நிலையில், டாஸ் வென்ற அணி முதலில் பந்துவீச முடிவு செய்யலாம். இந்த மைதானத்தில் ரன்கள் எடுப்பது மிகவும் எளிது.
கணிக்கப்பட்ட இரு அணிகளின் விவரம்:
இந்திய அணி:
ரோஹித் சர்மா (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷுப்மான் கில், திலக் வர்மா, ரின்கு சிங், சஞ்சு சாம்சன்/ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), அக்சர் படேல், அர்ஷ்தீப் சிங், அவேஷ் கான், குல்தீப் யாதவ்/ரவி பிஷ்னோய் மற்றும் முகேஷ் குமார்.
ஆப்கானிஸ்தான் அணி:
ஹஸ்ரதுல்லா ஜசாய், ரஹ்மானுல்லா குர்பாஸ் (விக்கெட் கீப்பர்), இப்ராஹிம் சத்ரான் (கேப்டன்), நஜிபுல்லா ஜத்ரான், முகமது நபி, அஸ்மத்துல்லா உமர்சாய், முஜீப் உர் ரஹ்மான், கைஸ் அகமது, நூர் அஹமத், நூர் அஹ்மத்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -