லோகேஷ் கனகராஜ் படத்தையே மிஞ்சிடுவாங்க போல.. சென்னை விமான நிலையத்தில் போதைப்பொருள் கடத்தல்!

விமானம் மூலம் சென்னை வந்திறங்கிய கென்ய நாட்டு பெண் பயணி ஒருவரிடம் விமான நிலைய சுங்கத்துறையினர் சோதனை மேற்கொண்டனர். அவரின் கழிவில் 1,424 கிராம் எடைகொண்ட கொக்கைன் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது.

Continues below advertisement

லோகேஷ் கனகராஜ் திரைப்படத்தையே மிஞ்சும் அளவுக்கு சென்னை விமான நிலையத்தில் போதைப்பொருள் கடத்தல் சம்பவம் நடந்துள்ளது. ஆனால், சாதூர்யமாக செயல்பட்ட சுங்கத்துறை அதிகாரிகள், கொக்கைன் போதைப்பொருளை கடத்தி வந்த கென்ய நாட்டு பெண் பயணியை வளைத்து பிடித்தனர். 

Continues below advertisement

எல்லை பகுதிகள் வழியாக நாட்டுக்குள் தங்கம், போதை பொருள் ஆகியவை கடத்தப்படுவது தொடர் கதையாகி வருகிறது. குறிப்பாக, பாகிஸ்தான், வங்கதேசம் போன்ற நாடுகளில் இருந்து எல்லை வழியாக போதைப்பொருள் கடத்தப்படுவது அதிகாரிகளுக்கு பெரும் சவாலை அளித்து வருகிறது.

திரைப்படத்தில் வருவது போல் போதைப்பொருள் கடத்தல்:

எத்தியோப்பியாவின் அடிஸ் அபாபா நகரில் இருந்து கடந்த 7ஆம் தேதி விமானம் மூலம் சென்னை வந்திறங்கிய கென்ய நாட்டு பெண் பயணி மீது சந்தேகம் எழுந்துள்ளது. அவரிடம், விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது, அவரது கழிவில் 14 கோடியே 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான, 1,424 கிராம் எடைகொண்ட கொக்கைன் போதைப்பொருள் இருந்தது கண்டறியப்பட்டது. பின்னர், அவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

கடந்த 13ஆம் தேதி, பாங்காக்கில் இருந்து சென்னை வந்திறங்கிய ஆண் பயணி ஒருவரின் பையை சோதனையிட்டபோது, 76 லட்சம் ரூபாய் மதிப்பிலான 7.6 கிலோ  எடையிலான கஞ்சா போதைப்பொருள் மறைத்து வைத்திருந்தது கண்டறியப்பட்டது. பின்னர், அவரை சுங்கத் துறையினர் கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

வளைத்து பிடித்த அதிகாரிகள்:

கடந்த டிசம்பர் 15ஆம் தேதி, துபாயில் இருந்து சென்னை வந்திறங்கிய விமான ஊழியர் மற்றும் பயணி ஒருவரை, சுங்கத் துறையினர் சோதனையிட்டனர். அப்போது, தான் வைத்திருந்த தங்கத்தை விமான ஊழியரிடம் அளித்துள்ளதாக பயணி ஒப்புக்கொண்டார். 

பின்னர், மேற்கொள்ளப்பட்ட சோதனையில் விமான ஊழியர் 1.7 கிலோ கிராம்  எடைகொண்ட தங்கத்தை உள்ளாடைக்குள் மறைத்துவைத்து இருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து, விமான ஊழியர், பயணி ஆகிய இருவரையும் கைதுசெய்த சுங்கத்துறை அதிகாரிகள் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இந்த விவகாரத்தில் விரிவான விசாரணை நடைபெற்று வருகிறது.

இதையும் படிக்க: SBI Clerk Recruitment: மிஸ் பண்ணிடாதீங்க; எஸ்பிஐ வங்கி வேலை; 13,735 பணியிடங்களுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்- எப்படி?

Continues below advertisement