கொல்கத்தாவில் நடைபெற்று வரும் இரண்டாவது அரையிறுதிச் சுற்றில் தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் விளையாடுகின்றன. இதில், மழை குறிக்கிட்டதால் ஆட்டம் பாதியில் நிறுத்தப்பட்டது. இதையடுத்து சிறிது நேரத்தில் மீண்டும் ஆட்டம் தொடங்கியுள்ளது. இன்று மற்றும் நாளை மழை தொடரும் பட்சத்தில் தென்னாப்பிரிக்க அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. 


கடந்த அக்டோபர் 5 ஆம் தேதி உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான நரேந்திர மோடி மைதானத்தில் தொடங்கியது ஐசிசி உலகக் கோப்பை தொடர். இந்த தொடரில் 10 அணிகள் பங்குபெற்றன.  4 அணிகள் அரையிறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றன. இதில் நேற்று (நவம்பர் 25) நடைபெற்ற முதல் அரையிறுதிச் சுற்றில் நியூசிலாந்து அணியை 70 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி முதல் அணியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.


இந்நிலையில், இரண்டாவது அரையிறுதிச் சுற்று இன்று (நவம்பர் 16) நடைபெற்று வருகிறது. அதன்படி, கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த இரண்டாவது அரையிறுதிச் சுற்றில் தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதுகின்றன.


மழையால் ஆட்டம் ட்ராப்:


இந்திய அணி முதல் அணியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளதால், இந்திய அணியுடன் இறுதிப் போட்டியில் மோதப்போகும் அணி எது என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் எழுந்தது. இச்சூழலில் தான், இன்றைய போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி கேப்டன் தேம்பா பாவுமா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி, அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக குயின்டன் டி காக் மற்றும் தேம்பா பாவுமா ஆகியோர் முதலில் களமிறங்கினார்கள். இதில், தேம்பா பாவுமா 4 பந்துகள் மட்டுமே களத்தில் நின்று ரன் ஏதும் இன்றி நடையைக்கட்டினார்.


அதேபோல், 14 பந்துகள் களத்தில் நின்ற குயின்டன் டி காக் 3 ரன்கள் மட்டுமே எடுத்து விக்கெட்டை பறிகொடுத்து நடையைக்கட்டினார். பின்னர், வந்த ராஸ்ஸி வான் டெர் டுசென் 31 பந்துகள் களத்தில் நின்று 6 ரன்கள் மட்டுமே எடுத்து பெவிலியன் திரும்ப, ஐடன் மார்க்ராம் 10 ரன்களில் நடையைக்கட்டினார். இப்படி 4 முக்கியமான விக்கெட்டுகளையும் 24 ரன்களுக்குள் தென்னாப்பிரிக்க அணி இழந்தது. இது ரசிகர்களிடம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.


அடுத்து வந்த ஹென்ரிச் கிளாசென் மற்றும் டேவிட் மில்லர் ஆகியோர் களத்தில் நின்று விளையாடிக்கொண்டிருந்த போது மழை குறிக்கிட்டது. இதனால், ஆட்டம் பாதியில் நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய சூழலில், 14 ஓவர்கள் முடிந்துள்ள நிலையில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 44 ரன்கள் எடுத்துள்ளது.


மழை தொடர்ந்தால்:



இச்சூழலில், இன்று மற்றும் நாளை மழை தொடர்ந்து பெய்து வந்தால் தென்னாப்பிரிக்க அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும் சூழல் நிலவுவதாக கிரிக்கெட் விமர்சகர்கள் தெரிவித்து வருகின்றனர். மேலும், இதற்கு முன்னதாக நடைபெற்ற போட்டிகளின் அடிப்படையில் இது தீர்மானிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.


 


மேலும் படிக்க: SA vs AUS Semi Final LIVE: மழை வந்ததால் ஆட்டம் பாதியில் நிறுத்தம்; 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறும் தென்னாப்பிரிக்கா..!


 


மேலும் படிக்க: Watch Video: டாஸ் போடுவதில் முறைகேடு செய்கிறாரா ரோஹித் சர்மா..? முன்னாள் பாக். வீரரின் கருத்தால் கிளம்பிய சர்ச்சை!