ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் போட்டிக்கு உலககோப்பைத் தொடரை நடத்தி வந்த ஐ.சி.சி. டெஸ்ட் போட்டிகளிலும் விறுவிறுப்பை கூட்டும் நோக்கத்தில் டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டித் தொடரை நடத்தி வருகிறது. முதல் டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டித் தொடரில் இந்தியா இறுதிப்போட்டி வரை முன்னேறியது.




இந்த நிலையில், 2021 -2023ம் ஆணடுக்கான டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டித் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், தற்போது வரை டெஸ்ட் நடப்பு சாம்பியன்ஷிப் போட்டித் தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீரராக ஜஸ்பிரித் பும்ரா வலம் வருகிறார்.






அதாவது, 2021 -2023ம் ஆண்டு வரையிலான போட்டித் தொடரில் அவர் இதுவரை 45 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். இரண்டாவது இடத்தில் பாகிஸ்தானின் ஷாகின் அப்ரிடி உள்ளார். அவர் 41 விக்கெட்டுகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார். மூன்றாவது இடத்தில் இங்கிலாந்தின் ஆண்டர்சன் உள்ளார். அவர் 40 விக்கெட்டுகளுடன் உள்ளார்.


மேலும் படிக்க : Rishabh Pant: உங்கள் மீது நம்பிக்கை வைங்க... - உத்தரகாண்ட் மாநில தூதராக நியமிக்கப்பட்ட ரிஷப் பண்ட்


நான்காவது இடத்தில் ஆஸ்திரேலியாவின் நாதன் லயன் 39 விக்கெட்டுகளுடன் உள்ளார். 5வது இடத்தில் இலங்கையில் ரமேஷ் மெண்டிஸ் 38 விக்கெட்டுகளுடன் உள்ளார்.  




தற்போது டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டித் தொடரில் தென்னாப்பிரிக்க அணி 71 சதவீதத்துடன் முதலிடத்தில் உள்ளது. இரண்டாவது இடத்தில் 70 சதவீதத்துடனும், மூன்றாவது இடத்தில் இலங்கையும், நான்காவது இடத்தில் இந்தியாவும் உள்ளனர். நடப்பு சாம்பியன் நியூசிலாந்து 25 புள்ளிகளுடன் 8வது இடத்தில் உள்ளது.  


பும்ரா 30 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 128 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். டெஸ்ட் போட்டியில் அவர் அதிகபட்சமாக ஒரு இன்னிங்சில் 6 விக்கெட்டுகளை 27 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து கைப்பற்றியுள்ளார். தனிநபர் அதிகபட்சமாக ஒரு டெஸ்டில் 86 ரன்களை விட்டுக்கொடுத்து 9 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.  டெஸ்ட் போட்டிகளில் இதுவரை 8 முறை 5 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.


டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் முடிவடைவதற்கு இன்னும் ஓராண்டு காலம் உள்ளதால் இந்த புள்ளிவிவரங்கள் மாறுவதற்கு வாய்ப்புகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க : Virat kohli:ஸ்பீட் ஸ்பீட் ஸ்பீட்.. லேட்டஸ்ட் ஆக வா நீ.. மீண்டும் பயிற்சியை தொடங்கிய விராட் கோலியின் வைரல் வீடியோ..


மேலும் படிக்க : Ross Taylor: "நியூசிலாந்து அணியிலும் ஜோக் சொல்வது போல் இனவெறி கருத்துகள் இருந்தன" - முன்னாள் வீரர் டெய்லர்


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண