Asia Cup 2022 : ஆசிய கோப்பை 2022 தகுதிப் போட்டிகள்: 2022 ஆசிய கோப்பைக்கு எத்தனை அணிகள் தகுதிபெறும்?

ஆசிய கோப்பை தகுதி சுற்று போட்டிகள் அனைத்து ஓமன் அல் அமெரட்டில் உள்ள அல் அமெரத் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற இருக்கிறது.

Continues below advertisement

இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம், ஆஃப்கானிஸ்தான் ஆகிய அணிகளுடன் ஆசிய கோப்பைக்கு தகுதி பெறும் மற்றொரு அணியும் இணைந்து ஆசிய கோப்பைக்கான கிரிக்கெட் போட்டியில் விளையாடவுள்ளன. இதில் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் தகுதி பெறும் ஒரு அணி ஏ பிரிவில் இடம்பெற்றுள்ளன. அதேபோல் இலங்கை, பங்களாதேஷ் மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகள் பி பிரிவில் இடம்பெற்றுள்ளன. ஆகஸ்ட் மாதம் 27ம் ம் தேதி தொடங்கவுள்ள இந்தப் போட்டித் தொடர் செப்டம்பர் மாதம் 11ம் தேதி வரை நடைபெறவுள்ளது. 

Continues below advertisement

மேற்கண்ட அனைத்து 5 நாடுகளும் ஏற்கனவே ஆசிய கோப்பையில் தகுதி பெற்றதால், ஏ பிரிவில் மீதமுள்ள ஒரு இடத்திற்கு 4 நாடுகள் போட்டியிட இருக்கின்றனர். இந்த நிலையில், ஆசிய கோப்பை 2022 தகுதிச் சுற்றுப் போட்டிகளை நடத்த ஓமன் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த தகுதிச்சுற்று வருகிற ஆகஸ்ட் 20 முதல் தொடங்கி 5 நாள் நடைபெற இருக்கிறது. 

இந்த தகுதி சுற்று போட்டிகள் அனைத்து ஓமன் அல் அமெரட்டில் உள்ள அல் அமெரத் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. தகுதி சுற்றில் ஹாங்காங், சிங்கப்பூர், ஐக்கிய அரபு எமிர்ட்ஸ் (யுஏஇ), குவைத் ஆகிய நான்கு அணிகள் விளையாடுகின்றன.

ஆகஸ்ட் 20 ஆம் தேதி நடக்கும் முதல் போட்டியில் சிங்கப்பூர் மற்றும் ஹாங்காங் அணிகள் மோதுகின்றன. தகுதிச் சுற்றின் கடைசி போட்டி ஆகஸ்ட் 24 ஆம் தேதி ஹாங்காங் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இடையே நடைபெற உள்ளது. இந்த நான்கு அணிகளும் ரவுண்ட்-ராபின் என்ற முறையில் ஒருவரையொருவர் எதிர்கொண்டு, பட்டியலில் முதலிடம் வரும் அணி UAE இல் ஆகஸ்ட் 27 முதல் தொடங்கும் ஆசிய கோப்பை 2022 தொடருக்கு தகுதி பெறுவர். 

தகுதி சுற்றில் டேபிள்-டாப்பராக வரும் அணி ஆசிய கோப்பையில் ஆறாவது அணியாக இடம் பிடித்து இந்தியா மற்றும் பாகிஸ்தானுடன் குரூப் ‘ஏ’ பிரிவில் இணையும். ‘பி’ பிரிவில் இலங்கை, ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய மூன்று அணிகள் ஏற்கனவே களம் கண்டுள்ளனர்.

15 ஆசியக் கோப்பைக்கான தொடரின் முதல் போட்டியில், இலங்கை அணிடுடன் ஆப்கானிஸ்தான் அணி மோதவுள்ளன. உலகமே ஆவலுடன் எதிர்பார்க்கும் பாகிஸ்தான் - இந்திய அணிகளின் அனல் பறக்கும் மோதல் 28ம் தேதி மாலை ஆறு மணிக்கு நடைபெறவுள்ளது. மொத்தம் 13 போட்டிகள் நடக்கவுள்ள இந்த தொடரானது ஐக்கிய அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் ஷார்ஜாவில் நடைபெறவுள்ளது.  குரூப் போட்டிகளின் முடிவில் இரண்டு குரூப்களிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் 4 சுற்றில் விளையாடும். 

சூப்பர் 4 சுற்றில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டி செப்டம்பர் 11ஆம் தேதி துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறும். இம்முறை ஆசிய கோப்பை போட்டிகள் அனைத்தும் டி20 போட்டிகளாக நடைபெற உள்ளன. இதன்காரணமாக இம்முறை ஆசிய கோப்பை தொடருக்கு ரசிகர்கள் இடையே பெரும் எதிர்பார்ப்பு இருக்கும் என்று கருதப்படுகிறது. 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

Continues below advertisement