இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட். இவர் சமீபக காலங்களில் தன்னுடைய அதிரடி ஆட்டங்களின் மூலம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார். அத்துடன் இக்கட்டான சூழல்களிலிருந்து இந்திய அணியை அடிக்கடி மீட்டு வருகிறார். இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட்டை உத்தரகாண்ட் அரசு மாநில தூதராக அறிவித்திருந்தது. இது தொடர்பான அறிவிப்பை அம்மாநில முதலமைச்சர் புஷ்கர் சிங் தமி நேற்று அறிவித்திருந்தார். 


 






இந்நிலையில் அதற்கு ரிஷப் பண்ட் இன்று தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் ஒரு பதிவை செய்துள்ளார். அதில், “இந்த பெருமையை எனக்கு அளித்தற்கு முதலமைச்சர் புஷ்கர் சிங் தமி அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இளைஞர்களுக்கு என்னுடைய அறிவுரை ஒன்று தான். அதாவது நீங்கள் உங்கள் மீது நம்பிக்கை வைத்திருக்கும் பட்சத்தில் எதை வேண்டுமென்றாலும் சாதிக்க முடியும். உங்களுடைய மனதை அந்த இலக்கின் மீது வைத்து கடினமாக உழைக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார். 


முன்னதாக நேற்று உத்தரகாண்ட் மாநில முதலமைச்சர் புஷ்கர் சிங் தமி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இந்த அறிவிப்பை வெளியிட்டிருந்தார். அதில், “உத்தரகாண்ட் மாநிலத்தின் தூதுவராக இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரர் ரிஷப் பண்ட் நியமிக்கப்பட்டுள்ளார். இளைஞர்கள் விளையாட்டு மற்றும் பொது சுகாதாரத்தில் ஈடுபட ரிஷப் பண்ட் நியமனம் உதவியளிக்கும்” எனத் தெரிவித்திருந்தார். 


இந்திய கிரிக்கெட் அணியில் ரிஷப் பண்ட் கடந்த இரண்டு ஆண்டுகளில் பல்வேறு சாதனைகளை புரிந்து வருகிறார். இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட் சதம் அடித்த முதல் இந்திய இளம் விக்கெட் கீப்பர் என்ற சாதனையை படைத்தார். அதன்பின்னர் ஆஸ்திரேலிய மண்ணில் சதம் கடந்து அசத்தினார். டெஸ்ட் போட்டிகள் தவிர ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளிலும் இவர் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண