இந்தியா - கனடா:
கடந்த ஜூன் 2 ஆம் தேதி தொடங்கிய டி20 உலகக் கோப்பை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில், இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் தற்போதுவரை சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றிருக்கிறது. இன்னும் மூன்று அணி எதுவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் எழுந்துள்ளது.
இந்நிலையில் தான் இன்று (ஜூன் 15) சென்ட்ரல் ப்ரோவர்ட் ரீஜினல் பார்க் ஸ்டேடியம் டர்ஃப் மைதானத்தில் 33 வது லீக் போட்டி நடைபெற உள்ளது. அதாவது இந்தியா - கனடா அணிகள் இந்த போட்டியில் மோத இருந்தன.
மழையால் ஆட்டம் ரத்து:
இன்றைய போட்டி இரவு 8.30 மணிக்கு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் போட்டி தொடங்குவதற்கு முன்னர் மழை பொழிய ஆரம்பித்தது. மழை நின்றால் போட்டியை ஆரம்பிக்கலாம் என்று ஐசிசி திட்டமிட்டது. ஆனால் மழை நிற்காமல் தொடர்ந்து பெய்ததால் ஆட்டம் தொடங்கும் முன்பே ரத்து செய்யப்பட்டது. அதாவது போட்டியில் ஒரு பந்து கூட வீசாமல் ரத்து செய்தது ஐசிசி. இதனால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.
இந்திய அணி ஏற்கனவே சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்று விட்டது. அதன்படி 3 போட்டிகளில் விளையாடிய இந்திய அணி 3 போட்டிகளிலுமே வெற்றி பெற்று உள்ளது. அதேபோல் கனடா அணி 3 போட்டிகள் விளையாடியது. இதில் 1 போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றது. இரண்டு போட்டிகள் தோல்வி அடைந்தது. இதனால் முன்னதாகவே அந்த அணி சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெறாமல் எலிமினேட் ஆகிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: T20 World Cup 2024: சூப்பர் 8-க்கு தகுதிபெற்ற இந்தியா உட்பட 6 அணிகள்.. எந்த அணிகள் இதுவரை வெளியே..? முழு விவரம்!
மேலும் படிக்க: Rohit Sharma: இன்னும் 6 சிக்ஸர்கள் போதும்! உலகின் முதல் கிரிக்கெட் வீரராக ரோஹித் சர்மா படைக்கப்போகும் சாதனை!