T20 World Cup 2024 Super 8: டி20 உலகக் கோப்பை 2024 தற்போது அடுத்த கட்டத்தை எட்டியுள்ளது. குரூப் லீக் போட்டிகள் முடிவடைந்து சூப்பர் 8 போட்டிகள் தொடங்க இருக்கின்றன. ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி ஏற்கனவே அயர்லாந்து, பாகிஸ்தான், அமெரிக்கா ஆகிய அணிகளை வீழ்த்தி சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றது. இந்தியா உட்பட இதுவரை 6 அணிகள் சூப்பர் 8 ஐ எட்டியுள்ளன. அதேசமயம், பாகிஸ்தான் உட்பட 10 அணிகள் குருப் ஸ்டேஜில் இருந்தே வெளியேற்றப்பட்டுள்ளன. 


இந்தநிலையில், சூப்பர் 8ல் இந்திய அணி மூன்று போட்டிகளில் விளையாட உள்ளது. இந்தியாவின் முதல் ஆட்டம் ஆப்கானிஸ்தானை எதிர்கொள்கிறது. இந்த போட்டியானது வருகின்ற ஜூன் 20ம் தேதி நடைபெறவுள்ளது. இதைத் தொடர்ந்து இந்தியா மற்றும் குரூப் டியில் 2ம் இடம் பிடித்த அணியுடன் மோதும். இந்த போட்டியானது ஜூன் 22ம் தேதி நடைபெறவுள்ளது. தொடர்ந்து, வருகின்ற ஜூன் 24ம் தேதி இந்திய அணி ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. இது இந்தியாவின் கடைசி சூப்பர் 8 போட்டியாகும். 






வேறு எந்த அணிகள் சூப்பர் 8 சுற்றில் இடம்பெற்றுள்ளன..? 


2024 டி20 உலகக் கோப்பையின் குரூப் ஏ இலிருந்து இந்தியாவும் அமெரிக்காவும் சூப்பர் 8 க்கு தகுதி பெற்றுள்ளன. பி பிரிவில் இருந்து ஆஸ்திரேலியா தகுதி பெற்றுள்ளது. இரண்டாவது அணி இன்னும் முடிவு செய்யப்படவில்லை. ஆப்கானிஸ்தான் மற்றும் மேற்கிந்திய தீவுகள் குழு சி பிரிவில் இருந்து சூப்பர் 8 க்கு தகுதி பெற்றுள்ளன. டி பிரிவில் இருந்து தென்னாப்பிரிக்கா சூப்பர் 8 க்கு தகுதி பெற்றுள்ளது. இந்த குழுவிலிருந்து இரண்டாவது அணியின் முடிவும் இன்னும் முடிவு செய்யப்படவில்லை.






எந்தெந்த அணிகள் வெளியேறியுள்ளன..? 


2024 டி20 உலகக் கோப்பையில் இருந்து பாகிஸ்தான், கனடா மற்றும் அயர்லாந்து அணிகள் ஏ பிரிவில் இருந்து வெளியேறுகின்றன. பி பிரிவில் இருந்து நமீபியா மற்றும் ஓமன் அணிகள் வெளியேற்றப்பட்டுள்ளன. குரூப் சி, பிஎன்ஜி, உகாண்டா மற்றும் நியூசிலாந்து அணிகளும், டி பிரிவில் நேபாளம் மற்றும் இலங்கை அணிகள் இதுவரை வெளியேறியுள்ளன. 


சூப்பர் 8 போட்டிகள் எப்போது முதல் தொடங்குகிறது..? 


சூப்பர் 8 போட்டிகள் ஜூன் 19 முதல் தொடங்கி, ஜூன் 24-ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. அதன் முதல் போட்டியில் அமெரிக்கா மற்றும் தென்னாப்பிரிக்கா இடையே நடைபெறுகிறது, சூப்பர் 8-ன் கடைசி போட்டியில்  ஆப்கானிஸ்தான் மற்றும் டி2 அணிகளுக்கு இடையே நடைபெறவுள்ளது. இதைத் தொடர்ந்து முதல் அரையிறுதி ஆட்டம் ஜூன் 26ம் தேதியும், இரண்டாவது அரையிறுதிப் போட்டி ஜூன் 27ம் தேதி நடைபெறவுள்ளது. இறுதிப் போட்டி ஜூன் 29ம் தேதி நடைபெறவுள்ளது. இந்த போட்டியானது பார்படாஸில் நடைபெறவுள்ளது.