Stop Clock விதி கட்டாயம்:
சர்வதேச ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் ஓவர்களுக்கு இடையே பந்துவீச்சு அணி எடுத்துக்கொள்ளும் நேரத்தை கட்டுப்படுத்த புதிய விதியை ( Stop Clock ) ஐ.சி.சி.கட்டாயமாக்கி உள்ளது. இந்த விதியை ஏற்கனவே சோதனை அடிப்படையில் ஐ.சி.சி. அமல்படுத்தி இருந்தது.
புதிய விதிமுறைப்படி ஒரு ஓவர் முடிந்து 60 வினாடிகளுக்குள் பந்துவீச்சு அணி அடுத்த ஓவரை வீசத் தயாராக வேண்டும். 60 முதல் பூஜ்ஜியம் வரை எண்ணும் எலக்ட்ரானிக் கடிகாரம் ஸ்கீரினில் காட்டப்படும். இந்த நேரக்கட்டுப்பாட்டை 2 முறை மீறினால் பந்துவீச்சு அணிக்கு 5 ரன்கள் அபராதமாக விதிக்கப்படும் என்ற புதிய விதியை ஐ.சி.சி. அறிவித்துள்ளது.
இந்த விதி நடப்பாண்டு நடைபெற உள்ள டி20 உலகக்கோப்பை தொடருடன் அமலுக்கு வர உள்ளது. அதன்பின் நடைபெற உள்ள அனைத்து ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் இந்த விதி கட்டாயம் பின்பற்றப்பட வேண்டும் என ஐ.சி.சி. அறிவித்துள்ளது.
ஒரு நாள் மற்றும் டி20 போட்டியில்:
முன்னதாக கடந்த 2023 ஆம் ஆண்டு இந்த விதியை ஐசிசி அறிமுகபடுத்தியது.இந்நிலையில் தான் ஜூன் 1 ஆம் தேதி முதல் இந்த விதி கட்டாயமாக்கப்படுவதாஜ ஐ.சிசி கூறியிருக்கிறது. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்த ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற உள்ள ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரில் தொடங்கி இனிவரும் அனைத்து ஒரு நாள் மற்றும் டி20 கிரிக்கெட்டிலும் இந்த விதி கடைபிடிக்கப்படும் என்பதை ஐசிசி தனது வருடாந்திர வாரியக் கூட்டத்திற்குப் பிறகு ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க: Virat Kohli IPL Record: IPL-ல் ஒரு சீரிஸில் அதிக ரன்களை விளாசிய வீரர்! விராட் கோலியின் சாதனை!
மேலும் படிக்க: Watch Video: என்ன ஹீரோயிசமா? சர்பராஸ் கானை கண்டித்த ரோகித் சர்மா - நடந்தது இதுதான்!