மூன்றாவது முறையாக அப்பா ஆனார் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் ஜோஸ் பட்லர். 


ஜோஸ் பட்லருக்கு ஆண் குழந்தை:


டி20 உலகக் கோப்பை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில், குரூப் B யில் விளையாடி வரும் இங்கிலாந்து அணி 3 போட்டிகளில் விளையாடி ஒரு போட்டியில் மட்டும் தான் வெற்றி பெற்றுள்ளது. இதனால் சூப்பர் 8 சுற்றுக்கு செல்வதற்கான வாய்ப்பு இங்கிலாந்து அணிக்கு சற்று குறைவாகவே இருக்கிறது. 


 



பெயர் என்ன தெரியுமா?


இச்சூழலில் தான் இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோஸ் பட்லருக்கு கடந்த மே மாதம் 28 ஆம் தேதி ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த குழந்தைக்கு இன்று சார்லி என்ற பெயரை சூட்டியிருக்கிறார்கள்.  முன்னதாக , ஜோஸ் பட்லர் தனது நீண்ட நாள் காதலியான லூயிஸை கடந்த 2017 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம்  திருமணம் செய்து கொண்டார்.






பட்லரும் லூயிஸும் பள்ளியில் படிக்கும் போது ஒருவரையொருவர் காதலித்தனர். இவர்களது முதல் குழந்தையான ஜார்ஜியா ரோஸ் கடந்த 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பிறந்தார். அதேபோல் இரண்டாவது குழந்தையான மகள் மார்கோட் செப்டம்பர் 2021 இல் பிறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


 


மேலும் படிக்க: ENG Vs Oman T20 WolrdCup: வெறும் 19 பந்துகளில் மேட்சை முடித்த இங்கிலாந்து - ஓமன் அணியை கதறவிட்டு புதிய சாதனை


மேலும் படிக்க: AFG Vs PNG, T20 Wolrdcup: ரசிகர்கள் ஷாக் - உலகக் கோப்பையில் இருந்து நியூசிலாந்து வெளியேற்றம் - சூப்பர் 8 சுற்றில் ஆப்கானிஸ்தான்