அயர்லாந்துக்கு எதிரான குரூப் ஆட்டம் மழையால் கைவிடப்பட்டதை அடுத்து அமெரிக்கா சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியது.  அமெரிக்கா தனது கிரிக்கெட் வரலாற்றில் இந்த நிலையை எட்டுவது இதுவே முதல் முறை.


டி20 உலகக் கோப்பை 2024:


கடந்த ஜூன் 2 ஆம் தேதி தொடங்கிய ஐசிசி டி20 உலகக் கோப்பை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில், இதில் சூப்பர் 8 சுற்றுக்கு இந்தியா, ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ், தென்னாப்பிரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் தகுதி பெற்ற நிலையில் கிரிக்கெட் வரலாற்றில் அமெரிக்க அணி முதல் முறையாக சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. 


மழையால் ஆட்டம் ரத்து:






புளோரிடாவில் உள்ள சென்ட்ரல் ப்ரோவர்ட் ரீஜினல் பார்க் ஸ்டேடியத்தில் இன்று (ஜூன் 14) 30 லீக் போட்டி நடைபெறுவதாக இருந்தது. இந்த போட்டியில் அமெரிக்கா மற்றும் அயர்லாந்து அணிகள் விளையாட இருந்தன. ஆனால் அங்கு பெய்த கன மழையால் ஆட்டம் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டது.






இதனால் வாஷ் அவுட் முறையில் அமெரிக்கா மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது. இதன் மூலம் அமெரிக்க அணி சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. டி20 உலகக் கோப்பை போட்டியில் விளையாடுவதற்கான தகுதியை அமெரிக்க அணி இந்த ஆண்டு தான் பெற்றது.


இச்சூழலில் தான் ஐசிசி டாப் 10 அணிகளான இலங்கை, நியூசிலாந்து ஆகிய அணிகள் எலிமினேட் ஆகி வெளியேறிய நிலையில் முதன் முறையாக அமெரிக்க அணி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியிருக்கிறது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க: ENG Vs Oman T20 WolrdCup: வெறும் 19 பந்துகளில் மேட்சை முடித்த இங்கிலாந்து - ஓமன் அணியை கதறவிட்டு புதிய சாதனை


மேலும் படிக்க: AFG Vs PNG, T20 Wolrdcup: ரசிகர்கள் ஷாக் - உலகக் கோப்பையில் இருந்து நியூசிலாந்து வெளியேற்றம் - சூப்பர் 8 சுற்றில் ஆப்கானிஸ்தான்