ENG Vs PAK LIVE Score: பாகிஸ்தானை 93 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது இங்கிலாந்து
ENG Vs PAK LIVE Updates: இங்கிலாந்து பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி குறித்த லைவ் அப்டேட்டுகளுக்கு ஏபிபியுடன் இணைந்து இருங்கள்.
இங்கிலாந்து அணியின் டேவிட் வில்லிக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. இவர் 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.
பாகிஸ்தான் அணி 43.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டினைட்யும் இழந்து 244 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் இங்கிலாந்து அணி ரன்கள் 93 வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த தொடரில் இங்கிலாந்து அணி 9 லீக் போட்டிகளில் மூன்றாவது வெற்றியை பதிவு செய்தது.
43 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி 9 விக்கெட்டுகளை இழந்து 244 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
அதிரடியாக விளையாடி வரும் ஹாரீஸ் ராஃப் மற்றும் வாசிம் கூட்டணி 31 பந்தில் அரைசதம் எட்டியுள்ளது.
41வது ஓவரின் முதல் பந்தில் ஒரு பவுண்டரியும் கடைசி பந்தில் ஒரு சிக்ஸரும் விளாசினார் முகமது வசிம். 41 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி 9 விக்கெட்டுகளை இழந்து 222 ரன்கள் சேர்த்துள்ளது.
40வது ஓவரில் பாகிஸ்தான் அணியின் ஹாரீஸ் ராஃப் இரண்டு இமாலய சிக்ஸர்கள் விளாசி மிரட்டியுள்ளார்.
40 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி 9 விக்கெட்டுகளை இழந்து 209 ரன்கள் சேர்த்துள்ளது.
9 விக்கெட்டுகளை இழந்து விளையாடி வரும் பாகிஸ்தான் அணி 39.2 ஓவர்கள் முடிவில் 203 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
இங்கிலாந்து அணியின் பந்து வீச்சாளர் டேவிட் வில்லி இந்த உலகக் கோப்பைத் தொடருடன் ஒருநாள் போட்டியில் இருந்து ஓய்வு பெறுகின்றார். இந்த போட்டியில் 3 விக்கெட்டுகள் கைப்பற்றி ஒருநாள் கிரிக்கெட்டில் 100வது விக்கெட்டினை கைப்பற்றியுள்ளார்.
அதிரடியாக அரைசதம் விளாசிய சல்மான் 51 ரன்னில் தனது விக்கெட்டினை இழந்து வெளியேறினார்.
பாகிஸ்தான் அணியின் அஃப்ரிடி போட்டியின் 37வது ஓவரில் வில்லி வீசிய முதல் இரண்டு பந்துகளை பவுண்டரிக்கு விரட்டினார்.
பாகிஸ்தான் அணி 35.1 ஓவர்களில் 175 ரன்களை எட்டியது. பாகிஸ்தான் அணி இதுவரை 7 விக்கெட்டுகளை இழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தான் அணியின் சல்மான் 42 பந்தில் 6 பவுண்டரி ஒரு சிக்ஸர் விளாசி தனது அரைசதத்தினை எட்டினார்.
31 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி 6 விக்கெட்டுகளை இழந்து 149 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
பாகிஸ்தான் அணி தனது 6வது விக்கெட்டினை இழந்து தத்தள்ளித்து வருகின்றது. 30.1 ஓவரில் 145 ரன்கள் சேர்த்துள்ளது.
29 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி 5 விக்கெட்டினை இழந்து 135 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
நிதானமாக விளையாடி வந்த சவுத் சகீல் தனது விக்கெட்டினை ஆதில் ரஷித் பந்தில் இழந்து வெளியேறினார். இவர் 37 பந்தில் 29 ரன்கள் சேர்த்திருந்தார்.
27 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி 4 விக்கெட்டுகளை இழந்து 122 ரன்கள் சேர்த்துள்ளது.
பாகிஸ்தான் அணி வெற்றி பெற 25 ஓவர்களில் 230 ரன்கள் தேவைப்படுகின்றது. கிட்டத்தட்ட ஓவருக்கு 9 ரன்கள் தேவைப்படுகின்றது.
25 ஓவர்களில் பாகிஸ்தான் அணி 4 விக்கெட்டினை இழந்து 108 ரன்கள் சேர்த்துள்ளது.
பாகிஸ்தான் அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேனும் விக்கெட் கீப்பருமான முகமது ரிஸ்வான் தனது விக்கெட்டினை மொயின் அலி பந்துவீச்சில் க்ளீன் போல்ட் முறையில் இழந்து வெளியேறினார்.
22 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி 3 விக்கெட்டுகளை இழந்து 100 ரன்களை எட்டியுள்ளது.
18 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி 3 விக்கெட்டுகளை இழந்து 75 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
17 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி 3 விக்கெட்டினை இழந்து 74 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
பாகிஸ்தான் அணி 15 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டினை இழந்து 62 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
பாகிஸ்தான் அணி 3 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டினை இழந்து 11 ரன்கள் சேர்த்து தடுமாறி வருகின்றது.
இறுதியில் இங்கிலாந்து அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழக்க, ரன் வேட்டை குறைந்தது. இதனால் இங்கிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 337 ரன்கள் சேர்த்தது.
46.1 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி 4 விக்கெட்டினை இழந்து 300 ரன்களை எட்டியுள்ளது.
46 ஓவர்கள் பேட்டிங் செய்துள்ள இங்கிலாந்து அணி 4 விக்கெட்டினை இழந்து 296 ரன்கள் சேர்த்துள்ளது.
44 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி 4 விக்கெட்டுகளை இழந்து 269 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
இங்கிலாந்து அணி 42.2 ஓவர்களில் 4 விக்கெட்டினை இழந்து 257 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
அரைசதம் கடந்து விளையாடி வந்த ரூட் தனது விக்கெட்டினை 72 பந்துகளில் 60 ரன்கள் சேர்த்த நிலையில் வெளியேறினார்.
களமிறங்கியது முதல் நிதானமாக விளையாடி ரன்கள் சேர்த்து வரும் ஜோ ரூட் 66 பந்துகளில் 3 பவுண்டரிகள் மட்டும் விளாசி 52 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றார்.
ஸ்டோக்ஸ் மற்றும் ரூட் கூட்டணி 131 பந்துகளில் 132 ரன்கள் சேர்த்த நிலையில் பிரிந்தது.
இங்கிலாந்து அணியின் ஸ்டோக்ஸ் 76 பந்தில் 84 ரன்கள் சேர்த்த நிலையில் தனது விக்கெட்டினை அஃப்ரிடி வீசிய யார்க்கர் பந்தில் க்ளீன் போல்ட் முறையில் இழந்து வெளியேறினார்.
40 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி 2 விக்கெட்டினை இழந்து 240 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
39 ஓவர்கள் முடிந்துள்ள நிலையில் இங்கிலாந்து அணி 2 விக்கெட்டினை இழந்து 235 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
இங்கிலாந்து அணியின் ஜோ ரூட் 61 பந்துகளில் 3 பவுண்டரிகள் விளாசி 47 ரன்கள் சேர்த்து அரைசதம் விளாசி வருகின்றார்.
38 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி 2 விக்கெட்டுகளை இழந்து 223 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
2 விக்கெட்டுகளை இழந்து சிறப்பாக விளையாடி வரும் இங்கிலாந்து அணி 37 ஓவர்கள் முடிவில் 221 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
36 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி 2 விக்கெட்டினை இழந்து 220 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
இங்கிலாந்து அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்ன்மேன்களான ரூட் மற்றும் ஸ்டோக்ஸ் கூட்டணி 102 பந்துகளில் 100 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
35 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி 2 விக்கெட்டினை இழந்து 204 ரன்கள் சேர்த்து வலிமையான நிலையில் உள்ளது.
34.3 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி 2 விக்கெட்டினை இழந்து 202 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
35வது ஓவரின் 2வது பந்தில் ஸ்டோக்ஸ் இந்த போட்டியில் தனது முதல் சிக்ஸரை விளாசியுள்ளார்.
34 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி 2 விக்கெட்டினை இழந்து 192 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
களமிறங்கியது முதல் அதிரடியாக விளையாடி வந்த ஸ்டோக்ஸ் 53 பந்தில் தனது அரைசதத்தினை எட்டி விளையாடி வருகின்றார்.
51 பந்துகளை எதிர்கொண்ட இங்கிலாந்து அணியின் அதிரடி ஆட்டக்காரர் ஸ்டோக்ஸ் 47 ரன்கள் சேர்த்து அரைசதத்தினை நோக்கி விளையாடி வருகின்றார்.
33 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி 2 விக்கெட்டினை இழந்து 186 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
32 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி 2 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்கள் சேர்த்து வழுவான நிலையில் உள்ளனர்.
31 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி 2 விக்கெட்டினை இழந்து 177 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
30 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணியின் ரன்ரேட் 5.67ஆக உள்ளது.
30 ஓவர்கள் முடிந்த நிலையில் இங்கிலாந்து அணி 2 விக்கெட்டினை இழந்து 170 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
இங்கிலாந்து அணி 29 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டினை இழந்து 166 ரன்கள் சேர்த்துள்ளது.
இங்கிலாந்து அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ரூட் மற்றும் ஸ்டோக்ஸ் கூட்டணி 52 பந்துகளில் 50 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றனர்.
இங்கிலாந்து அணி 26.2 ஓவர்களில் 2 விக்கெட்டினை இழந்து 150 ரன்களை சேர்த்து விளையாடி வருகின்றது.
இங்கிலாந்து அணி 26 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டினை இழந்து 146 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
25 ஓவர்கள் முடிந்துள்ள நிலையில் இங்கிலாந்து அணி 2 விக்கெட்டினை இழந்து 140 ரன்கள் சேர்த்துள்ளது.
22 ஓவர்கள் முடிந்துள்ள நிலையில் இங்கிலாந்து அணி 2 விக்கெட்டுகளை இழந்து 125 ரன்கள் சேர்த்து நிதானமாக ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
20 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி 2 விக்கெட்டினை இழந்து 112 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
19 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி 2 விக்கெட்டுகளை இழந்து 110 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
இங்கிலாந்து அணியின் அதிரடி பேட்ஸ்மேன்களில் ஒருவரான பென் ஸ்டோக்ஸ் 4வது வீரராக களமிறங்கியுள்ளார்.
அரைசதம் கடந்து சிறப்பாக விளையாடி வந்த பேர்ஸ்டோவ் தனது விக்கெட்டினை 18.2 ஓவர்களில் 59 ரன்கள் சேர்த்த நிலையில் வெளியேறினார்.
இங்கிலாந்து அணி 18 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட்டினை இழந்து 106 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
17 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி ஒரு விக்கெட்டினை இழந்து 102 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
16.1 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி ஒரு விக்கெட்டினை இழந்து 100 ரன்கள் சேர்த்து சிறப்பாக விளையாடி வருகின்றது.
16 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி 96 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
தொடக்க வீரராக களமிறங்கி சிறப்பாக விளையாடி வரும் ஜானி பேரிஸ்டோவ் 52 பந்துகளில் தனது அரைசதத்தினை பூர்த்தி செய்து விளையாடி வருகின்றார்.
15 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி ஒரு விக்கெட்டினை இழந்து 90 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
16 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி ஒரு விக்கெட்டினை இழந்து 84 ரன்கள் சேர்த்துள்ளது.
இங்கிலாந்து அணியின் தொடக்க ஜோடி முதல் விக்கெட்டுக்கு 82 ரன்கள் சேர்த்தனர்.
இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர் டேவிட் மலான் தனது விக்கெட்டினை இஃப்திகார் பந்தில் இழந்து வெளியேறினார். இவர் 31 ரன்கள் சேர்த்த நிலையில் வெளியேறினார்.
12 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி 79 ரன்கள் சேர்த்துள்ளது.
11.1 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி 75 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
பவர்ப்ளே முடிவில் இங்கிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி 72 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
9 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி 68 ரன்கள் சேர்த்து பேட்டிங்கில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றது.
இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் மாறி மாறி பவுண்டரிகளை விளாசி வருவதால், பாகிஸ்தான் வீரர்கள் மைதானம் முழுவதும் பந்துகளை பொறுக்கவே அங்கும் இங்குமாக ஓடிக்கொண்டு உள்ளனர்.
8 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி 59 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
இங்கிலாந்து அணி 7.1 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 53 ரன்கள் சேர்த்தது.
7 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி 49 ரன்கள் சேர்த்துள்ளது.
போட்டியின் முதல் சிக்ஸரை 7வது ஓவரில் பேரிஸ்டோவ் பறக்கவிட்டு அதகளப்படுத்தியுள்ளார். இதன் மூலம் இங்கிலாந்து அணி 50 ரன்களை நெருங்கியுள்ளது.
6 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி 38 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
களமிறங்கியது முதல் அதிரடியாக பவுண்டரிகளை விளாசி வரும் இங்கிலாந்து அணியின் தொடக்க ஜோடி முதல் 6 ஓவர்களில் மட்டும் 5 பவுண்டரிகளை பறக்கவிட்டுள்ளது.
5 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி 26 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
Background
உலகக் கோப்பை 2023ன் 44வது போட்டியில் இன்று பாகிஸ்தான் மற்றும் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணிகள் மோத இருக்கின்றன.
முன்னதாக, கடைசி இடத்தில் இருந்த இங்கிலாந்து அணி கடந்த போட்டியில் நெதர்லாந்து அணிக்கு எதிரான மிகப்பெரிய ரன் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இதன் காரணமாக, 10வது இடத்தில் இருந்து 7வது இடத்திற்கு முன்னேறியது. இதற்கிடையில், அரையிறுதியில் இடம்பிடிப்பதற்காக இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் இன்று மாபெரும் ரன் வித்தியாசத்தில் வெற்றிபெற வேண்டும்.
அரையிறுதிக்கு தகுதிபெற பாகிஸ்தான் என்ன செய்யவேண்டும்..?
நியூசிலாந்தைத் தாண்டி புள்ளிப் பட்டியலில் பாகிஸ்தான் முன்னேறி அரையிறுதிக்கு செல்ல வேண்டுமானால், முதலில் பேட் செய்தால் 287 அல்லது 288 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும். முதலில் பந்துவீசினால், பாகிஸ்தான் 284 பந்துகள் மீதமிருக்கும் நிலையில் இலக்கை துரத்த வேண்டும்.
இங்கிலாந்து vs பாகிஸ்தான் உலகக் கோப்பை 2023 போட்டி விவரங்கள்:
நாள்: சனிக்கிழமை (நவம்பர் 11)
நேரம் : மதியம் 02:00 மணி
இடம் : ஈடன் கார்டன்ஸ், கொல்கத்தா
லைவ் ஸ்ட்ரீமிங் ஆப்: டிஸ்னி+ ஹாட்ஸ்டார்
கணிக்கப்பட்ட இரு அணிகளின் விவரம்:
இங்கிலாந்து:
ஜோஸ் பட்லர் (கேப்டன் & விக்கெட் கீப்பர்), எம்.எம். அலி, எச்.சி. புரூக், எஸ்.எம். குர்ரான், எல்.எஸ். லிவிங்ஸ்டோன், டி.ஜே. மலன், ஏ.யு. ரஷித், பென் ஸ்டோக்ஸ், கிறிஸ் வோக்ஸ், மார்க் வூட், ஏ.டி. ஹேல்ஸ்
பாகிஸ்தான்:
பாபர் அசாம் (கேப்டன்), SH கான், ஹாரிஸ் ரவுஃப், இப்திகார் அகமது, முகமது நவாஸ், முகமது ரிஸ்வான் (விக்கெட் கீப்பர்), முகமது வாசிம், நசீம் ஷா, எஸ் அப்ரிடி, ஷான் மசூத், முகமது ஹாரிஸ்
இரு அணிகளும் இதுவரை நேருக்குநேர்:
இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் இன்று 92வது முறையாக ஒருநாள் போட்டியில் நேருக்குநேர் மோதுகின்றன. கடந்த 91 போட்டிகளில் இங்கிலாந்து 56 முறையும், பாகிஸ்தான் 32 முறையும் வெற்றி பெற்றுள்ளன. மூன்று போட்டிகள் மட்டுமே முடிவு இல்லாமல் முடிவடைந்துள்ளன.
பாகிஸ்தானுக்கு எதிரான கடைசி 5 ஆட்டங்களில் இங்கிலாந்து 4-ல் வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 27 முறையும், சேஸிங்கில் 29 முறையும், பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்த போது 15 முறையும், சேஸிங் செய்த போது 17 முறையும் வென்றுள்ளது.
ஒருநாள் உலகக் கோப்பை வரலாற்றில் இரு நாடுகளும் இதுவரை பத்து முறை நேருக்குநேர் சந்தித்துள்ளன. இங்கிலாந்துக்கு எதிராக பாகிஸ்தான் 5-4 என்ற சாதனையுடன் முன்னிலையில் உள்ளது. ஒரு போட்டி முடிவு இல்லாமல் முடிந்தது. கடந்த உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணியை பாகிஸ்தான் 14 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
பிட்ச் அறிக்கை:
கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் பிட்ச் எப்போதும் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமான பிட்சாகவே உள்ளது. இருப்பினும், ஆட்டத்தின் கடைசி கட்டத்தில், சுழற்பந்து வீச்சாளர்களுக்கு பனியின் காரணமாக சாதகமாக மாறலாம். முதல் பாதியில் வேகப்பந்து வீச்சாளர்கள் பிட்சை கணித்து சரியாக செயல்பட்டால் விக்கெட் வேட்டையில் ஈடுபடலாம்.
மழைக்கு வாய்ப்பா..?
கொல்கத்தா ஈடன் கார்டன் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் இன்று மழைக்கு வாய்ப்பில்லை. மேக மூட்டம் ஒரு சதவீதமாகவும், ஈரப்பதம் 46 சதவீதமாகவும் இருக்கும். மேலும், வெப்பநிலை 21 முதல் 32 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -