Madurai Rural Power Shutdown: மதுரை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நாளை (27.12.2024) மின் பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், பல இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படுகிறது.
மின் பாதையில் பராமரிப்பு பணிகள்
தமிழ்நாட்டில் பராமரிப்பு பணிக்காக மின்சாரம் நிறுத்தப்படும்போது அதுபற்றி முந்தைய நாளன்று மின் வாரியம் மூலம் தகவல் அறிவிக்கப்படும். பராமரிப்பு பணிக்காக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சம்பந்தப்பட்ட பகுதியில் மின்சேவை நிறுத்தப்படும். இதுபோன்ற பராமரிப்பு பணியின் பொழுது, சிறு சிறு பழுதுகள் ஏற்பட்டு இருந்தால் அதனை சரி செய்வது, மின்கம்பம் மற்றும் மின்வழி தடங்களில் உள்ள மரக்கிளைகளை அப்புறப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு பராமரிப்பு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவது வழக்கம். அந்தவகையில் மின் நிறுத்தம் தொடர்பாக தமிழ்நாடு மின் வாரிய மதுரை சமயநல்லூர் செயற்பொறியாளர் பி.ஜெயலெட்சுமி குறிப்பிட்டுள்ளபடி நாளை மின் தடை செய்யப்படவுள்ள பகுதிகளை பார்க்கலாம்.
மின் விநியோகம் தடைப்படும் பகுதிகள்:
சமயநல்லூர், தேனூர், கட்டப்புளிநகர், தோடனேரி, சத்தியமூர்த்திநகர், வைரவநத்தம், தனிச்சியம், நகரி, திருவாலவாயநல்லூர், அதலை, பரவை, விஸ்தாரா அப்பார்ட்மெண்ட், பரவை மெயின் ரோடு, மங்கையர்கரசி கல்லூரி பகுதிகள், பொதும்பு, பரவை மார்க்கெட், கோவில்பாப்பாகுடி உள்ளிட்டவை சமயநல்லூர் துணைமின்நிலையத்திலிருந்து மின் விநியோகம் தடைபடும் பகுதிகளாகும்
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Vidamuyarchi : செம ட்ரிப்பான ஒரு பாடல்...ஆன்லைனில் வெளியான விடாமுயற்சி பாடல் லிரிக்ஸ்
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - வெற்றி.. வெற்றி... ஊழியர்களுக்கு கார், பைக்... இன்ப அதிர்ச்சி கொடுத்த தனியார் நிறுவனம்