இந்திய கிரிக்கெட் அணிக்காக  ஆடும் வீரர்களுக்கான ஒப்பந்தம் ஒவ்வொரு ஆண்டும் புதுப்பிக்கப்படும். இந்த நிலையில், நடப்பாண்டிற்கான ஒப்பந்தமும் புதுப்பிக்கப்பட்டு நேற்று அறிவிக்கப்பட்டது. இந்த ஒப்பந்தத்தின் கீழ் ஒவ்வொரு வீரர்களும் ஏ பிளஸ், ஏ பிரிவு, பி பிரிவு, சி பிரிவு வீரர்கள் என்று வகைப்படுத்தப்படுவார்கள்.


இதில், ஏ பிளஸ் வீரர்களுக்கு ஆண்டு ஊதியமாக 7 கோடி ரூபாயும், ஏ பிரிவு வீரர்களுக்கு ஆண்டு ஊதியமாக ரூபாய் 5 கோடியும், பி பிரிவு வீரர்களுக்கு ஆண்டு ஊதியமாக ரூபாய் 3 கோடியும், சி பிரிவு வீரர்களுக்கு ரூபாய் 1 கோடியும் ஊதியமாக வழங்கப்படும்.


ஒவ்வொரு பிரிவிலும் உள்ள வீரர்களின் பட்டியலை கீழே விரிவாக காணலாம்.


ஏ பிளஸ்:


மிகவும் உயர்ந்த பிரிவான ஏ பிளஸ் வீரர்களில் நான்கு பேர் மட்டுமே இடம்பெற்றுள்ளனர்.



  • ரோகித்சர்மா

  • விராட்கோலி

  • ஜஸ்பிரித் பும்ரா

  • ரவீந்திர ஜடேஜா


ஏ பிரிவு:



  • ஹர்திக் பாண்ட்யா

  • அஸ்வின்

  • முகமது ஷமி

  • ரிஷப்பண்ட்

  • அக்‌ஷர் படேல்


பி பிரிவு:



  • புஜாரா

  • கே.எல்.ராகுல்

  • ஸ்ரேயாஸ் ஐயர்

  • முகமது சிராஜ்

  • சூர்யகுமார்யாதவ்

  • சுப்மன்கில்


சி பிரிவு



  • உமேஷ் யாதவ்

  • ஷிகர்தவான்

  • ஷர்துல் தாக்கூர்

  • இஷான்கிஷான்

  • தீபக்ஹூடா

  • யுஸ்வேந்திர சாஹல்

  • குல்தீப்யாதவ்

  • வாஷிங்டன் சுந்தர்

  • சஞ்சு சாம்சன்

  • அர்ஷ்தீப்சிங்

  • கே.எஸ்.பரத்


இவர்கள் இந்திய அணிக்காக ஆடினாலும், ஆடாவிட்டாலும் ஆண்டுதோறும் இவர்களுக்கு அவர்களது பிரிவுக்கு ஏற்ப ஊதியம் வழங்கப்படும். ஏ பிளஸ் பட்டியலில் இடம்பெறுவதற்கு அனைத்து வித போட்டிகளும் ஆடும் வீரராக இருக்க வேண்டும் என்பது கூடுதல் விதியாகும். ஏதேனும் ஒரு பிரிவில் ஆடாவிட்டாலும் ஏ பிளஸ் வீரராக தகுதி உயர முடியாது.


ஜடேஜா, கே.எல்.ராகுல்


இந்த புதிய ஒப்பந்தத்தில் ஏராளமான மாற்றங்கள் அரங்கேறியுள்ளது. குறிப்பிடத்தக்க மாற்றம் என்னவென்றால், இந்திய அணியில் ஆல்ரவுண்டர் ஜடேஜா ஏ பிரிவில் இருந்து ஏ பிளஸ் வீரராக தரம் உயர்த்தப்பட்டுள்ளார். அவர் அந்த பிரிவுக்கு தகுதியானாவர் என்பதை ஏற்கனவே பலமுறை நிரூபித்துள்ளார்.


யாரும் எதிர்பாராத வகையில் இந்திய டெஸ்ட் அணிக்கு கேப்டன் பொறுப்பை வகித்த கே.எல்.ராகுல் ஏ பிரிவில் இருந்து பி பிரிவுக்கு தரம் குறைக்கப்பட்டுள்ளார். சமீபகாலமாக பேட்டிங்கில் சொதப்பி வரும் கே.எல்.ராகுலுக்கு வாய்ப்பு அளிக்கப்படுவது குறித்து ஏராளமான சர்ச்சைகள் எழும்பி வரும் நிலையில், அவர் தரம் குறைக்கப்பட்டு பி பிரிவுக்கு தள்ளப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. கே.எல்.ராகுல் மட்டுமின்றி ஷர்துல் தாக்கூரும் பிரிவில் இருந்து சி பிரிவுக்கு தரம் குறைக்கப்பட்டுள்ளார்.


ஹர்திக் பாண்ட்யா கிடுகிடு உயர்வு:


இந்திய டி20 அணிக்கு தலைமை தாங்கி வரும் ஹர்திக்பாண்ட்யா சி பிரிவில் இருந்து ஏ பிரிவு வீரராக தரம் உயர்த்தப்பட்டுள்ளார். ஒருநாள் உலகக்கோப்பைக்கு பிறகு இந்திய ஒருநாள் அணிக்கும் கேப்டனாக ஹர்திக் நியமிக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.மேலும், கே.எஸ்.பரத், இஷான்கிஷான், குல்தீப்யாதவ்,  சஞ்சுசாம்சன், அர்ஷ்தீப்சிங், தீபக்ஹூடா ஆகியோர் சி பிரிவில் புதியதாக சேர்க்கப்பட்டுள்ளனர். 


மேற்கண்ட பட்டியலில் இணைந்துள்ள வீரர்களுக்கு ஆண்டு ஊதியம் தவிர அவர்கள் விளையாடும் போட்டிகளுக்கு அதற்கேற்ப ஊதியம் வழங்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க: BCCI Contract: 'ஏ' பிளஸ் வீரராக தரம் உயர்த்தப்பட்ட ஜடேஜா.. 'பி' வீரராக தரம் தாழ்த்தப்பட்ட கே.எல்.ராகுல் - பி.சி.சி.ஐ. அதிரடி


மேலும் படிக்க: CSK Match Tickets: 3 வருட காத்திருப்பு.. நள்ளிரவு முதல் காத்திருந்த ரசிகர்கள்.. அரை மணி நேரத்தில் முடிந்த ஆன்லைன் டிக்கெட் விற்பனை..!